தலை முடி 'விக்'கிற்குள் தங்கம் கடத்திய இளைஞர் !

0
தலையில் வைத்திருந்த, 'விக்'கிற்குள் தங்கத்தை வைத்து கடத்தி வர முயன்ற கேரள இளைஞரை, கொச்சி விமான நிலைய அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.
தலை முடி 'விக்'கிற்குள் தங்கம்


கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர், நவுஷாத். இவர், வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரசு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து, விமானம் மூலம், கேரளாவின் கொச்சிக்கு வந்தார். 

விமானத்தில் இருந்து இறங்கி, வெளியே வந்து கொண்டிருந்த நவுஷாத்தின் நடவடிக்கை யில், சுங்கத்துறை அதிகாரி களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை யடுத்து, அவரிடம் விசாரணை நடத்தினர். 

'நான் சட்ட விரோதமாக எதையும் கடத்தி வரவில்லை' என, நவுஷாத் மறுத்தார். ஆனாலும் சமாதானம் அடையாத அதிகாரிகள், நவுஷாத்தை சோதனை யிட்டனர். 

அப்போது, நவுஷாத்தின் தலைமுடி சற்று வித்தியாசமாக இருப்பதை கண்டனர். அதை சோதனையிட்ட போது, அவர், 'விக்' எனப்படும் செயற்கை முடி வைத்திருப்பது தெரிந்தது. 
18 ஆண்டுக்கு பிறகு என்னுடைய முதல் லீவ் - பகிர்ந்த மோடி !
இறால் தயிர் பிரியாணி செய்முறை !

அதை விலக்கிய போது, அந்த விக்கிற்குள், 1.13 கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. 

தலையின் நடுப்பகுதியில் உள்ள முடியை மொட்டை அடித்து விட்டு, அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து, அதன் மேல் விக் வைத்து மறைத்து எடுத்து வந்ததை, அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர். 

இதை யடுத்து, நவுஷாத்திடம், விசாரணை நடந்து வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)