நீரிழிவு நோயாளிகளுக்கு தோல் அரிப்பது ஏன்?

0
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பெருகப் பெருக அது தோலில் உள்ள ஈரப்பசையை போக்கி விடும். ஈரப்பசை இழந்ததும் தோலில் அரிப்பு ஏற்படு கிறது.
எனவே பார்ப்பதற்கு தோல் சரியாகவோ, சற்று வறண்டோ காணப் படுகிறது. இதனால் தோலில் அரிப்பு எந்த இடத்தில் ஏற்படுகிறது என்று உணர முடியாமல் பல இடங் களிலும் அரிப்பு உணர்வு ஏற்படும்.
ஸ்வஸ்திகாசனம் எப்படி செய்வது?
இது சர்க்கரை நோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் கழிக்கும் உறுப்பில் இந்த அரிப்பு காணப் பட்டால் கட்டாயம் இது சர்க்கரை நோயாகவே இருக்கும். 

இதை சரி செய்ய சர்க்கரையை கட்டுப் பாட்டில் வைத்தி ருக்கவும், இடையில் தோலை அதிகம் வறண்டு போகாமல் பார்த்தக் கொள்ளவும் வேண்டும். 

அடிக்கடி சோப்பு போட்டு குளிக்கக் கூடாது. குளித்தவுடன் ஈரம் வெளியே போகாமல் இருக்க, நன்கு துடைத்து பிறகு ஏதாவது ஒரு எண்ணெய் அல்லது லிக்விட் பாரபினை தோலின் மீது தடவ வேண்டும்.

தோலில் சர்க்கரை மிகுவதால் பூஞ்சணக் கிருமிகளால் தோன்றும் படர் தாமரைகள் சர்க்கரை நோயாளிக ளிடம் அதிகம் காணப் படுகிறது. 

தோல் நிறம் மாறி யிருக்கும். செதில் செதிலாக வரும். அரிப்பு அதிகம் இருக்கும். பெரும்பாலும் கால் விரல்களு க்கு இடையேயும், 
பாதத்திலும், தொடை, இடை, இடுப்பு, மார்பகங் களுக்கு அடியேயும் காணப்படுகின்றன. இதற்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க வேண்டும். 
ஆரோக்கிய மான மனிதனிடம் ஒரு சிறிய வேனல் கொப்புளமாக மறையக் கூடிய தொற்று, சர்க்கரை நோயாளி களிடம் பலவாகப் பெருகி ராஜப் பிளவையாக மாறி மிகுந்த தொல்லை கொடுக்கும். 

ஆகவே சிறிய புண் என்றாலும் உடனே சரியான மருந்துகளை உட்கொள்ள வேண்டியது சர்க்கரை நோயாளி களுக்கு மிகவும் அவசிய மாகும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)