4 கி.மீ நடை, 2 கி.மீ சைக்கிளிங்... 87 வயதில் துறையூர் தாத்தா ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

4 கி.மீ நடை, 2 கி.மீ சைக்கிளிங்... 87 வயதில் துறையூர் தாத்தா !

Subscribe via Email

முதுமை, வாழ்வில் வரமா, சாபமா என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது. முதுமை யடைந்தவர்கள் அன்றாட வாழ்வை நகர்த்தத் திண்டாடுவது கண்டு நடுத்தரவயதில் இருப்பவர் களுக்கு உள்ளூர ஒரு பயம் எழுகிறது.ஆனால், வாழ்க்கையை யும் அதில் வரும் முதுமையையும் எதிர் கொள்வ தென்பது தனிப்பட்ட பார்வையிலேயே இருக்கிறது.

இளம் வயதிலேயே முதுமையின் சாயலைச் சுமக்கும் இன்றைய தலைமுறைக்கு, வியப்பூட்டும் வகையில் தன் முதுமைக் காலத்தை ஆரோக்கி யமாக எதிர் கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் துறையூர் வடிவேல் தாத்தா.

தினமும் காலை ஆறுமணிக்குச் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, வடிவேல் தன் சைக்கிளில் ஜமிந்தார் பள்ளி மைதானத்து க்கு வந்து விடுகிறார்.
பள்ளி கூடத்துக்கு படிக்க வந்த பாம்பு - பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை !
அதன் பின் மைதானத்தில் ஓட்டம், சிறுசிறு உடற்பயிற்சி என்று இளைஞர்கள் நின்று திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் புத்துணர்ச் சியோடு பயிற்சி செய்கிறார் வடிவேல்.

பார்வைக்கு எழுபது வயது மதிப்பிடத்த க்கவராக இருந்த வடிவேல் தாத்தாவை நெருங்கிப் பேசினோம். "தம்பி, என் பெயர் வடிவேல், வயசு எண்பத்து ஏழு" என்று சொல்லி ஆச்சர்யப் படுத்தினார். மேலும் அவர் குறித்துக் கேட்டோம்.

"நான் எக்ஸ் -மிலிட்டரி. 1956 ல ஆர்மில சேர்ந்தேன். சரியா நாலரை வருஷம் சர்வீஸ். அப்போ நான் இருந்த பட்டாலியன் காங்கோ நாட்டுக்குப் போச்சு. உடனே நான் என் மேஜர்கிட்ட பேசி, சில சொந்தக் காரணங்களு க்காக ஆர்மிய விட்டு வந்துட்டேன்.
ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்தலாமா?
அப்புறம் கோயம் புத்தூர்ல உடற்கல்வி ஆசிரியர் பயிற்சில சேர்ந்து படிச்சு முடிச்சேன். இங்க தான் செங்குந்தர் ஸ்கூல்ல பி.யி.டி (P.E.T) டீச்சரா வேலை பார்த்து ரிட்டையர்டு ஆனேன். அதனால் எப்போதும் உடற் பயிற்சியும், விளையாட்டும் தான் என் வாழ்க்கை.
எனக்கு இப்பவரை உடம்புல ஒரு பிரச்னை இல்லை, சாப்பாட்டுலயும் ஒரு தடை இல்லை, சின்ன வயசுல எப்படிச் சாப்பிட்டனோ அதே போல இப்பவும் சாப்பிடறேன். இதுக்கெல்லாம் காரணம் உடல்நலமும் மன நலமும்தான்.
தினமும் நாள் தவறாம காலையில ஆறு மணிகெல்லாம் மைதானத்துக்கு வந்துருவேன். சைக்கிள் ஓட்டிக்கிட்டு தான் வருவேன். வீட்ல இருந்த வந்து போக மொத்தம் 2 கி.மீ. இங்க ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். தவறாமல் தினமும் குறைந்த பட்சம் 4 கி.மீ ஓடிருவேன்.

இதெல்லாம் முடிஞ்சபிறகு என் நண்பர்கள் கூட ஜாலியா அரட்ட அடிச்சிட்டு, ஊர் விஷயம் உலக விஷயம்லாம் பேசுவோம். எங்க நண்பர்கள் வட்டம் ரொம்ப பெருசு. என் வயசு நண்பர்கள் யாரும் இப்ப இல்ல,

இப்ப இருக்க எல்லாரும் என்னை விட வயசுல சின்னவங்க தான். ஆனாலும் நல்லா ஜாலியா பேசிக்கிட்டு இருப்போம். அதெல்லாம் முடிச்சிட்டு பொறுமை யாகத்தான் வீட்டுக்குப் போவேன்.இப்போ இருக்கிற இளைய தலைமுறைய பார்த்த ரொம்பக் கவலையா இருக்கு. மொபைலே வாழ்க்கைங்கிற மாதிரி வாழ்றாங்க. உடலுக்குக் கடினமான எந்த ஒரு வேலையும் தர்றதில்லை. 

முப்பது வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம். இதெல்லாம் இப்போ ரொம்ப சாதாரண மாயிடுச்சி. தினமும் கொஞ்ச தூரம் ஓடினா போதும். நம்ம நுரையீரல் சரியா வேலை செஞ்சிடும். ரத்த ஓட்டம், சர்க்கரை எல்லாம் கட்டுக்குள்ள வந்திடும்.

பெத்தவங்க குழந்தை களுக்கு உடற் பயிற்சியோட அவசியத்தைப் புரிய வைக்கணும். குடும்பமா காலைல இந்த மாதிரி மைதானங் களுக்கு வரணும். உடலுக்கும் நல்லது, மனசுக்கும் சந்தோஷம்.
எனக்கு இப்பவரை உடம்புல ஒரு பிரச்னை இல்லை, சாப்பாட்டுலயும் ஒரு தடை இல்லை, சின்ன வயசுல எப்படிச் சாப்பிட்டனோ அதேபோல இப்பவும் சாப்பிடறேன். இதுக்கெல்லாம் காரணம் உடல்நலமும் மன நலமும் தான்.

உடல் நலத்தை உடற் பயிற்சியும் மனநலத்தை என் நண்பர்கள் வட்டமும் ஆரோக்கியமா வச்சிருக்கு, அதனால தான் சொல்றேன் தினமும் நல்லா எக்ஸர்சைஸ் பண்ணுங்க, நண்பர்களோட மனசுவிட்டு அரட்ட அடிங்க.

நோய் நொடி கிட்டயே வராது. இது தான்பா நா குடுக்குற ஹெல்த் டிப்ஸ்” என்று சொல்லி எழுந்தவர் “கடைசி ஒரு ரவுண்டு பாக்கி இருக்கு” என்று சொல்லி விட்டு ஓட ஆரம்பித்தார்.

தினமும் 4 கி.மீ நடை, 2 கி.மீ சைக்கிளிங்... 87 வயதில் கலக்கும் துறையூர் தாத்தா! | #Motivational #Thuraiyur

வீடியோ : மௌரீஷ், சி.வெற்றிவேல்.
Posted by Vikatan EMagazine on Tuesday, August 13, 2019

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close