நெல்லையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை !

0
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் இந்தியாவு க்குள் பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் ஊடுருவல் சம்பவம் தொடர்பாக இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் உளவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஏராளமானவர்களை கைது செய்து வருகிறார்கள்.
நெல்லையில் தேசிய புலனாய்வு அதிகாரி சோதனை



கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற வெளிநாட்டு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டியதாக கோவையை சேர்ந்த 6-க்கும் மேற்பட்ட பயங்கரவாத ஆதரவாள ர்களை கைது செய்திருந்தனர்.
அவர்களது செல்போன் மற்றும் சமூக வலை தளங்களில் யார், யார்? தொடர்பு வைத்துள்ளார்கள் என்றும் பயங்கரவாத இயக்கங்க ளுக்கு பணம் ஏதேனும் சப்ளை செய்துள் ளார்களா? 

அல்லது மறைமுகமாக ஆட்களை அனுப்பி உதவி செய்கிறார் களா? என்று விசாரணை நடத்தி வந்தனர். இதில் சந்தேகப்படும் படியாக உள்ள பலரை கைது செய்தும் விசாரணை நடத்தி வந்தனர். 

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே தென்காசியை சேர்ந்த கோழிப் பண்ணை அதிபர் ஜல்லி மைதீன் என்ற அகமது சாலிக் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.

திருப்புவனம் ராமலிங்கம் கொலையில் கோழிப் பண்ணை அதிபருக்கு தொடர்பு இருப்பதா கவும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. 

மேலும் நெல்லை மேல பாளையத்தை சேர்ந்த முகமது இப்ராகிம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி னார்கள்.

அவர் மீது வளைகுடா நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு திரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப் பட்டது. 

இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று காலை 7 மணி அளவில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங் குழியை சேர்ந்த பெயிண்ட் கடை அதிபர் திவான் முஜிபுர் என்பவரது வீட்டிற்கு சென்றனர். 

பாதுகாப்பிற்காக தென்காசி மற்றும் வீரவநல்லூர் போலீசார் அங்கு குவிக்கப் பட்டனர். வீட்டில் நுழைந்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. 
செல்போனிலும் தொடர்பு கொண்டு பேச அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனை செய்தனர். கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் களில் பதிவு செய்யப் பட்டுள்ள தகவல்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
தேசிய புலனாய்வு அதிகாரி



திவான் முஜ்புரிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு, அவர் கூறிய பதில்களை பதிவு செய்தனர். அது போல அவரது வீட்டில் உள்ள மற்றவர்களிட மும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். 
திவான் முஜிபுர் வளாகுடா நாட்டில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில் தான் இந்தியா திரும்பி யுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த விசாரணை இன்று பகலிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளங்குழியை சேர்ந்த திவான் முஜிபுரின் உறவினரான புளியங்குடியை சேர்ந்த மைதீன் என்பவர் புளியங்குடியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். 

தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் மற்றொரு பிரிவினர் இன்று புளியங்குடிக்கு சென்று அங்குள்ள மைதீன் வீட்டிலும் அவரது பெயிண்ட் கடையிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அங்குள்ள ஆவணங்கள், கம்ப்யூட்டர், செல்போன்கள் போன்ற வற்றையும் ஆய்வு செய்து வருகிறார்கள். வீட்டில் உள்ளவர் களிடமும் கடையில் வேலை பார்ப்பவ ர்களிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதை யொட்டி புளியங்குடியி லும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லாதபடி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இன்று பகலிலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து விசாரணை செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)