சென்னை தேனாம் பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரசன்னா லேப்சா என்ற பெண்ணிடம், கடந்த 12-ம் தேதி பைக்கில் வந்த ஆணும் பெண்ணும் 17,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனைப் பறித்துச் சென்றனர். 
சென்னை தேனாம் பேட்டைஇது குறித்த புகாரின் பேரில் துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், விஜயகுமார் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர்கள் அருள்ராஜ், வெங்கடேஷ், தலைமைக் காவலர் பொன்வேல் மற்றும் 

காவலர் ஞானதாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் களைத் தேடி வந்தனர். சிசிடிவி கேமரா பதிவு மூலம் செல்போனைப் பறித்த வரை போலீஸார் அடையாளம் கண்டனர்.

இதை யடுத்து, செல்போனைப் பறித்த வழக்கில் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜூ, கரூரைச் சேர்ந்த சென்னைக் கல்லூரி மாணவி சுவாதி ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ராஜூ மீது பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செல்போனை வழிப்பறி செய்த வழக்கில் சுவாதி, கைது செய்யப்பட்டு முதல் தடவையாகச் சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளார்.
கல்லூரி மாணவி சுவாதி, செல்போன் வழிப்பறி வழக்கில் சிக்கியது குறித்து விசாரணை அதிகாரி களிடம் விசாரித்தோம். அப்போது சுவாதி மற்றும் ராஜூ குறித்து, முக்கிய தகவல்களை போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``தாம்பரத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் விஷுவல் கம்யூனிகேசன் பாடப்பிரிவில் 3-ம் ஆண்டு சுவாதி படித்துவருகிறார். இவரின் சொந்த ஊர் கரூர் மாவட்டம். ப்ளஸ் 2 வரை சுவாதி, கரூரில் படித்துள்ளார். 

அதன் பிறகு கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்துள்ளார். சுவாதியின் அப்பா, ஸ்கூல் பஸ் டிரைவர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சுவாதிக்கு சென்னை வாழ்க்கை வித்தியாசமாக இருந்துள்ளது. 

சுவாதி, ஊடகத் துறையில் சாதிக்க வேண்டும் என்று தான் விஷுவல் கம்யூனிகேசன் பாடப்பிரிவைத் தேர்ந்தெடு த்துள்ளார். விடுதியில் தங்கி யிருந்த சுவாதிக்கு சமூக வலை தளங்கள் மூலம் நண்பர்கள் கிடைத்தனர். 
சுவாதிக்கு சென்னை வாழ்க்கை
அந்தப் பழக்கத்தின் மூலம் அவர், சென்னையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ளார். நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்கு ஆண் நண்பர்க ளுடன் சுவாதி செல்லத் தொடங்கினார். அங்கு மது, கஞ்சா போன்ற போதைக்கு அவர் அடிமை யாகினார். 
சுவாதியின் நடவடிக்கைகள் விடுதி நிர்வாகத்து க்குத் தெரிந்ததும் அவரை அங்கிருந்து வெளியேற்றி யுள்ளனர். இதனால், சுவாதி, தனக்கு தெரிந்த நண்பர்கள், தோழிகள் வீடுகளில் தங்கி யுள்ளார்.

சுவாதிக்கு சிறு வயது முதல் டான்ஸ் என்றால் ரொம்பப் பிடிக்கும். இதனால், இரவு நேரங்களில் கேளிக்கை விடுதிகளில் டான்ஸராக இருந்துள்ளார். அதன்மூலம் கிடைத்த வருமானத்தை விருப்பம் போல வாழ்ந்துள்ளார். இந்தச் சமயத்தில் தான் சூளை மேட்டைச் சேர்ந்த ராஜூ, ப்ளஸ் 2 முடித்தபிறகு சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் படித்து விட்டு ஹோட்டல்களில் வேலை பார்த்துள்ளார். 

அப்போது தான் ராஜூக்கும் சுவாதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து கேளிக்கை விடுதிகளு க்குச் செல்வதை வாடிக்கை யாக வைத்துள்ளனர்.

ஆடம்பரமாக வாழ இருவருக்கும் பணம் தேவைப் பட்டுள்ளது. இதனால், ராஜூ, பைக் திருட்டு, செல்போன் வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கி யுள்ளார். வடபழனி காவல் நிலையத்தில் ராஜூ மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

ராஜூவுடன் சுவாதிக்கு பழக்கம் ஏற்பட்ட பிறகு இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். அதற்கு தேவையான பணத்துக்காக செல்போனை வழிப்பறி செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கிண்டிப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்த பைக்கை ராஜூ, திருடி யுள்ளார். பிறகு சுவாதியை பைக்கில் ஏற்றிக் கொண்டு ஜி.என்.செட்டிச் சாலையில் வந்துள்ளனர். 

அப்போது தான் பிரசன்னா லேப்சாவும் அவருக்குத் தெரிந்த ரோஹிணியும் நடந்து சென்ற போது செல்போனைப் பறித்துள்ளனர். 17,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை பர்மா பஜாரில் 2,500 ரூபாய்க்கு விற்றுள்ளனர். 

அந்தப் பணத்தையும் போதை வஸ்துகளை வாங்கச் செலவழித் துள்ளனர். பிரசன்னா லேப்சாவிடம் செல்போனைப் பறித்த சம்பவத்தில் எங்களுக்கு முக்கிய தடயமாக சிசிடிவி கேமரா பதிவுகள் தான் இருந்தது. 
செல்போனை வழிப்பறி செய்த சம்பவத்தில் சிசிடிவி கேமராவில் சிக்கிய ஆண், பெண்ணின் புகைப் படங்களை எல்லா காவல் நிலையங் களுக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தோம். மெரினா, எலியட் கடற்கரை பகுதிகளில் விசாரித்தோம். 
சிசிடிவி கேமராவில் சிக்கிய ஆண்
அப்போது கோடம் பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர், செல்போனைப் பறித்தவரைக் குறித்த தகவலைத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ராஜூவை யும் கல்லூரி மாணவி சுவாதியையும் வாகனச் சோதனையின் போது மடக்கிப் பிடித்தோம்" என்றார்.

தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையின்போது சுவாதி, ``நான் சென்னையில் இப்படி வாழ்வது என் குடும்பத்தினருக்குத் தெரியாது. தயவு செய்து என்னை மன்னித்து விட்டு விடுங்கள். நான் இனிமேல் தவறு செய்ய மாட்டேன்" என்று கதறி அழுதுள்ளார். ஆனால், சிசிடிவி கேமராவில் ராஜூம் சுவாதியும் சேர்ந்து செல்போனை வழிப்பறி செய்த ஆதாரம் சிக்கியதால் வேறு வழியின்றி சுவாதி மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸாரிடம் சுவாதி அளித்த வாக்கு மூலத்தில், ``எனக்கு சிறுவயது முதலே சந்தோஷமாக வாழ பிடிக்கும். தாம்பரத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்ததும் கரூரி லிருந்து சென்னை வந்தேன். என்னைக் கண்காணிக்க சென்னையில் யாரும் இல்லை. 

இதனால் என் மனம் போல வாழ விரும்பினேன். சமூக வலை தளங்களில் எனக்கு நண்பர்கள் கிடைத்தனர். அவர்கள் மூலம் தான் எனக்கு கஞ்சா, மது போன்ற போதை பழக்கம் அறிமுகமானது.
ஹோட்டல் களுக்கும் கேளிக்கை விடுதிகளு க்கும் சென்றால் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக கழிப்பேன். போதையிலேயே என்னுடைய இரவு கழிந்தது. இந்தச் சமயத்தில் தான் ஹோட்டலு க்குச் சென்ற போது ராஜூவின் பழக்கம் கிடைத்தது. 

அவர், டாட்டூ ஆர்ட்டிஸ்ட் என்பதால் என் கைகளில் டாட்டூ வரைந்து விட்டார். அதன்பிறகு நானும் டாட்டூ பிரியராகி விட்டேன். அதன்பிறகு இருவரும் நெருங்கிப் பழகினோம். 

நான் தங்கியுள்ள விடுதியின் ஒருநாள் வாடகை 1,500 ரூபாய். வீட்டி லிருந்து கல்விக் கட்டணத்து க்காக 30,000 ரூபாய் வாங்கி வந்தேன். அந்தப் பணத்தை நானும் ராஜூம் செலவழித்து விட்டோம். இதனால் தான் ராஜூவுடன் பைக்கில் சென்று செல்போனைப் பறித்தோம். 

பிறகு அதை பர்மா பஜாரில் விற்றோம். எந்தவித கஷ்டமும் இல்லாமல் பணம் கிடைத்தது. செல்போனை விற்ற பணத்தையும் போதைக் காக செல வழித்தோம்" என்று கூறியுள்ளார். ராஜூ அளித்த வாக்கு மூலத்தில் `என்னுடைய அப்பா வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். 

கோடம் பாக்கத்தில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படித்தேன். அதன் பிறகு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து விட்டு சில இடங்களில் வேலை பார்த்தேன். ஆனால் போதிய வருமானம் கிடைக்க வில்லை. 
செல்போன் திருட்டில் கல்லூரி மாணவிஇதனால் தான் பைக்கைத் திருடி விற்று அந்தப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தேன். இந்தச் சமயத்தில் தான் சுவாதி எனக்கு அறிமுகமானார். அவரும் நானும் காதலித்தோம். இருவரும் சேர்ந்து வாழ விரும்பினோம். சுவாதிக்கு என்னைப் போல நண்பர்கள் அதிகம் உள்ளனர்.

கிண்டி, வேளச்சேரி பகுதியில் தனியாகச் சென்று செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளேன். அந்த செல்போன்களை பர்மா பஜாரில் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சுவாதியை ஹோட்டல் களுக்கும் கேளிக்கை விடுதிகளு க்கும் அழைத்துச் சென்றுள்ளேன். 

சம்பவத்தன்று கையில் பணம் இல்லை. இதனால்தான் சுவாதியை பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றேன். அப்போது செல்போனை எப்படிப் பறிக்கிறேன் என்று சுவாதியிடம் பந்தா காட்டினேன். சிசிடிவி கேமராவால் சிக்கிக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் ராஜூவிடமிருந்து இரண்டு செல்போன்கள், கிண்டியில் திருடப் பட்ட ஒரு பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கை திறம்பட விசாரித்து துப்பு துலக்கிய போலீஸ் டீமுக்கு போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு களைத் தெரிவித்துள்ளனர். 

அதே நேரத்தில் சென்னையில் செல்போன் வழிப்பறி சம்பவத்தில் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட தகவல் காவல் துறையினரை மட்டுமல்ல அனைவரு க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.