விதைப்பை வலிக்கிறதா? சுருங்கியும் இருக்கிறதா? இதை படிங்க !

ஆண்களுக்கு வரும் ஒரு சில பிரச்சனைகளை இவர்கள் முதலில் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். 
விதைப்பை வலிக்கிறதா?
பெண்கள் மருத்துவரிடம் தங்களது அந்தரங்க பிரச்சனை களை விளக்கி சொல்வது போல ஆண்கள் சொல்வதில்லையாம். தங்களது பிரச்சனைகளை சொல்ல தயக்கம் காட்டு கிறார்களாம்.
ஆண்களின் அந்தரங்க பகுதிகளில் வரும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த விதை பையில் வலி உண்டாவது மற்றும் விதைப்பை சுறுக்கம் போன்ற பிரச்சனை களாகும். 

இது போன்று விதைப்பையில் வலி மற்றும் சுருக்கம் இருந்தால் இதனை எப்படி சரி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

வெரிகோசல் கட்டி

நீங்கள் எழுந்து நிற்கும் போது உங்கள் விதைப்பையானது பாரமாகவும், உட்கார்ந்திருந்தால் தான் நன்றாக உள்ளது என்பது போல் உணர்கிறீர்களா ? 
அப்படி யெனில் உங்களின் விதை பையில் உள்ள இரத்த நாளங்களானது பருத்து ஆங்காங்கு நரம்பு முடிச்சுக்கள் அதிகம் உள்ளது என்று அர்த்தம். 

இப்படி விதை பையில் முடிச்சுக்களானது அதிகரித்தால், வலியானது அதிகரித்து, கஷ்டமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

விரைச்சிரை திருகுதல்
விரைச்சிரை திருகுதல்
சில நேரங்களில் அலறும் வண்ணம் வலி யானது எடுத்தால், அதற்கு காரணம் விந்து தண்டானது திருகி யிருந்தாலோ 

அல்லது விதை பைக்கு செல்ல வேண்டிய இரத்தமானது தடைப் பட்டிருந்தா லோ தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். 

இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்கா விட்டால், உங்களின் ஒரு விதையை இழக்கக் கூடும்.

விரைமேல் நாள அழற்சி

உங்களின் விதை பையில் உள்ள விரைமேல் நாளங்களானது பாக்டீரியா அல்லது வைரஸினால் தாக்கப் பட்டிருந்தால், அவ்விடத்தில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலியை ஏற்படுத்தும். 

பொதுவாக இந்த நிலையானது பால்வினை நோய்கள் அல்லது சிறுநீர் சார்ந்த தொற்றுக்களினால் ஏற்படும்.

விரைச்சிரை

சிதைவு விதை பையின் மேல் ஏதேனும் அடிபட்டால், அப்போது காயத்துடன், இரத்தக் கசிவு ஏற்படும். 
சுருங்கியும் இருக்கிறதா?
ஆனால் அதுவே கடுமையான அடியாக இருந்தால், விரைச் சிரையானது சிதைவுபட்டு, கடுமையான வலியை ஏற்படுத்தும். 

எனவே எப்போதும் ஆண்கள் தங்களின் விதை பையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்பெர்மடோசீல்

ஸ்பெர்மடோசீல் என்பது நீர்க்கட்டியாகும். இந்த நீர்க்கட்டியானது விதைகளுக்கு பின்னால் உருவாகக் கூடியது. 
ஒரு வேளை இந்த நீர்க்கட்டியானது மிகவும் பெரியதானால், விதைப் பையானது பாரமாகி, வலியை ஏற்படுத்தும்.

கட்டி உருவாதல்

விதை பையில் கட்டிகள் உண்டான நிலையிலும் கூட இது போன்று வலி உண்டாகும். 
விதை பையில் கட்டி உருவாதல்
இது போன்று உங்களது விதை பையில் கட்டிகள் உண்டாகி யிருந்தால் இதனை அறுவை சிகிச்சை முறையில் கண்டிப்பாக நீக்க வேண்டியது அவசியமாகும். 

இதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். 

இந்த பிரச்சனை ஆரம்ப நிலையில் இருந்தால், இதனை சில வகை வலி நிவாரணிகள், நோய் பரவாமல் தடுக்கும் மருந்துகள் மூலமாக சரி செய்யலாம். 
இந்த பிரச்சனை சற்று அதிகரித்த நிலையில் இருந்தால், இது ஆண் மலட்டு தன்மையை உண்டாக்குமா? 

அதிக வலியை உண்டாக்க கூடியதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். பின் இதனை அறுவை சிகிச்சையின் வாயிலாக தான் சரி செய்ய முடியும்.
Tags:
Privacy and cookie settings