ஆணுறுப்பு தோலை தவறான முறையில் நீக்கியதால் 5 மாத குழந்தை பலி !

0
நம்மை சுற்றி இருக்கும் உலகில் பல தேவையற்ற கற்பிதங்கள் உலாவி கொண்டு இருக்கின்றன. சில கற்பிதங்கள் பெரிய அளவில் நம்மை பாதிப்ப தில்லை. 
ஆணுறுப்பு தோல் தவறான முறையில் நீக்கல்
ஆனால், ஒரு சில கற்பிதங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறி விடுகின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப் படுவது பெண்கள் தான் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

ஆனால், இதை மீறிய சம்பவம் ஒன்று இங்கு நடந்துள்ளது. அதை கேட்டால் யாராக இருந்தாலும் கண்ணீரே விட்டு விடுவர். 

வெறும் 5 மாதமே நிரம்பிய ஒரு ஆண் குழந்தைக்கு ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கும் சடங்கில் தான் இந்த விபரீத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. எதனால் இது ஏற்பட்டது? 
இப்படி ஆணுறுப்பின் மேல் தோலை நீக்குவது சரிதானா? இதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்?... போன்ற பல தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சடங்கு!

பல இடங்களில் சடங்கு, பாரம்பரியம், பண்பாடு என்கிற பெயரில் பல்வேறு மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது பல பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது என்பது தான் இதில் வருத்தப்பட கூடிய விஷயமே.
சடங்கு
இதே போன்ற நிகழ்வு தான் இத்தாலியி லும் நடந்துள்ளது. வெறும் 5 மாத குழந்தைக்கு தான் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

5 மாத குழந்தை!

சில மதங்களில் ஆணுறுப்பை நீக்குவது மிக முக்கியமான சடங்காக கருதப்பட்டு வருகிறது. இப்படிப் பட்ட சடங்கை 5 மாத குழந்தைக்கு செய்த போது தான் மிக அபாயகர மான நிலை ஏற்பட்டுள்ளது.
5 மாத குழந்தை
குழந்தையின் உயிரையே இந்த சடங்கு காவு வாங்கி யுள்ளது. இதற்கான காரணம் தான் அதிர வைக்கும் வகையில் உள்ளது.

வீட்டிலே முயற்சி

பொதுவாக இது போன்ற அறுவை சிகிச்சை களை செய்வதற்கு மருத்து மனைகளையே நாடுவார்கள். 
வீட்டிலே முயற்சி
ஆனால், இந்த குழந்தையின் பெற்றோர் பணத்தை கருத்தில் கொண்டு வீட்டிலே, பொது சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை கொண்டு இந்த சடங்கை செய்துள்ளனர்.
மாரடைப்பு!

இந்த அறுவை சிகிச்சை தொடங்கிய சில மணி நேரங்களில் குழந்தைக்கு இதய துடிப்பு பாதித்து, மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டது. 
மாரடைப்பு
குழந்தை மயங்கிய நிலையில் உள்ளது என இந்த பெற்றோர்கள் நினைத்து கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பரிதாப பலி!

ஆனால், மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற உடன் குழந்தை எப்போதோ இறந்து விட்டதாக கூறி விட்டனர். 

இதை பற்றி மருத்துவர்கள் கூறுகையில், "இத்தாலியில் ஒரு வருடத்திற்கு 5000 ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கும் அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன. 
பரிதாப பலி
ஆனால், இதில் பாதிக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் முறையற்ற வகையில் நடந்து வருவதாக கூறுகின்றனர்.
முந்தைய பலி!

இது போன்ற ஒரு கொடூர நிகழ்வு தான் கடந்த டிசம்பர் மாதம் ரோமில் நடந்துள்ளது. இதுவும் முறையற்ற வகையில் வீட்டிலே செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தான்.
வீட்டிலே அறுவை சிகிச்சை
இரட்டை குழந்தை களுக்கு செய்யப்பட்ட ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கும் சடங்கில் ஒரு குழந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தது. 

மேலும், ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறதாம்.

பணம் தான் காரணமா?!

இது போன்ற நிகழ்வுகள் உலகெங்கும் நடக்க பணம் தான் முக்கிய காரணமாக உள்ளது என மக்கள் கருதுகின்றனர். 
பணம் தான் காரணம்
இத்தாலியில் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டு மென்றால் €4,000 ஆகுமாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சராசரியாக 3 லட்சம் ஆகுமாம்.

பொது சுகாதார மையம்
இது போன்ற அறுவை சிகிச்சைகளை பொது சுகாதார மையங்களின் மூலம் செய்தால் வெறும் €20 தான் ஆகுமாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 1500 ரூபாய் தான்.
பொது சுகாதார மையம்
இதனால் தான் மக்கள் அவரவர் வீட்டிலோ அல்லது பொது சுகாதார மைங்களிலோ இது போன்ற சடங்குகளை செய்து கொள்கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)