ஆபாச வலைதளத்தில் பக்தி பாடல்... ஹர ஹர மகாதேவ் செயலி !

0
ஆபாச வலை தளங்களை முடக்க ஹர ஹர மகாதேவ் என்ற செயலியை பனாரசைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் உருவாக்கி யுள்ளார்.
ஆபாச வலைதளத்தில் பக்தி பாடல்... ஹர ஹர மகாதேவ் செயலி !
பனாரஸில் உள்ள இந்து மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விஜயநாத் மிஸ்ரா என்ற பேராசிரியர் தான் இந்த செயலியை தனது குழுவுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.

ஆபாச வலை தளங்களை முடக்கும் இந்த செயலியின் சிறம்பம்சம் என்ன வென்றால் உங்கள் கைப்பேசியிலோ, கணினி யிலோ இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொண்டால் 

உங்கள் தொலைப்பேசியில் நீங்கள் ஆபாச வலை தளங்கள் தொடர்பான சைட்டுகளைப் பார்க்கும் போது இந்த செயலி அவற்றை முடக்கி அவற்றுக்கு பதிலாக பக்திப் பாடல்களை ஒலிக்கச் செய்கிறது.

இது குறித்து பேராசிரியர் மிஸ்ரா ஏஎன்ஐ செய்தி நிறுவனத் திடம் பேசும் போது, “ஹர ஹர மகாதேவ் செயலிக்கு அடுத்த மாதம் முதல் பல்வேறு மதங்கள் சார்ந்த பாடல் களை ஒலிக்கச் செய்ய இருக்கிறோம். 

எடுத்துக் காட்டாக முஸ்லிம் மதத்தினர் ஆபாச பக்கங்களைப் பார்க்க நேர்ந்தால் அல்லா பாடல்கள் ஒலிக்கும்.
இந்த செயலியை முதலில் உரு வாக்கும் போது முதலில் நான் எனது குழந்தைகள், எனது நோயாளிகள், எனது மாணவர் களை நினைத்து உருவாக் கினேன். 

ஆனால் தற்போது இது உலகத் துக்கே தேவை என்று நினைக் கிறேன் என்றார்.ஹர ஹர மகாதேவ் செயலி குறித்து பனாரஸ் இந்து பல்கலைகழக கண்காணிப் பாளர் கூறும் போது, 

ஹர ஹர மகாதேவ் செயலி ஒரு நல்ல முயற்சி. சமூகத்தில் சிதைந்த மன நிலையை இது கட்டுப்படுத்த உதவும் என்றார். ஹர ஹர மகாதேவ் செயலி 3,800 ஆபாச வலை தளங்கள் முடக்கும் வகை யில் உருவாக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)