பந்து விளையாடும் போது மாரடைப்பு - கல்லூரி மாணவி மரணம்

0
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு 


மருத்துவ மனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரண மடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகை யிட்டனர்.

சேலையூர் பேராசிரி யர்கள் காலனியில் வசிப்பவர் ஜெயராஜ். கீழ்ப்பாக்கத் திலுள்ள தேவாலய த்தில் பாஸ்டராக உள்ளார். 

இவரது மனைவி பள்ளி ஆசிரியையாகப் பணியாற்று கிறார். இவர்களது மகள் மஹிமா (18). 

தாம்பரத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் முதலாமாண்டு படித்து வந்தார்.

மஹிமா நேற்று மாலை 5.30 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்தார். 

அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக சக மாணவர்கள், 


கல்லூரி நிர்வாக த்தினர் மருத்துவ மனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை யிட்ட போது அவர் ஏற்கெனவே உயிரிழந்த தாகக் கூறப்பட்டது. 

அவர் விளையாடும் போதே மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்த தாக போலீஸ் தரப்பில் கூறப்பட் டுள்ளது. 

அவரது உடல் பிரேதப் பரிசோதனை க்கு பெற்றோர் ஒப்புக் கொள்ள வில்லை. 

இதனால் மஹிமாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டது.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரை யும் விளை யாட்டில் ஈடுபடும்படி கட்டாயப் படுத்துவ தாகவும், 

சுகவீனமாக இருந்த மஹிமா கட்டாயமாக விளை யாடியதே அவர் உயிரிழப்பு க்குக் காரணம் என்றும் மாணவர்கள் கல்லூரியை முற்றுகை யிட்டனர்.


பின்னர் போலீஸார் தலையிட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர். 

கல்லூரி மாணவி ஒருவர் விளையாட்டின் போது உயிரை விட்டது மாணவர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings