பிரகாசிக்க முடியாத சன்... சன்குழுமம் !

0
நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத விளம்பரத்தாரர்கள் பொருட் படுத்தாத அந்த நேரம் தூர்தர்ஷன் மட்டுமே தூள் கிளப்பிக் கொண்டிருந்தது.
பிரகாசிக்க முடியாத சன்... சன்குழுமம் !
மாறன் சகோதர் களுக்கு படைப்பற்றல் கிடையாது. 
நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வை யாளர்களை கவர முடிய வில்லை

எவ்வளவோ அனுகூலங்கள் அமைந்தும் முதலிரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி நஷ்டப் பட்டது சன் தொலைக் காட்சி.

அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி

மீண்டும் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். உதய சூரியனின் அதிகாரச் சுடர் சன் தொலைக் காட்சியின் சாம்ராஜ்ஜி யத்திற்கு வழிகோலியது.
சன் தொலைக் காட்சியின் தொடக்கம் - சன்குழுமம் !
அப்போதைய தூர்தர்ஷன் இயக்குநரா யிருந்த நடராஜன் கருணாநிதி க்கு உதவியாக பல கைங்கரியங் களைச் செய்து அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிக ளை அவலத்திற்கு ஆளாக்கினார்.

மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு மாறன் மகன்களுக்கு மதியூகியாகச் செயல் பட்டார். அப்போது ஒவ்வொரு பண்டிகை நாளிலும் தூர்தர்ஷன் ஒளிபரப்பில் சிக்கல் வரும்.

பார்வை யாளர்கள் வீட்டிலிருந்த படியே தொலைப்பேசி வழியாக பங்கேற்கும் பல பிரபல நிகழ்ச்சிகளின் போது தொலைப்பேசி வயர்கள் துண்டிக்கப்படும்.

இப்படியாக சன் தொலைக்காட்சி பக்கம் மக்களை திருப்ப பல சதி திட்டங்கள் அரங்கேறின. தூர்தர்ஷன் விளம்பரதாரர்களுக்கு தூண்டில் விரிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரமும் பல அனுகூலங்களை தந்தது.

மத்தியில் வாஜ்பாய் அமைச்ச ரவையில் மாறனுக்கு தொழில், வர்த்தகத் துறை கிடைத்ததும் சன் தொலைக் காட்சிக்கு யோகம் அடித்தது.

அப்பாவின் அதிகாரப் பலத்தால் மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தது. சன் தொலைக் காட்சிக்கு! மளமளவென்று வெவ்வெறு மொழிகளில் சேனல்களைத் துவங்கினர்.
2000
ஆவது ஆண்டில் தி.மு,க ஆட்சியி லிருக்கும் போது, சுமங்கலி கேபிள் விஷன் என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதி மாறன் ஆரம்பித்தார்.

அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொர் க்கின் 60 சதவிகித்தை 'ஹாத்வே' என்ற வட இந்திய நிறுவனம் தன்வசப் படுத்தி யிருந்தது. 40 சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது.

தயாநிதி மாறன் தடாலடியாக சென்னை கேபிள் ஆபரேட்டர் களை அழைத்து சொந்த முயற்சிகளை, ஒளிபரப்பு களை அப்படியே கைவிட்டு, சுமங்கலி கேபிள் விஷனின் கமிஷன் ஏஜென்டாகும் படி நிர்பந்தித்தார்.

மறுத்த கேபிள் ஆபரேட்ட்ர்கள் மிரட்டப் பட்டனர். சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்த தொல்லைகள் அவர்களை மண்டியிடச் செய்தன மாறன் சகோதரர்களிடம்!

'ஹாத்வே'யின் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப் பட்டன. இந்நிறுவனம் பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்து விட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது.
வாரிசு போட்டி வந்தது எதனால்? - சன்குழுமம் !
மறுபுறம் தயாநிதி தந்த நெருக்கடி களால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆபரேட்டர்களில் 90 சதவிகிதத் தினர் எஸ்.சி.வி வசம் மாறினர்.

இந்தியாவில் வேறெங்கும் இல்லை

இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த நகரத்திலுமே இது போல் ஒட்டு மொத்த கேபிள் ஆபரேட்டர் களும் ஓரே குடையின் கீழ் சென்றதில்லை.

குறைந்தது மூன்று,நான்கு நிறுவனங் களாவது ஒவ்வொரு நகரத்தி லும் செயல் பட்டன. ஆனால் தனது அதிகார பலத்தால் போட்டி யாளர்களை அழித்தொழி க்கும் வேலையை அசராமல் செய்தது சன் குழுமம்.
தமிழக த்தின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இன்று எஸ்.சி.வி யை எதிர்க்கவே ஆளில்லை. இதனால் தான் தமிழன் தொலைக் காட்சி, விண் தொலைக் காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என்.

நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள் தரக்குறைவான அலை வரிசைகளில் ஒளிப்பரப்பட்டு ஓரம் கட்டப் பட்டன. கேரளாவில் பிரபலமான 'ஏசியாநெட்' தொலைக்காட்சி தமிழில் 'பாரதி' தொலைக் காட்சியைத் தொடங்கி

பற்பல தொல்லைக் களுக்காளாகி சன் குழுமத்தால் சவக்குழி க்குள் தள்ளப் பட்டது. இந்தியா டுடே குழுமத்தி லிருந்து வெளிவரும் 'ஆஜ்தக்' சேனலை தமிழ் நாட்டிற்குள் ஒளிப்பரப்ப மறுத்து வந்தார் கலாநிதி மாறன்.

கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வட இந்தியாவில் ஒளிப்பரப்பி மாறன் சகோதரர் களின் மனதில் இடம் பிடித்தது 'ஆஜ்தக்'. இதனால் உடனே 'ஆஜ்தக்' சேனல் தமிழ் நாட்டில் ஒளிப்பரப்ப ஒப்பந்த மானது .

இதற்கு பிரதியு பகாரமாக இந்திய முதலமைச் சர்களின் நிர்வாகத்திறமை வரிசையில் ஜெயலலிதா ஆகக்கடைசி யில் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துகணிப்பு வெளியிட்டது இந்தியா டுடே.

இப்படியாக கேபிள் வலைப்பின்னல் மூலமாக தாங்கள் விரும்புவதை மட்டுமே- தங்கள் நலன்களுக்கு அனுகூல மானதை மட்டுமே -மக்கள் பார்வைக்கு கொண்டுச் செல்லும் சர்வாதிகாரம் மாறன் சகோதரர்கள் வசம் போனது.

வியாபார த்தில் கிடைத்த வெற்றி அரசியல் ஆசைக்கு அடித்தள மிட்டது. இந்த நிலையில் தான் தாத்தா கருணாநிதி யிடம் முரசொலி மாறனுக்குப் பிறகான ஒரு அரசியல் முக்கியத்துவம் கருதி கலாநிதியும், தயாநிதியும் காய் நகர்த்தி னார்கள்.

அரசியல் அதிகாரம் என்பது வியாபார எதிரிகளை வீழ்த்துவதற்கு எவ்வளவு உறுதுணை யானது என்பதை அவர்கள் அனுபவ பூர்வமாக அறிந்தி ருந்தனர்.
அப்பாவின் அதிகார பலத்தால் தானே முதலில் டிரான்ஸ் பாண்டரும், பிறகு மிக சுலபமாக வெளி நாடுகளிலிருந்து கருவிகளை 

இறக்குமதிச் செய்யும் TRAI லைசென்சும், இந்தியாவி லிருந்து நிகழ்ச்சி களை ஒளிப்பரப்புவ தற்கான WPC கிளியரன்ஸும் கிடைத்தது.

ஆனால் ஜெ.ஜெ. தொலைக் காட்சியினர் இது போன்ற முயற்சிகளில் ஈடுப்பட்டு முடியாமல் போய், வழக்கம் போல் அத்துமீறி செயல்பட முயன்ற போது அன்னிய செலவானி மோசடியில் அகப்பட்டு அடங்கிப் போனர்கள்.
கதிகலங்கிய கருணாநிதி - சன்குழுமம் ! 
கருணாநிதி யின் உடன் பிறந்த அக்கா சண்முக சுந்தரத்தம் மாளின் மகன் தான் முரசொலி மாறன். 1967ல் தி மு க சட்ட மன்றத்தில் பெரும் பான்மை பெற்று ஆட்சிக்கு வர நேரிட்ட போது

முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டி பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை அறிஞர் அண்ணா ராஜூனாமா செய்த போது, அந்த சீட்டை அண்ணா விடம் மன்றாடி மாறனுக்கு பெற்ற தந்தவரல்லவா கலைஞர்.

அந்த கலைஞர் இன்று கழகத் தலைவர். மாறனுக்கு தந்த முக்கியத் துவத்தை மகனும் கேட்டுப் பெற்றால் என்ன? என்று குடும்பத்தினர் தந்த தைரியத்தில் தயாநிதியும் தயாரானார்.
ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா, ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிருந்து வந்தவர்.

ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும், உயிரும் தந்து உழைத்த உடன் பிறப்புகள் ஆயிர மாயிரமாய் இருக்க, அவர்களிலும் அறிவிற் சிறந்த. அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, H.F.O எனப்படும் இரவு நேர விடுதி நடத்தி

கேளிக்கை களில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனை அவரது குடும்பத்தினர் அரசியலுக்கு ஆயத்தப் படுத்தினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)