சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய - சன்குழுமம் !

சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகப் புரிந்து விட்டது. சன் தொலைக் காட்சி குழுமத்தின் அசுரமான ஊடக பலம்


கழக வளர்ச்சிக்கு கை கொடுக்கும் என்பது கனவானது. அது கட்சியை கபளிகரம் செய்யத் துடிக்கிறது என்பது நிருபணமாகி விட்டது.

கருத்து கணிப்பு என்பதாக தினகரன் திணித்து வந்த கருத்தாக் கங்கள், தமிழ் நாட்டில் தயாநிதியை தனிப்பெரும் தலைமை சக்தியாக

அடையாளப் படுத்த எடுக்கப்பட்ட சூட்சும திட்டங்கள் என்பது சுளீரென உரைத்தது கருணாநிதி க்கு!

காலங் கடந்து இதை கண்டுணர்ந்தார் கருணாநிதி.

எனினும், 'தன் காலம் முடிந்து போகும் முன்பே சுதாரித்து கொண்டார் தலைவர்' என்பது
கதிகலங்கிய கருணாநிதி - சன்குழுமம் ! 
தான் கழக உடன் பிறப்பு களிடம் மட்டுமல்ல குடும்ப உறவுகளிட மும் நிம்மதியை உருவாக்கியது.

தமிழ் நாட்டிலிருந்து மத்திய அமைச்சர் ஆனவர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என்ற

கருத்து கணிப்பில் தயாநிதி க்கு 66 மதிப்பெண்ணும், ப. சிதம்பரத் திற்கு 24 மதிப்பெண்ணும்,

அன்பு மணிக்கு அன்புமணிக்கு 2 மதிப்பெண்ணும் தந்து, கூட்டணி க்குள் குழப்பம் உண்டானாலும் பரவாயில்லை 

தம்பி தயாநிதி யின் தகுதியை முன் நிறுத்த வேண்டும் என்று கலகத்திற்கு தயாரானார் கலாநிதி.

தனக்கு தானே கிரிடம் சூட்டிக் கொள்வது என்பது ரத்தவழியாக தாத்தா கருணாநிதி யிடம் கண்டுணர்ந்த பால பாடம் அல்லவா?


ஆக, இன்னும் கூட புரிந்து கொள்ளதவர் களுக்கு இப்போதாவது உணர்த்த வேண்டாமா...?

இன்னும் எத்தனை காலம் தான் அன்புப் பிள்ளை ஸ்டாலினை தூக்கி, கக்கத்தில் இருத்தி,

'இவன் தான் அடுத்த வாரிசு' என அறிவிக்க முடியாமல் அறிவுறுத்திக் கொண்டிருப்பார். 

அவரோ பாவம் முப்பது வருட பயிற்சிக்குப் பின் கருணாநிதி யின் முழங்கால ளவுக்குத் தான் வளர்ந்திருக்கிறார்....

ஆனால் மூன்றே ஆண்டுகளில் தயாநிதி கருணாநி யின் கழுத்திற்கு மேல் வளர்ந்து விட்டார்.

இந்தியாவே போற்றும் இளம் அமைச்சர் தமிழ் நாட்டிற்கு தலைமை தாங்கக் கூடாதா...? என்று 'கார்பரேட் தாதா' கலாநிதி போட்ட
அவசர கணக்கில் உருவான கருத்து கணிப்பு எல்லா வற்றையும் அலங்கோல மாக்கி விட்டது.

கருணாநிதி யின் வாரிசாக மு.க ஸ்டாலினுக்கு 70 சதவிகித மும் மு.க அழகிரி,
வாரிசு போட்டி வந்தது எதனால்? - சன்குழுமம் !
கனிமொழிக்கு தலா 2 சதவிகிதமும், மற்றவர்கள் என்பதாக 20 சதவிகிதமும் வழங்கப் பட்டிருந்த

கருத்து கணிப்பில் அந்த மற்றவர்கள் என்ற பெயரில் மறைந்து கொண் டிருப்பது


 தயாநிதி மாறன் என்பதை தயக்கமின்றி புரிந்து கொண்டார் கருணாநிதி.

இந்தப் பின்ணணி யில் தான் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு பத்திரிகை களை எரித்து,

பஸ்களை உடைத்து செயல் படும் செய்தி காலை 9.30 - க்கே மணிக்கே கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்பும்,

காவல் துறைக்கு தலைமை தாங்கும் அமைச்சரான அவர், காவல் துறையி னருக்கு

நிலைமை களை கட்டுப் படுத்தும் கட்டளை களை பிறப்பிக்க வில்லை,

பிறகு 11 மணியளவில் தான் தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப் பட்டு, மூவர் மூச்சு திணறி இறந்தனர்.

கருணாநிதி உயிரோடு இருக்கும் போது அவரது அடுத்த வாரிசு குறித்த விவாதத்தை 'தினகரன்' மக்களிடம் நடத்தியது.

அவரது நீண்ட ஆயுளை வேண்டி அவரது மனைவியும், துணைவியும் நித்த நித்தமும் பல பூஜை புனஸ்காரங்கள்,

யாகங்கள், வேள்விகள் நடத்தி கொண்டி ருக்கும் சூழலில் குடும்பத்தி னரிடம் கோப உணர்வே மேலோங்கியது.

இந்த சூழலில் தான் மதுரையில் அழகிரி ஆதர வாளர்கள் ஆவேசம் கொண்டு

நர்த்தன மாடியதை அமைதியாக வேடிக்கை பார்த்தது காவல் துறை.
பிரகாசிக்க முடியாத 'சன்' - சன்குழுமம் !  
மதுரையில் கலவரம் ஆரம்பித்த வுடன் முதல்வர் கருணாநிதி அழகிரியை

தொடர்பு கொண்டு பேசினார் என்றும் பத்திரிக்கை களில் செய்தி அடிப்பட்டது.

இதற்கு பிறகு தான் மீண்டும் தினகரன் அலுவலக த்திற்கு திரும்பிய தி.மு.க வினர் தீ வைத்தனர்.


கலவரம் திசை மாறி போனது. ஆக காவல் துறையின ரிடமும், அழகிரி யிடமும் முதல்வர் தொடர்பு கொண்டபிறகே விபரிதங்கள் நடந்தேறின.

இதனால் தான் அவ்வளவு அத்து மீறல்களுக்கு பிறகும் அவமானப்பட ஏதுமின்றி அழகிரியை சிறப்பு பாதுகாப்புடன்

சென்னைக்கு வர வழைத்ததும், முதல்நாள் பிரதமர் நிகழ்ச்சியில் பிரதானமாக முன் வரிசையில் அமர வைத்ததும்,

அடுத்த நாள் சட்ட மன்றத்திற் குள்ளேயே, அழகிரி சகஜமாக வந்து சென்றதும்,

நடைப் பட்டு கொண்டிருப்பது சன், தினகரன் குழுமத்திற்கும், அழகிரிக்கு மான பிரச்சினையல்ல.

இது கட்சி தலைவரான கருணாநிதி க்கும், ஊடக செல்வாக்கில் ஓங்கிநிற்கும்

சன், தினகரன் குடும்பத்திற் குமான பிரச்சினை என்பதே பிரதியட்ச உண்மையாக வெளிப்பட்டது.

கருணாநிதி யின் கசப்புணர்வை புரிந்து கொள்ள வேண்டு மெனில் மாறன் குடும்பத்தின் பின்னணி, சன், தினகரன் குடும்பத்தின்

அசுர பலத்திற்கு அச்சாணி யாக விளங்கிய கருணாநிதி யின் அரசியல் பலம்

போன்றவை களை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நியாயங் களை புரிந்து கொள்ளலாம்.

மணம் வீசாத பூமாலை

1989-ஆம் ஆண்டு- 13வருட வனவாச த்திற்கு பிறகு மீண்டும் தி.மு.க அரியனை ஏறிய-
சன் குழுமத்தில் எப்போது முதல் இந்தப் பிளவு ஏற்பட்டது? - சன்குழுமம் !
அந்த காலக் கட்டத்தில் தான் 'பூமாலை' என்ற வீடியோ இதழை விற்பனைக்கு கொண்டு வந்தனர் மாறன் சகோதரர்கள்.

இதற்கு முன்பு ஏக்நாத் என்பவரின் திரைபட செய்திகளை கூறும் வீடியோ இதழ் ஒன்று விற்பனையில் இருந்தது.


பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம்,

முத்தாரம், வண்ணத் திரையில் பணியாற்றிய பத்திரிக்கை யாளர்களையே சம்பள மில்லாத

செய்தி யாளர்களாக, பேட்டியாளர் களாக பயன்படுத்திக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்.

வீடியோ கடைகள் மற்றும் நூலகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை.

ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ நூலகத்தினர், 'வில்லங்கத்தில் மாட்ட நேரிடும்,

ரெய்டு நடத்தி ஆபாச கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக் கூடும் ' என எச்சரிக்கப் பட்ட சம்பவங்க ளெல்லாம் நடந்தேறியது.

1991 ல் கருணாநிதி அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மாறன் சகோதரர்கள் மௌனமானர்கள்.

மணம் வீசாத, யாரும் விரும்பிச் சூடாத இந்த பூமாலை பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக, மண்ணோடு மண்ணானது.


காமாலைப் போல் கண்களை உறுத்திய - கலை நேர்த்தியற்ற - பூமாலை இதழ் உதிர்ந்தது கண்டு உள்ளப் படியே உள்ளம் மகிழ்ந்தனர் வீடியோ கடைக் காரர்கள்.

அதன் பிறகு ஈராண்டுக் காலம் இருக்கும் இடம் தெரியாமல்,

செய்யக் கூடியத் தொழில் இன்ன தென்று தெளி வில்லாமல் மாறன் சகோதரர்கள் சும்மா யிருந்தனர்.
Tags: