கடலில் 5 நாள் உணவில்லாமல் தத்தளித்த நம்பிக்கை இழக்காத மீனவர் !

0
படகு கவிழ்ந்து நடுகடலில் தவறி விழுந்த மேற்கு வங்க மீனவர் ஒருவர், உயிரை காப்பாற்று வதற்காக மூங்கில் கட்டையை பிடித்துக் கொண்டு 5 நாட்கள் உணவு தண்ணீர் இன்றி உயிருக்கு போராடினார். 
கடலில் தத்தளித்த நம்பிக்கை இழக்காத மீனவர் !




அவருடன் வந்த நண்பர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து கட்டையை விட்டு உயிரிழந்து விட்ட நிலையில் நம்பிக்கை இழக்காத, அவர்.5 -வது நாள் வங்கதேச கப்பல் மூலம் உயிருடன் மீட்கப்பட்டார். 

அஜித் விவேகம் படத்தில் ஒரு பஞ்ச் டைலாக் சொல்வார். நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நிண்ணு அலற்னாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது" என கூறுவார். 
அப்படித் தான் நடுக்கடலில் கட்டையை மட்டும் பிடித்துக் கொண்டு தவித்த மேற்கு வங்க மீனவர் ஒருவரின் உயிரை எடுக்க எமன் ஐந்து நாள்காக பாசக்க யிற்றோடு விரட்டி வந்துள்ளார்.

உயிர் பிழைந்தார்

இந்நிலையில், மேற்க வங்க மீனவர் ஒருவர், தன்னோடு உள்ளவர்கள் எல்லாம் உயிரிழந்த போதும், தன்னால் பிழைக்க முடியும் என்று உறுதியாக நம்பி போராடியதால், ஐந்து நாளில் வங்கதேச கப்பல் மூலம் உயிர் பிழைத்துள்ளார்.

படகு கவிழ்ந்தது

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனவர் ரபீந்திரநாத் தாஸ். இவர் தனது நண்பர்கள் 14 பேருடன் கடந்த ஜூலை 4ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். கடலில் பேரலைகள் காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. 

இதனால் அவரது படகு கவிழ்ந்தது. இதனை யடுத்து எரிபொருள் கேன்களை மூங்கில் கட்டைகளுடன் இணைத்துக் கட்டி மிதவையை ரபீந்திரநாத் தயாரித்துள்ளார்.

மருமகனும் உயிரிழப்பு

இதன் மூலம் உயிரை கையில் பிடித்து போராடி வந்த மீனவர்கள் ஒவ்வொரு நாளும் நீரில் மூழ்கி உயிரிழந்த வண்ணம் இருந்தனர். 

கடைசியாக மூங்கில் கட்டையை பிடித்து கொண்ட ரபீந்திர நாத்தும், அவரது மருமகனும் 5 நாட்களாக உயிருக்காக போராடி யுள்ளார்கள். இறுதியில் அவரது மருமகனும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

வங்க கப்பல் மீட்டது
கடலில் மீனவர்




கடைசியில் ரபீந்திரநாத் மட்டும் உயிருக்கு போராடுவதை வங்க தேசத்தைச் சேர்ந்த கப்பல் மாலுமிகள் கண்டனர். அவரை உடனடியாக மீட்ட அவர்கள் கொல்கத்தா மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். இப்போது ரவீந்திரநாத் உயிருடன் இருக்கிறார்.

மருமகன் கடைசி நொடியில் சாவு

இது குறித்து ரபீந்திரநாத் கூறுகையில், படகு கவிழ்ந்ததும் நான் உடனே தண்ணீரில் குதித்தேன். 5 நாட்களாக நான் எதுவும் சாப்பிடவில்லை. மழையும் பெரும் அலையும் என்னை மிரட்டியது. மழை பெய்யும் போது அந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டேன். 
நானும் எனது மருமகனும் ஒன்றாகவே மிதந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தோம். லைப் ஜாக்கெட்டை நான் அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் மிகவும் பயந்து போயிருந்தார். 

ஒரு நாள் முழுவதும் அவரை என் தோளில் தாங்கினேன்.ஆனால் நான் காப்பாற்றப் படுவதற்கும் சில மணி நேரத்துக்கும் முன்பாக அவரும் மூழ்கி இறந்து போனார்" இவ்வாறு வேதனை யுடன் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)