மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
வங்காளம், அசாம் மற்றும் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும். 

அவர்கள் அதிகளவு மீன் உணவுகளை நேசிப்பதை நாம் சில சமயங்களில் வேடிக்கையாக பார்த்திருக்கலாம், இல்லை கேலி கூட செய்திருக்கலாம். 

ஆனால் மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவது முக்கியமானது. முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. 
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
மேலும் இந்த சத்தானது மற்ற உணவுப் பொருட்களை விட, மீனில் தான் வளமாக உள்ளது.  அத்தகைய மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவை பல்வேறு கடுமையான நோய்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும்.

ஆய்வுகள் பலவற்றிலும், மீனை உட்கொண்டு வந்தால், அவை இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் என்று சொல்கிறது.  
இங்கு மீனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து, இனிமேல் வாரம் ஒரு முறை தவறாமல் மீன் சாப்பிட்டு வாருங்கள்.

வைட்டமின் டி நிறைந்தது
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. 

மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எனவே தினசரி உணவில் ஏதேனும் ஒரு வகை மீனை சேர்த்து கொள்ளுங்கள்.

இதயத்திற்கு நல்லது
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. 

கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக அன்றாடம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம். 

மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், மீன் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பொலிவான சருமம் 
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
மீன் சாப்பிட்டால் உடலில் உள்ள பிரச்சனைகள் குறைவது மட்டுமின்றி, அந்த பிரச்சனைகளால் பொலிவிழந்து காணப்பட்ட சருமமும் பொலிவோடு காணப்படும்.

மூளை மற்றும் கண்கள் 
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மூளைச் செல்கள் மற்றும் ரெட்டினாவின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக உள்ளது. எனவே மீன் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று சொல்கின்றனர்.

நல்ல கொழுப்பு சத்து நிறைந்தது
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
மற்ற உணவுகளை போல் இல்லாமல் கொழுப்பு வகை மீன்களான சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவை உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. 

முக்கியமாக ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது.

புற்றுநோய் 
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலில் சீரான அளவில் இருந்தால், பல்வேறு புற்றுநோய்களின் தாக்கத்தை 30-50 சதவீதம் குறைக்கிறது. 

அதிலும் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றின் தாக்கம் குறையும்.

ஆர்த்ரிடிஸ் 
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
வலியுடைய மூட்டு வீக்கம் உள்ளவர்கள், மீனை உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்

மன சோர்வை குறைக்க உதவும்
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
சிலருக்கு காரணமின்றி மனசோர்வு ஏற்படும், அப்பொழுது மீன் சாப்பிடுவதனால் மனசோர்வு குறைகிறது மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் டிஹெச்ஏ முதல் வைட்டமின் டி வரை, மீன்களின் அனைத்து கூறுகளும் மனநலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவும். 

மீன் ஒரு இயற்கையான மன அழுத்த எதிர்ப்பு, மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களை தடுக்க உதவுகிறது.

குறைப்பிரசவம் 
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் மீன் சாப்பிடக் கூடாது. அதற்காக அவற்றை சாப்பிடாமலும் இருக்கக் கூடாது. 

மாதம் ஒரு முறை அளவாக கர்ப்பிணிகள் மீன் சாப்பிட்டு வந்தால், குறைப்பிரசவம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு 
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
நீங்கள் தவறாமல் மீன் சாப்பிடுவதால் நீரிழிவு நோய், முடக்கு வாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக் குறைவாகவே காணப்படும். சாதாரணமாக மூட்டுகளில் ஏற்படும் நாள்பட்ட வீக்கத்தின் காரணமாகத் தான் முடக்கு வாதம் ஏற்படுகிறது. 

இந்த முடக்கு வாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க வேண்டும் என்றால் உணவில் மீனை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

மீன்கள் பல முக்கிய ஊட்டச் சத்துக்களின் ஒரே ஒரு மூலமாகும். இது உங்கள் உடலில் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கிறது. மேலும் அனைத்து வகையான பெரிய நோய்களுக்கும் எதிராக போராட உதவுகிறது.

கெட்ட கொழுப்புகளை குறைக்கும்
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிக அளவில் உள்ளதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.

கெட்ட கொழுப்புகளை குறைப்பது மட்டுமின்றி கெட்ட கொழுப்புக்கள் சேர்வதையும் தடுக்கிறது. எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
Tags: