18 ஆண்டுக்கு பிறகு என்னுடைய முதல் லீவ் - பகிர்ந்த மோடி !

0
டிஸ்கவரி தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தாகும். இதற்கான மிக முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ். 
18 ஆண்டுக்கு பிறகு என்னுடைய முதல் லீவ்




எதாவது ஒரு மோசமான சூழ்நிலையில் ஒரு மனிதன் தனித்து விடப்பட்டால், எப்படி உயிரை காத்து அங்கிருந்து தப்பிப்பது என்பதை விளக்கும் நிகழ்ச்சியான இது பல இளைஞர் களையும் கவர்ந்தது. 
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது இந்திய பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற் றுள்ளார்.

ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, “18 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது தான் தனது முதல் விடுமுறை” என்றார்.




இதனை யடுத்து இயற்கை குறித்து பேசியவர், “இமய மலைக்கு பயணம் மேற்கொள்ளும் போது ஆன்மீகம் மட்டுமின்றி இயற்கை யின் அதிசயமும் தன்னை வியக்க வைக்க தவறுவ தில்லை” என்று கூறினார். 
பின்னர் பியர் கிரில்ஸ் ஒரு கட்டத்தில் மோடியை பார்த்து, பதற்றத்தை உணர்கிறீர் களா என்று கேட்கையில் அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, “என் வாழ்க்கையில் ஒரு போதும் பதற்றத்தை உணர்ந்தது இல்லை” என்று கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)