ஹாஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள் தெரியுமா?

0
பெண்களின் கல்வியும், பணியும் இப்போது எல்லை கடந்ததாக இருக்கிறது. அவைகளில் அவர்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறி, வெளி இடங்களுக்கு சென்று தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 
ஆஸ்டல் நிர்வாகி



அதற்காக பெரும்பாலான பெண்கள் ஆஸ்டலை நாடுகிறார்கள். தாங்கள் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் தங்களுக்கு பிடித்தமான தொரு ஆஸ்டலை தேடுகிறார்கள். 

புதிய நகரங்களுக்கு வரும் அவர்கள், ஆஸ்டலை தேர்ந் தெடுக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டிய திருக்கிறது.

அப்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

* பொறுப்பான பெண் வார்டன் இருக் கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்கள் தாய்மை உணர்வு கொண்டவர்க ளாக இருக்க வேண்டியதும் அவசியம்.

* முக்கியமான இடத்தில், உங்களுக்கு பிடித்த சவுகரியங் களோடு இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம்.
அழிந்து போன பாரம்பரிய விளையாட்டுகள் தெரியுமா?
* ஆஸ்டல் நிர்வாகி யார், அவரைப் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். அவரது சமூக நிலை என்ன, அரசியல் பின்னணி கொண்டவரா, ஏதாவது குற்றச் செயல்களில் முன்பு தொடர் புடையவரா என்பது போன்ற விஷயங் களையும் சேகரிக்க முயற்சி செய்யுங்கள்.

* உணவின் தரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். முதலிலே சாப்பிட்டு பார்த்து, உங்களுக்கு அது ஒத்துப் போகிறதா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

* ஆஸ்டலின் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அது மனதுக்கு பிடித்த மானதாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் அமைய வேண்டும்.
மருத்துவ வசதி இருக்க வேண்டும்



* அருகில் கடைகள், மருத்துவ வசதி இருக்க வேண்டும்.

* ஆஸ்டலின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த ஆஸ்டல் பற்றி ஏதேனும் புகார் உள்ளதா என்றும் விசாரிக்க வேண்டும்.
இரவில் நடைப் பயிற்சி - என்ன நடக்கும் தெரியுமா?
டெல்லியில் உள்ள ஒரு பெண்கள் ஆஸ்டலில் நடந்த சம்பவம்: ஆஸ்டல் நிர்வாகி, பெண்கள் குளிக்கும் அறையில் கேமராவை மறைத்து வைத்து தன் அறையில் இருந்தபடி பெண்கள் குளிப்பதை கண்டு ரசித்துக் கொண்டிருந் திருக்கிறார். 

அதை தெரிந்து கொதித்துப் போன பெண்கள் அந்த நிர்வாகியை அடித்து உதைத்து விட்டார்கள். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

விடுதிகளில் தங்கும் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை தங்களுடன் வைத்துக் கொள்ளக் கூடாது. வைத்திருந்தால் அதை பாதுகாப்பதே அவர்களுக்கு பெரிய வேலையாகி விடும். 

விலை உயர்ந்த தங்க நகைகள் அணிய வேண்டியிருந்தால் அதை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். முக்கியமாக யாரையும் அதிகம் நம்பி விடக் கூடாது. 

புது இடத்தில் புதிய முகங்களை அறிமுக மில்லாத நபர்களை அதிகம் நம்புபவர்கள் தான் அதிகம் ஏமாறுகிறார்கள்.

அறையில் உங்களுடன் தங்கி யிருக்கும் பெண்களிடம் கூட எச்சரிக்கை உணர்வுடன் பழக வேண்டும். ஒருவர் செய்யும் தவறின் பழி மற்றவரையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. 
எச்சரிக்கை உணர்வுடன் பழக வேண்டும்



அதனால் நீங்கள் ஒழுக்க மானவர், நல்லவர் என்பதை முதலில் எல்லோரிடமும் செயல், பேச்சு மூலம் புரிய வைத்து விட வேண்டும். அப்படிப் பட்டவர்களிடம் மட்டுமே நீங்கள் நட்பும், நம்பிக்கையும் வைக்க வேண்டும். 
ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்க சித்த மருத்துவம் கூறும் வழிகள் என்ன?
அறிமுக மற்றவர்க ளிடம் உங்களை பற்றிய எந்த விஷய த்தையும் சொல்லக் கூடாது. எந்த ஊரில் உங்கள் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற தகவலையும் எல்லோரிடமும் சொல்ல வேண்டாம்.

இளம் பெண் தங்கியிருந்த ஆஸ்டலுக்கு நடுத்தர வயதான ஒருவர் வந்தார். அந்த பெண்ணுடைய சித்தப்பா விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து விட்டதாக கூறினார். 

அவரை குறிப்பிட்ட மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருப்ப தாகவும் சொன்னார். உடனே அவளும் பதறி யடித்துக் கொண்டு அவரோடு அந்த மருத்துவ மனைக்கு செல்ல முன் வந்தாள். 

உடனே ஆஸ்டல் நிர்வாகி, அந்தப் பெண்ணின் உதவிக்கு இரண்டு தோழிகளை யும் அனுப்பி வைத்தார்.

உடனே சுதாரித்துக் கொண்ட அந்த நபர், அவர்களை வெளியே அழைத்துச் சென்று, ஒரு பஸ்சில் அமர வைத்து விட்டு, அப்படியே நழுவிச் சென்று விட்டான். 
கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நடைபெறும் மாற்றங்கள் !
அவர்கள் குறிப்பிட்ட மருத்துவ மனைக்கு சென்று விசாரித்தபோது அங்கு தனது சித்தப்பா அனுமதிக்கப்பட வில்லை என்ற உண்மை தெரிந்தது. 

சித்தப்பா விற்கு போன் செய்த போது அவர் ஆரோக்கிய மாக சொந்த ஊரிலே இருந்து கொண்டிருக்கும் தகவல் தெரிந்தது. அந்த ஏமாற்றுக் காரன் எப்படி அவளது சித்தப்பா பெயரை தெரிந்து கொண்டான்? 

அவள், இந்த விடுதியில் தங்கி யிருப்பதும் எப்படி அவனுக்கு தெரிந்தது? என்பதெல்லாம் அவளுக்கு இப்போதும் பிடிபடாத ரகசிய மாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
தொலைபேசி எண்



ஆஸ்டலுக்கு பெண்ணை அனுப்பும் பெற்றோர்கள், அங்கு எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை முதலிலே மகளுக்கு நன்றாக புரிய வைக்க வேண்டும். 

என்ன தான் ஆஸ்டல் பாதுகாப்பான தாக இருந்தாலும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவர்களு க்குள் இருந்து கொண்டிருக்க வேண்டும். 

அங்கு தேவையற்ற நட்புகளையும் உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அறையில் உடன் தங்கி இருப்பவர் களின் நடவடிக்கை களை கவனியுங்கள். நேரத்தோடு இருப்பிடத்திற்கு சென்று விடவேண்டும். 

வீட்டைப் பற்றி அதிகம் கவலைப் பட்டு மனசு கலங்காமல் இருப்பது நல்லது. ஆஸ்டல் வாழ்க்கை தற்காலிக மானது தான். 
மன அழுத்த அதிகமானால் முது வலி உண்டாகும் !
அதனால் குடும்பத்தி னருடன் ஏற்படும் பிரிவை நினைத்து படிப்பிலோ, வேலையிலோ ஆர்வத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது. அறிமுக மில்லாத யாருக்கும் ஆஸ்டல் அட்ரஸ் தொலைபேசி எண்ணை தர வேண்டாம். 

அடிக்கடி குடும்பத்தி னருடன் பேசி, ஆஸ்டலில் நடக்கும் செய்திகளை தெரியப் படுத்துங்கள். அதே ஊரில் வசிக்கும் உறவினர் களின் வீட்டு முகவரி தொலைபேசி எண்களை கைவசம் வைத்திருங்கள்.

பாம்பின் காது..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)