யூசுஃப் பதானுக்கு 5 மாதம் தடை | Yusuf Badan was banned for 5 months !

0
தடை செய்யப் பட்ட மருந்தைப் பயன் படுத்திய புகாரில், கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதானுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 5 மாதம் தடை விதித் துள்ளது. 


இந்திய கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றி ருந்தார்.

யூசுஃப் பதான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி, டெல்லியில் நடந்த உள்ளூர் அணிகளு க்கு இடையே யான டி-20 போட்டியில் பங்கேற்றார். 

போட்டிக்கு முன்னர் அவரிட மிருந்து ஊக்க மருந்து தடுப்புச் சோதனைக் காக சிறுநீர் மாதிரி பெறப்பட்டது. 

சோதனை யில், 'டெர்பூட்டலைன்' என்ற தடைசெய்யப் பட்ட வேதிப் பொருளை பதான் பயன் படுத்தியிருப்பது கண்டறி யப்பட்டது. 

இது, வழக்கமான இருமல் 'சிரப்'களில் கலந்தி ருக்கும். யூசுஃப் பதான் கவனக் குறைவாக இதைப் பயன்படுத்தி யுள்ளார். 

ஆனால், இது சர்வதேச ஊக்க மருந்து ஆணையத் தால் தடை செய்யப் பட்ட பொருளாகும்.

ஆகவே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அவர்மீது விசாரணை நடத்தியது. அப்போது யூசுஃப் பதான் தன் தரப்பு விளக்க த்தைத் தெரிவித்தார். 

அவர், கவனக் குறைவாகவே அந்த மருந்தை எடுத்துக் கொண்டார் என்பது விசாரணை யில் உறுதியானது. 

எனினும், விதிகளு க்குக் கட்டுப்பட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் யூசுப் பதானுக்கு 5 மாதம் தடை விதித்தது.

விசாரணை தொடங்கிய கடந்த ஆகஸ்ட் மாதத்தி லிருந்து யூசுஃப் பதான் தடையில் இருந்து வந்தார். 

அந்த வகையில், அவருக்கு விதிக்கப் பட்ட 5 மாத தடைக் காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. 

ஆகவே, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் யூசுஃப் பதான் விளையாட தடை இருக்காது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)