கொரோனாவில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன? அதில் இந்தியா எந்த ஸ்டேஜ்?

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் சீனா பல உயிர்களை இழந்து மீண்டு வரும் நிலையில், இத்தாலியில் தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். 
கொரோனாவில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன?

அமெரிக்காவி லும் ஏராளமானோர் இறந்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகம் எடுத்துள்ளது. இதனால் பலரது மனதிலும் பல கேள்விகள் எழுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதில் நான்கு ஸ்டேஜ்/வகைகள் உள்ளன என்பது தெரியுமா? 
இதுவரை இந்தியா இந்த வைரஸ் பரவலின் இரண்டாம் ஸ்டேஜில் இருந்த நிலையில், தற்போது வேகம் எடுத்துள்ளதைப் பார்க்கும் போது மூன்றாம் ஸ்டேஜ்-க்கு சென்று விட்டதோ என்ற எண்ணம் எழுகிறது. 

அதென்ன நான்கு வகை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இப்போது கொரோனா வைரஸ் பரவலின் அந்த 4 வகைகள் குறித்து தான் விரிவாகப் பார்ப்போம்.

முதல் வகை அல்லது ஸ்டேஜ்-1
முதல் வகை அல்லது ஸ்டேஜ்-1
கொரோனா வைரஸ் பரவலின் ஸ்டேஜ்-1 என்பது இறக்குமதி செய்யப்பட்ட வழக்கு. அதாவது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர் களுக்கு கொரோனா இருப்பது தான் ஸ்டேஜ் 1. 

இத்தகையவர் களை விமான நிலையத்தில் கண்டுபிடித்து மருத்துவ மனைக்கு அப்படியே கொண்டு சென்று சிகிச்சை அளிப்பார்கள். இந்த நிலையால் பாதிப்பு அதிகம் இருக்காது.

இரண்டாம் வகை அல்லது ஸ்டேஜ்-2
இரண்டாம் வகை அல்லது ஸ்டேஜ்-2

இரண்டாம் வகை கொரோனா பரவல் தான் ஸ்டேஜ் 2. இது உள்ளூர் பரிமாற்ற நிலை ஆகும். அதாவது வெளிநாட்டில் இருந்து வந்தவரின் மூலம் அவரது உறவினர் களுக்கு கொரோனா வைரஸ் தாக்குவதாகும். 
உதாரணமாக, சீனாவில் இருந்து வந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அந்த நபர் மூலம் வீட்டில் உள்ளோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது.

மூன்றாம் வகை அல்லது ஸ்டேஜ்-3
மூன்றாம் வகை அல்லது ஸ்டேஜ்-3
மூன்றாம் வகை கொரோனா பரவல் தான் ஸ்டேஜ்-3. இது சற்று அபாகரமான வகை மற்றும் அதிர்ச்சி யளிக்கக் கூடிய வகையும் கூட. 

ஏனெனில் இந்த வகை பரவலில், வெளிநாட்டில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், கோவில் அல்லது மாலுக்கு சென்று தெரியாத பலருடன் இருக்கக்கூடும். 

இந்நிலையில் அவருக்கு அருகில் தெரியாத ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அது தான் ஸ்டேஜ்-3. 

அதாவது கொரோனா தாக்கப்பட்ட ஒருவர் மூலம் யாரென்றே தெரியாத ஒருவருக்கு வைரஸ் தாக்கினால், அது தான் ஸ்டேஜ்-3.

நான்காம் வகை அல்லது ஸ்டேஜ்-4
நான்காம் வகை அல்லது ஸ்டேஜ்-4
நான்காம் வகை கொரோனா பரவலை ஸ்டேஜ்-4 என்று கூறுவர். இதை ஆங்கிலத்தில் எபிடமிக்/பேன்டமிக் என்று அழைப்பர். 

அதாவது பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் வேறொருவருக்குப் பரவி, அவரிடமிருந்து சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு பரவி என பெருகிக் கொண்டே போகும் நிலை ஆகும். 
சீனா, இத்தாலி போன்ற நாடுகள் இந்த ஸ்டேஜ்ஜில் தான் பல உயிர்களை இழந்தது. எதிர் காலத்தில் இந்தியாவிற்கும் இந்நிலை ஏற்படலாம்.

இந்தியா எந்நிலையில் உள்ளது?
இந்தியா எந்நிலையில் உள்ளது?

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியா இரண்டாம் வகை பரவலான ஸ்டேஜ்-2-ல் தான் இருந்தது. 

ஆனால் ஓரிரு நாட்களாக ஓரிரு இடங்களில் வரும் கொரோனா வழக்குகளைப் பார்க்கும் போது, இந்தியா மூன்றாம் வகை பரவலான ஸ்டேஜ்-3-க்கு சென்று விட்டதோ என்று தான் தோன்றுகிறது.

எப்படி கட்டுப்படுத்துவது?
எப்படி கட்டுப்படுத்துவது?
கொரோனா வைரஸ் மிகவும் அபாயகரமானது. அதுவும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நிச்சயம் அனைவரும் இந்த வைரஸிற்கு அஞ்சி தான் ஆக வேண்டும். 

கண்ணுக்கு தெரியும் எதிரியைக் கூட அச்சமின்றி போராடி வெற்றி பெற முடியும். 
ஆனால் கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு நிச்சயம் அஞ்சி, நம்மை நாமே சுத்தமாகவும் சமூக தொடர்பின்றி வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கி இருக்க வேண்டியது அவசியம்.

அலட்சியத்தால் இத்தாலி சந்தித்த விபரீதம்
அலட்சியத்தால் இத்தாலி சந்தித்த விபரீதம்

இந்தியா ஸ்டேஜ்-3-க்கு சென்று விட்டால், இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். 

எனவே தான் இந்திய அரசாங்கம், ஊரடங்கு என்னும் சிறப்பான ஒரு வழியைக் கடைப்பிடிக்க மக்களை அறிவுறுத்துகிறது. 

இத்தாலி நாட்டில் தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் இறப்பதற்கு, ஆரம்பத்திலேயே இத்தாலி அரசாங்கம் கூறிய ஊரடங்கை 

அலட்சியப் படுத்தி முறையாக பின்பற்றாமல், சமூக தொடர்புடன் இருந்தது தான் காரணம் என தகவல்கள் கூறுகின்றன.

144 தடை
144 தடை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல மாநிலங்களும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 
இதனால் மக்களிடம் சமூக தொடர்பு துண்டிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பரவலை எளிதில் தடுக்க முடியும். ஆனால் இதற்கு ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.
Tags: