சன் தொலைக் காட்சியின் தொடக்கம் - சன்குழுமம் !

0
அக்டோபர் 1992ல் ஜூ தொலைக்காட்சி (Zee Tv) இந்திய தனியார் சேட்டிலைட் தொலைக் காட்சிகளின் முன்னோடி யாக களத்திற்கு வந்தது. 


அது முதல் மாறன் சகோதரர்கள் தாங்களும் அது போல் தனியார் தொலைக் காட்சி ஆரம்பிக்க வேண்டுமென தந்தையை நச்சரிக்க தொடங்கினர்.

பத்திரிக்கை யாளர் சசிகுமார் மேனன் என்பவர்தான் முதன் முதலில் தனியார் சேட்டிலைட் சேனல் பற்றிய அறிமுகத்தை முரசொலி மாறனுக்கு சொன்னவர். 

அவர் அரபு நாடுகளில் வாழும் மலையாளி களுக்காக தினசரி நான்கு மணி நேரம் நிகழ்ச்சி தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

அதில் சுமார் அரை மணிநேரம் தமிழ் நிகழ்ச்சி களை தயாரித்து தாருங்கள்' என மாறன் சகோதரர்களை அணுகினார்.


அப்போது அவரிடம், 'எப்படி இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது' என தோண்டித் துருவி விசாரித்த

முரசொலி மாறன் அவரிமிருந்து பெற்ற தகவல் களைக் கொண்டு, சசிகுமார் மேனனுக்கே தெரியாமல் 

அவரை முந்தி சென்று, சம்பந்த பட்டவர்களிடம் பேசி நேரடி வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார்.

சசிகுமார் மேனன் 'ஏசியானெட்' என்ற மலையாளச் சேனலை ஆரம்பித்த

அதே நேரத்தில் தான் - ஏப்ரல் 1993ல் -சன் தொலைக் காட்சியை தமிழகத்தில் தோற்றுவித்தார் முரசொலி மாறன்.

அப்போது மாதமாதம் சேட்டிலைட் ஒளிப்பரப் பிற்காக செலுத்த வேண்டிய

பணம் ஒரு பெரும் சுமையாக இருந்தது. எனவே மாறன் மாற்று வழிகளை ஆராய்ந்தார்.

'சன்' சேனலை நடத்த பெரும் பணம் தேவைப் பட்ட நிலையில், அதற்காக இந்தியன் வங்கியை அணுகிய போது இணக்கமான பதில் கிடைக்க வில்லை

இதனால் கட்சி சொத்தை -ஆயிரமாயிரம் உடன் பிறப்புகள் திரட்டி தந்த நிதியை- மந்தை வெளியி லுள்ள

கும்பகோணம் சிட்டி யீனியன் வங்கியில் போட்டு, பெரியதொரு நிதி உதவி வங்கி யிடமிருந்து வாங்கப் பட்டது .


1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங் களவை, மக்களவை உறுப்பின ராகவும், அடுத்து வி.பி.சிங் ஆட்சியில்

நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாக வுமிருந்த முரசொலி மாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு

பற்பல காரியங் களை நிறைவேற்றித் தந்து நெருக்க மாக உறவு கொண்டிருந்தார்.

மேக்னம் டாட்டியா என்ற தொழிலதிபர் பல ரிசார்டு களை நடத்தி வந்தார்.

அவருக்கு உலகின் பெரும் செல்வந்தரான புருனே சுல்தான் ரஷ்ஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார்.

அதை எப்படி பயன் படுத்துவதென யோசித்து கொண்டிருந்த டாட்டியா விடம், முரசொலி மாறன் தனக்கு தரும்படி கேட்க, அவரும் தந்து விட்டார்.

இப்படியாக கிடைத்த சேட்டிலைட் ஒளிப்பரப்பு உதவியுடன் தான் மாறன் சகோதரர்கள் சன் தொலைக் காட்சி ஒளிபரப்பை சங்கடமின்றி சமாளித்தனர்.

முரசொலி வளாகத்தில் இயங்கிய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகளே சன் தொலை காட்சிக்கும் பொறுப் பேற்றனர்.

அதன்படி சன் தொலைக் காட்சியை முரசொலி மாறனை சேர்மனாக வும்,

மல்லிகா மாறன் மற்றும் தயாளு அம்மாளை இயக்குநர் களாகவும் கொண்டு ஆரம்பித்தனர்.


மேலும் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மு.க.ஸ்டாலின் போன்றோர் பங்கு தாரர்களாகப் பட்டனர்.

அப்போது கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத் திலேயே சன் தொலைகாட்சி செயல் பட்டது.

குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிகை யாளர்கள் சிலரையே கூடுதலாக 500 ரூபாய்

சம்பளம் தந்து சன் தொலைக் காட்சிக்கு பணிபுரியும் படி கட்டாயப் படுத்தினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)