உடல்நலக் குறைபாடு - மகளைத் தேடி சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம் !

தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி தேவாலயம் ஒன்றில், இரண்டு தினங்களுக்கு முன்னர், வயதான பெண்மணி ஒருவர் படுத்து உறங்கியுள்ளார். 
மகளைத் தேடி சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்

அதைக் கண்ட தேவாலய ஊழியர்கள், அவரிடம் விசாரித்துள்ளார். உடல் மிகவும் தளர்ந்த நிலையில், எழுந்து நடக்கவே சிரமப்படும் அவரின் நிலையை, 

பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவே, போலீஸார் உதவியுடன் பஞ்சாயத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி யுள்ளனர். 
விசாரணையில் அவர் தெரிவித்த தகவல்கள், அனைவரையும் உறைய வைத்தது. அவரது இறப்புக்கு பின்னர், வைகை அணையில் உள்ள பூங்காவில் பிலோமினா வேலைபார்த்து வந்துள்ளார். 

குருவிலாவின் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு, தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார் பிலோமினா. லக்சி கேரளாவின் திரூர் என்ற இடத்திலும் பிரின்ஸி கொச்சியிலும் வசித்து வந்துள்ளனர். 

வைகை அணையைத் தொடர்ந்து, மஞ்சளாறு அணையில் பிலோமினா வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

பெரியகுளத்தில் வாடகை வீடு எடுத்து தனியாகத் தங்கி யிருந்த பிலோமினாவின் உடல்நிலை சர்க்கரை நோய் காரணமாகவும் வயது மூப்பின் காரணமாகவும் மோசமடைந்துள்ளது. 
எப்படியாவது தன் மகள்களைக் காண வேண்டும் என நினைத்த பிலோமினா, கொரோனா ஊரடங்குக்கு முன்னர், கேரளா புறப்பட்டுச் சென்றுள்ளார். நேராக, கொச்சியில் உள்ள மகள் பிரின்ஸி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

சர்க்கரை நோய் காரணமாக, பிலோமினாவின் கால்களில் இருந்த புண்களைப் பார்த்த மகள் பிரின்ஸி மற்றும் அவரின் கணவர், பிலோமினா கையில் ரூ.500 மட்டும் கொடுத்து, கோட்டயம் அரசு மருத்துவமனையில் விட்டுச் சென்றுள்ளனர். 

மகள் லக்சி வீடு தெரியாத நிலையில், மீண்டும் பெரியகுளம் திரும்ப முடிவெடுத்த பிலோமினா, ஊரடங்கு காரணமாகக் கிடைக்கும் இடத்தில் தங்கி, 

கிடைத்த உணவுகளை சாப்பிட்டு, கிடைத்த வாகனத்தில் ஏறியும், நீண்ட தூரம் நடந்தும் இறுதியாகத் தமிழக கேரள எல்லையான குமுளி வந்து சேர்ந்துள்ளார்.
பிலோமினாவை மீட்ட, கேரள சுகாதாரத் துறையினர் குமுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்தனர். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
உடல்நலக் குறைபாடு

பிலோமினாவின் மகள்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணியில் கேரள போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

பெற்ற மகள்களைத் தேடி கேரளா சென்ற தாயை திருப்பி அனுப்பிய சம்பவம், எல்லையில் கொரோனா தடுப்புப் பணியில் இருந்த போலீஸார், சுகாதாரத் துறையினரை சோகத்தில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக நம்மிடையே பேசிய தேனி கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர், `பிலோமினா குறித்த தகவல்களை கேரள காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். 

விரைவில், பிலோமினாவை தேனிக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.
Tags: