ஒரு காலத்தில் சேமியா பாயாசம் எனும் இனிப்பாக பயன்பட்டது. இன்று அது உப்புமா போல் காரம் சேர்த்து காலை / மாலை உணவாக பயன்படுகிறது. 

சேமியா எதிலிருந்து எப்படி உற்பத்தி செய்வது?
பயாசம் இல்லாத விருந்தே கிடையாது. எனவே நல்ல மார்க்கெட் சேமியாவுக்கு தமிழ்நாட்டில் உறுதியாய் உண்டு.

மூலப்பொருட்கள்

மக்ரோணி கோதுமை மாவு, மரவள்ளிக்கிழங்கு மாவு, தண்ணீர் ஆகியவை மூலப்பொருட்கள். கோதுமை 3 பங்கு என்றால், 1 பங்கு மரவள்ளிக்கிழங்கு மாவுடன், 

நல்ல தண்ணீர் சேர்த்து கலக்கி இயந்தரம் மூலம் மிக்ஸ் செய்து பின் ‘எக்ஸ்ரூஷன் பிரஸ்’ மூலம் சேமியா தயாரிக்கலாம்.

மொத்த திட்ட முதலீடு

சேமியா உற்பத்தி செய்வது எப்படி?

கட்டட அட்வான்ஸ் ரூ. 1 லட்சம்.

இயந்திரங்கள் : மோட்டார் பொருத்தப்பட்ட மிக்னர் மிஷின் ரூ. 125000/–

மோட்டார் பொருத்தப்பட்ட ‘எக்ஸ்ரூஷன்’ பிரஸ் ரூ. 275000/–

டி  ஹைடிரேட்டர் ரூ. 125000/–

பேக்கிங் (மோட்டருடன் இயந்திரம்) ரூ. 120000/–

டிராலி போன்ற பல சிறு தனவாடம் பாத்திரங்கள் ரூ. 75000/–

வெய்யிங் (எடை போடும் மிஷின்) ரூ. 25000/–

எலக்ட்ரிக்கல் சாமான்கள், மின் செலவு, இயந்திரங்கள் ரூ. 75000/–

ஆக மொத்தம் ரூ. 8,25,000/–

நடைமுறை மூலதனம் ரூ. 1,75,000/–

ஆக மொத்த திட்ட முதலீடு ரூ. 11,00,000/–

வேலைவாய்ப்பு

நிர்வாகி – 1, 

இயந்திரம் ஓட்டுபவர் – 2, 

உதவியாளர்கள் – 2, 

விற்பனை பணியாளர் / டிரைவர் / வாகனத்தில் செல்லும் விற்பனை பிரதிநிதி – 5 

ஆக மொத்தம் 10 பேர் வரை தேவை. 

8 மணி நேரம் பணி புரிந்தால் மாதம் 10 டன் வரை இந்த இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யலாம்.

லாப சதவீதம்

வருடம் 120 டன் உற்பத்தி செய்தால். வாடகை – ரூ. 10,000/–, 

சம்பளம் – ரூ. 10,00,00/–, 

வரிகள்/மின்சாரம் – 10,000/–, 

விளம்பரம் – ரூ. 5,000/–, 

போன் – 15,000/– 

மொத்த நிரந்தர செலவு – 1,40,000/–.

10 டன் உற்பத்தி / மாதம் செய்து விற்றால் மாத வருமானம் ரூ. 20,00,000/–

வருட நிகர லாபம் ரூ. 60,000 x 12 = 7,20,000/–, லாப சதவீதம் – 60% ஆகும்.

இயந்திரங்கள் கிடைக்கும் இடம்

சேமியா எதிலிருந்து உற்பத்தி செய்வது?

சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் அனைத்து வகை இயந்திரங்களும் தயாரிக்கின்றனர். 

மிஷினரி தயாரிப்பாளர்கள் – சிக்மா (கோவை) Ph : 96543 50454, விஸ்டம் (கோவை) – Ph : 84475 90774, 

வேல்சா (கோவை)  – 80794 52495, S.L.Machines, New Delhi -– Ph : 085879 11104 (பழைய இயந்திரங்கள் ரீ கண்டிஷன் செய்து விற்கின்றனர். பேக்கிங் இயந்திரங்கள் பாண்டிச்சேரியில் தயாரிக்கின்றனர். 

மூலப்பொருட்கள் : சென்னை, கோவை, சேலம், கள்ளகுறிச்சி, பொள்ளாச்சி, தேனி ஆகிய நகர்களில் உள்ள பெரிய மார்கெட்களில் வாங்கலாம். மொத்தமாக வாங்கினால் விலை மலிவு.

நல்ல மாவட்ட ஏஜெண்டுகள் போர்டு, ரேடியோ, டிவி விளம்பரம் செய்து, ஐ.எஸ்.ஐ. மார்க்குடன் தரமாக தயாரித்து விற்றால் நல்ல லாபம் பெறலாம்.

ஆலோசனைக்கு... 93807 55629