மேற்கு வங்கத்தில் கர்ப்பிணி மனைவி, 6 வயது சிறுவன் படுகொலை !

0
6 வயது குழந்தை, கர்ப்பிணி மனைவி, ஆசிரியரான ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர் என மூவரை ஒரு கும்பல் படுகொலை செய்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
மிருகத்தனமான கொலை


மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான சம்பவத்தில், செவ்வாய்க் கிழமை காலை ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் தங்கள் வீட்டில் அடையாளம் தெரியாத குற்றவாளி களால் படுகொலை செய்யப் பட்டனர்.

காலை 11 மணி அளவில் பந்து பிரகாஷ் பால் (35), அவரது மனைவி பியூட்டி மொண்டல் பால் (30) மற்றும் அவர்களது ஆறு வயது மகன் அங்கன் பந்து பால் ஆகியோர் வெட்டிக் கொல்லப் பட்டனர். 

பியூட்டி மொண்டல் பால், எட்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். மிருகத்தன மான இந்தக் கொலை, அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுள்ளது.

பந்து பிரகாஷ், கோசைக்ராம் சஹாபாரா தொடக்கப் பள்ளியில் பணி புரிந்த பள்ளி ஆசிரியர். மேலும், அப்பகுதியில் காப்பீட்டு முகவராகவும் இருந்துள்ளார்.

பாலின் வீட்டிலிருந்து அதிக அளவில் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 'அவர்களின் வீட்டில் இருந்து உரத்த அலறல் சத்தம் கேட்டது. 

நாங்கள் அங்கு விரைந்த போது, ​​சிலர் வீட்டை விட்டு வெளியே ஓடுவதைக் கண்டோம், 'என்று ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கூறி யுள்ளார்.
மேற்கு வங்கத்தில்


அக்கம் பக்கத்தினர் பந்து பிரகாஷ் மற்றும் அவரது மகன் அங்கன் ஆகியோரின் உடலை ஒரே அறையில் தரையில் கண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பியூட்டியின் உடல், மற்றொரு அறையில் கிடந்துள்ளது. 

இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் போது உள்ளூர் சந்தையில் இருந்து பந்து பிரகாஷ் அப்போது தான் திரும்பிய தாக போலீஸார் கூறி யுள்ளனர்.

அவர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப் பட்டதாகவும் அவற்றை அங்கே கண்டு எடுத்ததா கவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளன. எவ்வாறாயி னும், இந்த கொலைக்கு பின் உள்ள வெளிப்படையான நோக்கம் எதுவும் இது வரை கண்டு பிடிக்கப்பட வில்லை; 

இந்தப் படுகொலை சம்பவத்தில் இது வரை எவரும் கைது செய்யப்பட வில்லை. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 


ஜியாகஞ்ச் காவல் நிலைய அதிகாரிகள், பாலின் இல்லத்தி லிருந்து கொலை யாளிகள் வெளியே ஓடி வருவதைக் கண்டு தெரிவித்த அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கத் தொடங்கி யுள்ளனர்.

இந்தப் படுகொலை சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி யுள்ளது. இவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் என்பதும், பாஜக., ஆதரவாளர் என்பதும் விசாரணையை மேலும் முடுக்கி விட்டுள்ளது. 

இருப்பினும், இந்தக் கொலை சொத்துக்காக நடத்தப் பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுவதாக தகவல் வெளியாகி யுள்ளது.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)