ஆர்.டி.ஐ கேள்வியால் அலறிய போக்குவரத்துத் துறை !

0
கால்டாக்ஸி நிறுவனங் களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது யார் என்று வழக்கறிஞர் எஸ்.எஸ். பாலாஜி ஆர்.டி.ஐ மூலம் தமிழக போக்கு வரத்துத் துறைக்கு கேள்வி கேட்டிருந்தார்.
ஆர்.டி.ஐ கேள்வியால் அலறிய போக்குவரத்துத் துறை !
அது தொடர்பான எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று பதிலளித் துள்ளது போக்கு வரத்துத்துறை. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் சட்டப் பொறியாள ருமான 

எஸ்.எஸ். பாலாஜி, தமிழகப் போக்கு வரத்துத் துறைக்கு கடந்த சில மாதங் களுக்கு முன்பு ஆர்.டி.ஐ மூலம் சில கேள்வி களைக் கேட்டிருந்தார்.

அதில், குறிப்பாக மொபைல் ஆப்ஸ் மூலம் கால்டாக்ஸி களை முன்பதிவு செய்பவர் களுக்கு கட்டணம் யாரால் நிர்ணயிக்கப் படுகிறது. 

மேலும், சம்பந்தப் பட்ட மொபைல் ஆப்ஸ் தரம் குறித்து ஆய்வு செய்யப் பட்டுள்ளதா என்ற கேள்வி களைக் கேட்டுள்ளார்.

அதில், தமிழகப் போக்கு வரத்துத் துறை சார்பில் அளிக்கப் பட்ட பதிலில் அது தொடர்பாக எங்களிடம் எந்தவித பதிலும் இல்லை என்று குறிப்பிட் டுள்ளது.

இது குறித்து சட்டப் பொறியாளர் எஸ்.எஸ். பாலாஜி கூறுகை யில், "மத்திய தரைவழிப் போக்கு வரத்துத்துறை அமைச்சக த்திடம் கடந்த 2016-ம் ஆண்டு டாக்ஸி பாலிசி தொடர்பான குழு அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

அதில், மொபைல் ஆப்ஸ் மற்றும் கட்டணம் நிர்ணயம் குறித்த தகவல்கள் உள்ளன. அறிக்கையை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் அதைத் தமிழக அரசு கண்டு கொள்ள வில்லை.
இதனால் மொபைல் ஆப்ஸ் டாக்ஸி நிறுவன ங்கள், விருப்பம் போல கட்டண த்தை வசூலிக் கின்றனர். தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப் பட்டது.

அதை வசூலிக்கும் ஒவ்வோர் ஆட்டோக்   களிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. 

அது போலத் தான் மொபைல் ஆப்ஸ் கட்டண விவகாரத்திலும் தமிழகப் போக்கு வரத்துத்துறை அக்கறை செலுத்த வேண்டும்.

மொபைல் ஆப்ஸ் கால்டாக்ஸி நிறுவன ங்கள் ஆப்ஸ் தரத்தை ஆய்வு செய்யப் பட்டு ஸ்டாண்டர்டு டெஸ்டிங் மற்றும் குவால்டி சான்றிதழை (எஸ்.டி.ஓ.சி) பெற வேண்டும்.

ஆனால், எந்த மொபைல் கால்டாக்ஸி நிறுவனங் களின் ஆப்ஸ் தமிழகத் தில் ஆய்வு செய்யப்பட வில்லை என்பதை விளக்கும் வகையில் தான் தமிழகப் போக்கு வரத்துத் துறையின் ஆர்.டி.ஐ பதில் இருக்கிறது.

பொதுவாக, 4 மீட்டர் நீளமுள்ள வாகனங் களைப் பயன் படுத்தும் போது அதற்கு கட்டணம் கண்டிப்பாக நிர்ணயி க்கப்பட வேண்டும். 
4 மீட்டருக்கு அதிகமுள்ள வாகனங் களுக்கு இது பொருந்தாது. எனவே, மத்திய அரசின் வழி காட்டுதலின் படி தமிழகத்தில் மொபைல் ஆப்ஸ் மூலம் இயங்கும் கால்டாக்ஸி களுக்கு கட்டண த்தை நிர்ணயிக்க வேண்டும்.

அவ்வாறு நிர்ணயிக்கப் பட்டால், கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மொபைல் ஆப்ஸ் நிறுவனங் களுக்கு கடிவாளம் போட முடியும். மக்களும் குறைந்த கட்டண த்தில் பயணிக்க வழிவகை கிடைக்கும் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings