போயஸ் கார்டன் சோதனை... அரசியல் சதி !

0
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் சதி இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
போயஸ் கார்டன் சோதனை... அரசியல் சதி !
இன்று (சனிக் கிழமை) காலை தூத்துக்குடியில் செய்தி யாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி வந்து சந்தித்துச் சென்ற போது கூட அதில் அரசியல் இருப்பதாகக் கருதவில்லை. 

ஆனால், தற்போது போயஸ் கார்டனில் அம்மாவின் வீட்டில் சோதனை நடத்தப் பட்டிருக்கும் நிலையில் வருமான வரி சோதனைகள் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக உணர்கிறேன். 

வருமான வரித்துறையை யார் கையில் வைத்திருக்கி றார்களோ அவர்கள் தான் அதை ஏவி விடுகிறார்கள். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையில் உள்ள எங்கள் அணிக்கு தான் மக்கள் ஆதரவும் தொண்டர்கள் ஆதரவும் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த சோதனை கள் எல்லாம் நடத்தப் படுகிறது. 

அரசியலில் இருந்து எங்களை அழித்து விட வேண்டும், ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கில் தான் இத்தகைய ரெய்டுகள் நடை பெறுகின்றன.
வணங்கு கிறேன் என்றவர்கள் வர வில்லையே..

'அம்மா வசிக்கும் போயஸ் தோட்டத்தை நோக்கி வணங்குகிறேன்' என்று பேசிய வர்கள் யாரும் நேற்று போயஸ் தோட்டத்தில் சோதனை நடந்த போது வர வில்லையே. ஓ. பன்னீர் செல்வமோ, 

32 அமைச்சர்களோ இல்லை அவர்களைச் சார்ந்த வர்களோ யாருமே எட்டிப் பார்க்க வில்லையே. அம்மாவின் ஆன்மா மன்னிக்காது எனப்பேசியவர் களைத் தான் இப்போது அம்மாவின் ஆன்மா நிச்சயம் மன்னிக்காது.

அம்மாவின் ஆத்மா யாரை மன்னிக் காது என்பது குறித்து காலம் பதில் சொல்லும். சாதாரண மக்கள் கூட போயஸ் தோட்ட இல்ல சோதனை குறித்து கொந்தளி த்துள்ளனர். 

ஆனால், பதவியை தக்க வைத்துக் கொள்ள குரல் கொடுக்காமல் அமைதி காத்த வர்களை மக்கள் கேள்வி கேட்பார்கள். 

மக்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு காலம் தகுந்த தண்டனை தரும்.
பயனற்ற 2 லேப் டாப்களே பறிமுதல்..

ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடைபெற வில்லை. சசிகலாவின் அறையில் மட்டுமே சோதனை நடந்துள்ளது. 

அங்கும், சோதனை என்ற பெயரில் சில கடிதங் களையும் ஒரு பென் டிரைவ் மற்றும் பயனற்ற 2 லேப்டாப் களையுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். 

அதனால், அவர்க ளுக்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. சேகர் ரெட்டி வீட்டில் இருந்தது போல் நோட்டுகளும், வைரமும், தங்கமும் இங்கே இருக்கும் என எதிர் பார்த்து வந்தனர். 

ஆனால், சில மின்னணு சாதனங்களே அவர் களுக்கு கிடைத்தது.

நாங்கள் பயப்படவும் இல்லை பதறவும் இல்லை..

நான் அன்று சொன்னதைத் தான் இன்று மீண்டும் வலியுறுத்துகிறேன். இருப்பது ஒரு உயிர்; அது போவது ஒரு முறை. அதனால், நாங்கள் அஞ்ச மாட்டோம். 

1.5 கோடி தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு இருக் கிறது. அதனால், இந்த சோதனை களால் நாங்கள் பயப்படவும் இல்லை; பதறவும் இல்லை. 

எதையும் சந்திக்கும் மன ஆற்றலை எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக் கொடுத்தி ருக்கிறார். இந்த இயக்கத்தைக் காக்க எந்தவித தியாகத்தை வேண்டு மானாலும் நாங்கள் செய்வோம்.
நரசிம்ம ராவ் நிலை என்னவானது?

1996-ல் நரசிம்ம ராவ் இது போன்ற ரெய்டுகளை ஏவி விட்டார். ஆனால், அதன் பின்னர் அரசியலில் அவர் இருந்த இடமே தெரிய வில்லை. 

யாராக இருந் தாலும் அதிகார துஷ்பிரயேகம் செய்தால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும். கத்தி எடுத்த வனுக்கு கத்தியால் தான் வீழ்ச்சி. 

கத்தி மட்டுமல்ல எந்தவித ஆயுதத்தை எடுத்தாலும் அவர்களுக்கு அதன் காரண மாகவே வீழ்ச்சி ஏற்படும். இப்போது வருமானவரி சோதனையை சிலர் ஆயுதமாக எடுத்துள்ளனர். 

இதன் பின்னால் இருக்கும் அரசியல் உள்நோக்கம் குறித்து நான் சொல்லத் தேவையில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)