கொரநாட்டு கருப்பூர் இளைஞர் பேஸ்புக்கில் அழைப்பு.. மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. இளைஞர் கைது ! #beef4life , #WeLoveBeef , # BeefForLife - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

கொரநாட்டு கருப்பூர் இளைஞர் பேஸ்புக்கில் அழைப்பு.. மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. இளைஞர் கைது ! #beef4life , #WeLoveBeef , # BeefForLife

Subscribe Via Email

"வாங்க.. எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடலாம்" என்று ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்த இளைஞரை போலீசார் கொத்தாக தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்து விட்டனர். 
கொரநாட்டு கருப்பூர் இளைஞர் பேஸ்புக்கில் அழைப்புபோன வாரம் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவர், பீஃப் சூப் குடித்து விட்டு, தான் குடித்ததை போட்டோ எடுத்து ஃபேஸ் புக்கிலும் பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திர மடைந்த அந்த பகுதியை சேர்ந்த இந்து அமைப்பினர் அவரை வீட்டுக்குள் புகுந்து அரிவாள், கத்தியால் தாக்கினர்.

நாகை இளைஞர்
தற்போது அந்த இளைஞர் சிகிச்சை யில் இருக்கிறார். இது சம்பந்தமாக போலீசும் மறு நாளே சம்பந்தப்பட்ட 4 பேரை பிடித்து கைது செய்தது. ஆனால் இந்த இளைஞருக்கு ஆதரவாக, #beef4life , #WeLoveBeef , # BeefForLife ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகின.

எழிலன்

இந்நிலையில் மற்றொரு மாட்டிறைச்சி சம்பவம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் எழிலன். இவர் தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனர் என்று சொல்லப் படுகிறது.

திருவிழா
மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க3 பிரிவுகளில் வழக்கு

மாட்டுக்கறி சாப்பிடும் திருவிழா நடைபெற உள்ளதாக இவர், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளி யிட்டிருந்தார். 

மேலும் இந்த விழாவில் எல்லாருமே பங்கேற்கலாம் என்றும் இந்துத்துவா அமைப்பு களுக்கும் இந்த திருவிழாவில் அழைப்பு விடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் எந்த தேதியில் திருவிழா என்று சொல்ல வில்லை.

இந்துக்களுக்கு எதிரான பதிவுகளையும் வெளி யிட்டிருந்த தாக இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தாலுக்கா போலீசார், தனிப்பட்ட நபர்களின் மத உணர்வு களை புண்புடுத்தி, கலவரத்தை தூண்டுதல், 

அமைதியை குலைப்பது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை யடுத்து, இன்று காலை எழிலனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இறுதியில் சிறையில் அடைத்தனர்.  - Oneindia

டிராஃபிக் ராமசாமி மிரட்டல்..

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close