பொள்ளாச்சியில் கொய்யாப் பழத்தால் பலியான பள்ளி மாணவன் !

0
பள்ளிக் கூடத்திற்கு தான் கொண்டு சென்றிருந்த கொய்யாப் பழத்தை சக மாணவனுக்குப் பகிர்ந்தளிக்க முயற்சித்த ஓர் அப்பாவி மாணவன் உயிரிழந்த சோகம் பொள்ளாச்சி மக்களிடையே பெரும் சோகத்தை விதைத்துள்ளது.
பொள்ளாச்சியில் கொய்யாப் பழத்தால் பலியான பள்ளி மாணவன் !
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து உள்ள ஆனைமலை பகுதியைச் சர்ந்தவர் சிராஜூதீன். வாய் பேச முடியாத வரான சிராஜுதீன் அந்த பகுதியில் டைலர் கடை வைத்திருக்கிறார்.

அவரது ஒரே மகனான அன்சாத்(14), அந்தப்பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான் அன்சாத்.

முதல் பாட இடைவேளையின் போது, தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கொய்யாப் பழத்தை சாப்பிட எடுத்திருக்கிறார்.

அதில் பாதியை தன் நண்பர் களுக்கும் பகிர்ந்தளிப் பதற்காக கொய்யாப் பழத்தோடு கொண்டு வந்திருந்த சிறிய கத்தியை எடுத்து, கொய்யாப் பழத்தை தன் தொடையில் வைத்து அறுக்க முயன்றி ருக்கிறார்.

துரதிர்ஷ்ட வசமாக கொய்யப்பழம் நழுவ அந்த கத்தி அன்சாத்தின் தொடையில் சடாரென பாய்ந்தி ருக்கிறது, இதில் வெட்டுப்பட்ட அன்சாத்தின் தொடை யிலிருந்து வேகமாக ரத்தம் வெளியேறத் தொடங்கி யிருக்கிறது.
வலிதாங்க முடியாமல் அலறியிருக்கிறார் அன்சாத். இதைப் பார்த்து பதற்ற மடைந்த அன்சாத்தின் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர் களிடம் ஓடிப்போய் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த ஆசிரியர்கள் படபடப்போடு அன்சாத்தை அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அன்சாத்தை பரிசோதித்துப் பார்த்த மருத்து வர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியிருக் கிறார்கள். 

வாய்பேச முடியாத சிராஜூதீனின் ஒரே மகனான அன்சாத் சற்றும் எதிர் பாராத விதமாக பலியான சம்பவம்  அவர் குடும்பத்தை மட்டு மல்லாது அந்தப் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர் களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்து வர்கள், அன்சாத்தின் இடது தொடையில் ஆழமான காயம் ஏற்பட் டுள்ளது. இதில் இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் துண்டிக்கப் பட்டுள்ளது. 

ரத்தம் அதிக அளவில் வெளியேறி, இதயம் செயலிழந்ததால் அன்சாத் இறந்துள்ளார்' என்று தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings