காதுகளை கவனிங்க.. கவனமாக பேசுங்க ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

காதுகளை கவனிங்க.. கவனமாக பேசுங்க !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
அதிக அளவில் செல்போனை பயன் படுத்துகிறவர் களின் உடல்நலமும், மன நலமும் பாதிக்கப் படுகிறது. அதுபற்றி பல்வேறு விதமான ஆய்வுகள் நடந்து கொண்டிருக் கின்றன.
 காதுகளை கவனிங்க


இது தொடர்பான முக்கியமான ஆய்வு ஒன்றில், செல்போனை அதிகம் பயன்படுத்து கிறவர்களின் காதுகேட்கும் திறன் வெகுவாக பாதிக்கப் பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. 

ஆய்வில் ஈடுபட்ட காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் 18 முதல் 40 வயதுக்குட் பட்டவர் களின் காதுகேட்கும் திறனை ஆய்வு செய்தனர். ஆய்வுக் குட்பட்டவ ர்களில் 71 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களில் பெண்களும் அடக்கம்.

ஆய்விற்கு உட்படுத்தப் பட்டவர்களில் 52 சதவீதத்தினர் செல்போனில் அளவுக்கு அதிகமாகப் பேசி, தங்கள் காது கேட்கும் திறனை ஓரளவு இழந்திருந்தது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. 

செல்போனில் பேசுபவர்கள் மட்டுமின்றி, அதை பயன் படுத்தி காது கருவிகளை மாட்டிக் கொண்டு அதிக நேரம் பாட்டு கேட்பவர் களுக்கும் காது கேட்கும் திறன் குறையும் என்பது கண்டறியப் பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு உட்படுத்தப் பட்டவர்களில் பெரும் பாலானோர் வருடக் கணக்கில் செல்போனை பயன்படுத்தி யவர்கள். 

வலது காதில் வைத்து பெரும்பாலும் பேசியதால், வலது காது வலியால் பாதிக்கப் பட்டிருக்கவும் செய்கிறார்கள் என்று அந்த டாக்டர்கள் கூறுகிறார்கள்.
இறால் ஃப்ரை செய்முறை !
பெண்களின் முலைகளை வெட்டி வீசுங்கள் - கொடூர தண்டனை தெரியுமா?

ஆய்வுக்கு உள்ளானவர் களில் 51 சதவீதத்தினர் இடது காதில் வைத்து செல்போனை பயன் படுத்துகிறவர்கள். 40 சதவீத த்தினர் வலது காதில் வைத்து பேசியவர்கள். மீதி 9 சதவீதத் தினர் இரண்டு காதுகளிலும் மாறிமாறி வைத்து பேசியவர்கள்.

இவர்களில் பெரும் பகுதியினர் காது வலியாலும், காது அடைப்பி னாலும், காது சரியாகக் கேட்காமலும் பாதிக்கப் பட்டிருக் கிறார்கள். 

ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டவர் களில் சிலர் காதில் வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும் தெரிவித் துள்ளனர்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close