சடலத்தை அடக்கம் செய்ய தயங்கிய ஊழியர்கள் - களமிறங்கிய மருத்துவர் !

அடக்கம் செய்ய மறுத்து நகராட்சி ஊழியர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், டாக்டரே கொரோனா நோயாளியை அடக்கம் செய்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
சடலத்தை அடக்கம் செய்ய தயங்கிய ஊழியர்கள்

கொரோனாவால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அலட்சியம் காணப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தவர் களின் சடலத்தை அடக்கம் செய்வதில் அலட்சியம் அதிகமாக உள்ளது. 

நிஜாமாபாத் அரசு மருத்துவ மனையில் அண்மையில் உயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆம்புலன்ஸ் இல்லை

இதே போல் மற்றொரு அரசு மருத்துவ மனையிலும் பெரும் அவலம் நடந்துள்ளது. 

பெந்தபல்லி அரசு மருத்துவனையில் இறந்தவரின் சடலத்தை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் நகராட்சியில் இருந்து டிராக்டர் கொண்டு வரப்பட்டது.
நகராட்சி ஊழியர்கள் மறுப்பு

ஆனால் கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம் என நகராட்சி ஊழியர்கள் கூறி விட்டனர். 
களமிறங்கிய மருத்துவர்

இதனால் அங்கு பணியில் இருந்த டாக்டர் ஸ்ரீராம் டிராக்டரை மயானத்திற்கு ஓட்டிச் சென்று சடலத்தை உறவினர்கள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்தார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சவக்கிடங்கு இல்லை

இது தொடர்பாக டாக்டர் ஸ்ரீராம் கூறுகையில், "இது மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு என்பதால், கோவிட் -19 பாதிக்கப் பட்டவரின் உடலை எவ்வாறு கையாள்வது என்பது மருத்துவமனை ஊழியர்களுக்கும் தெரியாது, 

மருத்துவ மனையில் ஒரு தனி பெண் மருத்துவ அதிகாரி மற்றும் சில செவிலியர்கள் இருந்தனர். 

துரதிர்ஷ்ட வசமாக, 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உடலைப் பாதுகாக்க ஒரு சவக்கிடங்கு மருத்துவ மனையில் இல்லை, இறந்த உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கூட இல்லை.

டிராக்டர் வந்தது

மருத்துவமனை பணியாளர்கள் உடலை அப்புறப்படுத்த அவசரமாக இருந்தனர் மற்றும் உறவினர்கள் கவலையுடன் இருந்தனர். 

உடலை அகற்றுவதற் கான ஏற்பாடுகளை செய்ய நான் உடனடியாக எனது மேலதிகாரிகள், காவல்துறை மற்றும் உள்ளூர் நகராட்சி அதிகாரிகளுடன் பேசினேன். 
ஆம்புலன்ஸ் இல்லாததால், நகராட்சி அதிகாரிகள் உடலை எடுத்துச் செல்ல ஒரு டிராக்டரை அனுப்பினர். இதற்கிடையில், கோவிட் -19 நெறிமுறையின்படி உடலை பேக் செய்தேன்.

நானே ஒட்டினேன்
டிராக்டரை ஓட்டுவது எனக்குத் தெரியும்

டிராக்டர் வந்தது, ஆனால் டிரைவர் உடலை எடுத்துச் செல்ல மறுத்து விட்டார். வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார். 
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து, பாதிக்கப்பட்ட நான்கு குடும்ப உறுப்பினர்களையும் இதைச் செய்யச் சொன்னேன். 

அவர்களின் உதவியுடன், உடலை டிராக்டரில் வைத்து, பின்னர் உடலை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தகன மைதானத்திற்கு கொண்டு சென்று, அவர்களின் பழக்க வழக்கங்களின்படி இறுதி சடங்குகளை செய்தேன்.

கரீம்நகரில் வார இறுதி நாட்களில் நான் பயிர்ச்செய்கை செய்வதால், ஒரு டிராக்டரை ஓட்டுவது எனக்குத் தெரியும். 
கோவிட் -19 உடலை டிராக்டரில் கொண்டு செல்வதில் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது" இவ்வாறு கூறினார்.
Tags: