மத்திய அரசின் முடிவால் கேப் நிறுவனங்கள் ஆதிக்கம் சரியும் !

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற் காக, மிக நீண்ட ஆலோசனை க்கு பின், துணிச்சலான முடிவு ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.
ஆட்டோக்களை பின்னுக்கு தள்ளி விட்டு, ஓலா, உபேர் போன்ற கேப் (Cabs) நிறுவனங்கள் விஸ்வரூபம் எடுத்து கொண்டி ருக்கும் காலம் இது. 

குறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில், கேப் நிறுவனங்கள் தான் இன்று ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக் கின்றன.

நீங்கள் நின்று கொண்டி ருக்கும் இடத்திற்கே வாகனம் வந்து விடும், ஓரளவுக்கு கட்டுப் படியான கட்டணம் போன்ற முக்கியமான காரணங்க ளால் தான், ஓலா மற்றும் 
உபேர் போன்ற கேப் நிறுவனங்கள், இன்று விஸ்வரூப வளர்ச்சியை கண்டிருக்கின்றன. அதே சமயம் கேப்களில் நிலவி வரும் முக்கியமான பிரச்னை பாதுகாப்பு. 

ஆம், கேப்களில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கிறது என திட்ட வட்டமாக கூறி விட முடியாது. 

குறிப்பாக பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கிறதா? என்பது சந்தேகமே.இந்த சந்தேகத்தை உறுதி படுத்தும் வகையில் பல நிகழ்வுகள் அரங்கேறி யுள்ளன. 

தலைநகர் டெல்லியில், கடந்த சில ஆண்டு களுக்கு முன், உபேர் டிரைவர் ஒருவரால், 
இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி எடுத்தது அனைவரும் அறிந்தது தான்.

அந்த டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன.

இரவு நேரங்களில் தனியாக பயணிக்கும் பெண்களை மிரட்டி, பாலியல் ரீதியிலான கொடுமைகளை அவர் இழைத் திருந்தார். 

இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் பெண்களுக்கு அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதில் ஒரு பெண் தைரியமாக பொது வெளியில் உண்மை களை போட்டு உடைத்ததால், அந்த டிரைவர் கைது செய்யப் பட்டார். 

இந்த சம்பவத்தின் எதிரொலியால், கேப்களில் தனியாக பயணம் செய்ய பெண்கள் மத்தியில் அச்சம் உருவானது. 
எனவே கேப்களில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சக மானது, தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித் துள்ளது.

எம்-1 கேட்டகரியின் கீழ் வரும் போக்குவரத்து வாகனங்களில் உள்ள சைல்டு லாக்குகளை (Child locks) அகற்ற வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு. 

சைல்டு லாக்ஸ் என்பது, கூடுதல் பாதுகாப்பிற் காக வாகனங்களில் வழங்கப்படும் ஒரு வசதியாகும்.
ஒரு காரை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். காரின் பின் இருக்கைகளில் அமர்ந்திரு க்கும் குழந்தைகள், கவனக் குறைவாக 

பின் பக்க டோர்களை திறந்து விடுவதை தவிர்க்க சைல்டு லாக் வசதி உதவுகிறது. அதாவது உள்ளே இருந்து கதவுகளை திறக்க முடியாது. 

வெளியே இருந்து மட்டுமே கதவுகளை திறக்க முடியும். ஆனால் குழந்தை களின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப் பட்ட சைல்டு லாக் வசதியை, சிலர் தவறான செயல் களுக்கு பயன்படுத்து கின்றனர்.

குறிப்பாக உள்ளே இருந்தபடி கதவுகளை திறக்க முடியாது என்பதால், கேப்களில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அரங்கேற்றப் படுகின்றன.
கடந்த 2017 -ம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். கடந்த 2017ம் ஆண்டு, பெங்களூரு வில் கேப் ஒன்றில் பெண் ஒருவர் பயணித்து கொண்டிருந்தார்.

ஆனால் அந்த கேப்பின் டிரைவரால், அந்த பெண் பாலியல் ரீதியிலான துன்புறுத் தலுக்கு ஆளாக்கப் பட்டார். அந்த கேப்பின் டிரைவர் இதற்கு பயன்படுத்தியது சைல்டு லாக் வசதியை தான்.

இதன் காரணமாக உள்ளே இருந்து கதவை திறக்க முடியாததால், அந்த பெண் பாதிக்கப் பட்டார். எனவே தான் எம்-1 கேட்டகரி யின் கீழ் வரும் வாகனங்களில், சைல்டு லாக் வசதியை அகற்றும்படி, 

மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது.
இனி எம்-1 கேட்டகரி யின் கீழ் வரும் வாகனங்கள் எவை? என்பதை தெரிந்து கொள்வோம். 8 இருக்கை களுக்கு மேல் இடம் பெறாத வாகனங்கள் எல்லாம் எம்-1 கேட்டகரி யின் கீழ் வருகின்றன.

இவற்றில் டிரைவருக்கு தனியாக ஒரு இருக்கை இருக்கும் (8 சீட் + டிரைவர்). இத்தகைய வாகனங்கள் தான் பெரும்பாலும் கேப்களாக பயன்படுத் தப்பட்டு வருகின்றன.

எனவே தான் எம்-1 கேட்டகரி யின் கீழ் வரும் வாகனங்களில், சைல்டு லாக் வசதி இருக்க கூடாது என உத்தர விடப்பட் டுள்ளது. 
இந்த புதிய உத்தரவானது, வரும் 2019ம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. 

கேப்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, எம்-1 கேட்டகரி யின் கீழ் வரும் வாகனங்களில், சைல்டு லாக்கை நீக்குவது தொடர்பாக நீண்ட நாட்களாக ஆலோசிக் கப்பட்டு வந்தது.
இதன்பின் சைல்டு லாக்கை அகற்றுவது என தற்போது துணிந்து முடிவெடுக்கப் பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அதிரடியான உத்தரவின் காரணமாக, அத்துமீறி நடந்து கொள்ளும் 
ஒரு சில டிரைவர்கள், இனி நம்மை போன்ற பயணிக ளிடம் வாலாட்டவே முடியாது.

குறிப்பாக பெண்களு க்கு அதிகமான பாதுகாப்பு கிடைக்கும் என்பதால், இந்த உத்தரவிற்கு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது.
Tags: