எந்த மாநிலத்தில் அதிக சாலை விபத்துகள்? அதிர்ச்சி ரிப்போர்ட் !

0
கடந்த 2017-ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற சாலை விபத்துகளில் அதிகமானோர் உத்தர பிரதேசத்தில் உயிரிழந் திருப்பது தெரிய வந்துள்ளது. சாலையில் விபத்துகளை தடுக்க அரசும், போக்குவரத்து காவலர்களும் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர். 
எந்த மாநிலத்தில் அதிக சாலை விபத்துகள்?




இருப்பினும் பல்வேறு சமயங்களில் நடைபெறும் சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நேரிடுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 405 பேர் சாலை விபத்து சம்பவங்களால் உயிரிழக் கின்றனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 64 ஆயிரம் சாலை விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 1 லட்சத்து 48,000 பேர் உயிரிழந் துள்ளனர். இந்த சாலை விபத்துகளில் மொத்தமாக 4 லட்சத்து 70,000 பேர் காயம் அடைந்துள்ளனர். 

மற்ற சாலைகளை விட தேசிய நெடுஞ்சாலை களில் தான் அதிக விபத்து சம்பவங்கள் நடைபெறு கின்றன. 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட 86 சதவீதத்தினர் ஆண்கள். 
இவர்கள் 18 வயது முதல் 45 வயதுடைய ஆண்கள் ஆவார்கள். கடந்த 2017-ஆம் ஆண்டு நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளன. 

ஆனால் உயிரிழப்பை பொறுத்த வரை உத்தரப் பிரதேசத்தில் தான் அதிகம் பேர் உயிரிழந் துள்ளனர். அதாவது 2017-ஆம் ஆண்டு உத்தரப்பிரேதச சாலை விபத்துகளில் 20,124 பேர் உயிரிழந் துள்னர். 




அதற்கு அடுத்தப் படியாக தமிழ்நாட்டில் 16,157 பேரும், அடுத்ததாக மகாராஷ்டிரா வில் 12,264 பேரும், கர்நாடகாவில் 10,609 பேரும், ராஜஸ்தானில் 10,444 பேரும் உயிரிழந் துள்ளனர்.

அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், தவறான பாதையில் வாகனங் களை செலுத்துதல் போன்றவை சாலை விபத்திற்கு முக்கிய காரணங்க ளாக அமைகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)