கலெக்டர் அலுவலகம் அருகே கல்லூரி மாணவர்கள் மோதல் !

0
சென்னை அரும்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் கல்லூரி மாணவர் களுக்கு இடையே ‘ரூட் தல’ தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் சில மாணவர்கள் பட்டா கத்தியுடன் பஸ்சில் பயணம் செய்த, வேறு சில மாணவர்களை கண்மூடித் தனமாக தாக்கினர். 
கல்லூரி மாணவர்கள் மோதல்




இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை யடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 

இதைத் தொடர்ந்து ‘ரூட் தல’ மாணவர் களின் அடாவடி செயல்களை தடுத்து நிறுத்த, போலீஸ் உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதை யடுத்து ‘ரூட் தல’ மாணவர்கள் அனைவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணைக்கு பின் மாணவர்கள் அனைவரும், ‘இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் இனி ஈடுபட மாட்டோம்’ என உறுதி மொழி எடுத்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு மாணவர் களிடையே அமைதி நிலவிய நிலையில், நேற்று திடீரென பூகம்பம் வெடித்தது. நேற்று மாலை சென்னை ராஜாஜி சாலை, கலெக்டர் அலுவலகம் அருகில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களுடன் வலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற மாணவர்கள் கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். 

அங்கு சுற்றித் திரிந்த மாணவர்களை கண்ட, அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

விரைந்து வந்த எழும்பூர் ரெயில்வே போலீசார் கடற்கரை ரெயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த 9 மாணவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை யில், மோதலில் ஈடுபட்டவர்கள், மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும், மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் ஒரு கோஷ்டி, தங்களுக்குள் வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கி அதில், மற்றொரு கோஷ்டி மாணவர்களை தாக்குவதற் காக தகவலை பரிமாறிக் கொண்டது தெரிய வந்தது. 




இதில் 2 கோஷ்டி மாணவர் களிடையே இருந்த முன் விரோதம், நேற்று பொது இடத்தில் மோதலாக வெடித்ததும் தெரியவந்தது.

இதை யடுத்து பொது மக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக, அந்த 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கல்லூரி மாணவர் களிடையே போலீசார், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடக்கூடாது என அவ்வபோது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

இருந்தாலும் மாணவர்கள் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடுவது வாடிக்கை யாக உள்ளது. போலீசாரும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, 

ஒவ்வொரு முறையும் அறிவுரை கூறி அனுப்புவதை தங்களுக்கு சாதகமாக கொண்டு மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)