நியூட்ரினோ என்றால் என்ன? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016நியூட்ரினோ என்றால் என்ன?

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
இவ்வுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பொருள்கள் (Matter) எனலாம். இப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. ஒரு கால கட்டத்தில் அணுவே இவ்வுலகில் இருக்கும் இறுதித்துகள் என நம்பப்பட்டது. 
நியூட்ரினோ
'அணு' (Atom) என்பதற்கான விளக்கம் (லத்தீன மொழியில்) 'பிளக்க முடியாதது' என்பதாகும். இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான் (electron), புரோட்டான் (proton), நியூட்ரான் (neutron) ஆகியவை களால் ஆனவை எனக் கண்டறியப் பட்டது. 

இவைகளை அணுத் துகள்கள் (Atomic particles) எனக் கூறுவர். மேலும், புரோட்டானும் நியூட்ரானும் ஒன்று சேர்த்து இருக்கும் பகுதி அணுக்கரு (Nuclei) என சொல்கிறது அறிவியல். 

அணுவினுள் பல்வேறு உட்துகள்கள் (Subatomic particles) இருப்பதாகவும் பிறகு கண்டறியப் பட்டது. அணு உட்துகள்களை மூலத்துகள் (எதனாலும் உருவாக்கப் படாதவை) மற்றும் கலவைத் துகள்கள் எனப் பிரித்தனர்.
எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் (negative charge) உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் (positive charge) உள்ளது. 

நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும். முதலில் நியூட்ரினோ விற்கும் நியூற்றான் என்ற பெயரே இருந்தது. 

இரண்டையும் வேறு படுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றி யமைத்தனர். இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம் "A little neutral one" என்பதாகும்.
நியூட்ரினோ துகள்கள்
சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ. 

அது வானில் இருந்து இப்புவி நோக்கி பெரு மழையாக நம் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பொழிந்து கொண்டே தான் இருக்கிறது. 

நமது உடலின் ஒவ்வொரு சதுர சென்டி மீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக் கொண்டே இருக்கிறது. இதனைப் படித்துக் கொண்டிரு க்கும் போதே உங்கள் உடலில் பல கோடி நியூட்ரினோக்கள் உங்கள் உடலை ஊடுருவி இருக்கும்.
இயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களால் எவ்வித பாதகமும் இல்லை. அது எப்பொருளுட னும் எவ்வித வினையும் புரியாது. அது இவ்வுலகில் சிறு துரும்பைக் கூட ஒரு பொருட்டாக மதிக்காது. 

நமது கண்ணுக்கு எவ்விதம் அது புலப்படவே படாதோ அது போலத் தான் அதன் பாதையில் நமது மண்ணில் எப்பொருளுக்கும் அத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தக் கூடிய வல்லமை இல்லை என சொல்லலாம். 

இருக்கும் அணுத்துகள் களிலேயே மிக குறைந்த நிறை கொண்டதான இந்நியூட்ரினோ ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றது. இது வருவதும் தெரியாது போவதும் தெரியாது.
நியூட்ரினோ ஆய்வு மையம்
1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக் கொண்டிருந்த நியூட்ரினோவை (Atmospheric neutrino) உலகிலேயே முதன் முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக் கழகமும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக் கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர். 
அப்பொழுதி லிருந்தே இந்திய இயற்பியலாளர் களுக்கு நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது.

1989 இல் இருந்து அதற்கான திட்டமிடல் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்க ளால் காலம் இழுத்துக் கொண்டே சென்றது. 

2002 நியூட்ரினோ ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, இந்திய அணுசக்தி கழகமும் (Department of atomic energy) இத்திட்டத்தில் முழு வீச்சில் இறங்கியதை அடுத்து இந்திய துணைக் கண்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப் படுத்தப் பட்டது.
நியூட்ரினோ என்றால் என்ன? நியூட்ரினோ என்றால் என்ன? Reviewed by Fakrudeen Ali Ahamed on 9/21/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚