செல்போன் தவறி விழுந்து குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

செல்போன் தவறி விழுந்து குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
ரஷியாவின் கிரோவோ- செபேட்ஸ்க் நகரை சேர்ந்த 26 வயது இளம் பெண் எவ்ஜீனியா சுல்யாதியேவா. தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். 
செல்போன் விழுந்து மின்சாரம் பாய்ந்து பெண் பலி
இவர் நேற்று முன்தினம் குளிப்பதற் காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றார். அங்கு அவர் குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பி விட்டு, அதன் அருகில் உள்ள மின்சார பெட்டியில் தனது செல்போனுக்கு ‘சார்ஜ்’ போட்டார். 
பின்னர் அவர் குளியல் தொட்டிக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர் பாராத விதமாக ‘சார்ஜ்’ போடப்பட்டிருந்த அவரது செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்தது. 

இதில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து எவ்ஜீனியா சுல்யாதியே வாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.
இதற்கிடையே தனது மகள் குளிய லறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த எவ்ஜீனியா சுல்யாதியே வாவின் தாய் உள்ளே சென்று பார்த்தார். 
அங்கு எவ்ஜீனியா சுல்யாதியேவா குளியல் தொட்டிக்குள் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு சுல்யாதியே வாவின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause