நடைபயிற்சி ஏன் நல்லது? தெரியுமா?

0
குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் வாதம் தாக்கும் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கிறது. சர்க்கரை நோய் வரும் அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது. 
நடைபயிற்சி ஏன் நல்லது?



சில வகை புற்று நோய்கள் வரும் அபாயத்தை 20 முதல் 50 சதவீதம் வரை குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கும் வாக்கிங் உதவுகிறது. 20 நிமிடங்களில் 1,500 மீட்டர் தூரம் நடந்தால் கூட சுமார் 100 கலோரி எரிக்கப் படுகிறது. 
வேறு எந்த உடற் பயிற்சியும் செய்ய வழியில்லாதவர் களுக்கும் இயலாதவர் களுக்கும், உடல் நலனுக்காக ஏதாவது ஒன்றை செய்ய நினைப்பவர் களுக்கும் நடைபயிற்சி எளிமையானது.

நம் உடல் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாக இருப்பதற்கு உதவுகிறது. வேகமாக நடக்கும் போது தான் உடலில் எல்லா தசைகளும் ஒரே நேரத்தில் இருக்க மாகின்றன.

நடைபயிற்சி பழக ஆரம்பிக்கும் போது வலிப்பது இதனால் தான். போகப் போக இந்த வலி குறைந்து தசைகள் நெகிழ்வு பெறுகின்றன.

இடுப்புக்கு கீழ் தேவையற்ற சதையைக் குறைத்து கச்சிதமான உடல்வாகு பெற நினைப்பவர் களுக்கு இதைவிட சிறந்த உடற்பயிற்சி எதுவுமில்லை. 

இதற்கு எவ்வளவு வேகம் முடியுமோ, அவ்வளவு வேகத்தில் நடக்க வேண்டும். ஒரு நாளில் 15 நிமிடமாவது விறுவிறுப்பான நடைபயிற்சி செய்பவர் களுக்கு ஆயுளில் 3 ஆண்டுகள் கூடுகிறது. முறையாக இதை செய்பவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. 



அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் வருவதில்லை. நடைபயிற்சியால் மூட்டுவலி தொல்லை 25 சதவீதம் குறைகிறது.

முதுமை காலத்தில் ஆஸ்தியோ போரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோய் தாக்குவதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதம் தருகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. சுவாச கோளாறு உள்ளவர் களுக்கு நடை பயிற்சியை விட சிறந்த பலன் தரும் மருந்து எதுவும் இல்லை. 

எந்த உடற்பயிற்சியும் உடலுக்கு ஏராளமான ஆக்சிஜனைத் தரும். எனவே கடற்கரை, பூங்கா, திறந்தவெளி, மொட்டைமாடி என எங்கு நடைபயிற்சி செய்தாலும் சுத்தமான காற்று அதிகம் கிடைப்பதால் நுரையீரல் சீராக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் தவிர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)