ஞாயிற்றுக் கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி.
மைதானத்தில் ஓடிய பெண்




ஆனால் பலரது மனங்களையும் நியூசிலாந்து அணியே வென்றதாக கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்ல உலகின் புகழ் பெற்ற பல கிரிக்கெட் வீரர்களும் இதையே சொல்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இளம் பெண் ஒருவர் விட்டாலி அன்சென்சார்டு என்ற ஆபாச இணைய தளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து மைதானத்குள் ஒடமுயன்றார்.




பின்பு அதைக் கவனித்த காவலர்கள் அந்த பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றி னார்கள். அத்துமீறி நுழைய முயன்ற எலொனா, விட்டாலி அன்சென்சார்டு இணைய தளம் நடத்தி வருபரின் ஸ்டோரோ வெட்ஸ்கியின் தாய் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனது மகளின் இணைய தளத்திற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் அவர் மைதானத்தில் ஓட முயன்றுள்ளார், அதற்குள் காவலர்கள் அவரை தூக்கி வெளியேற்றி விட்டனர். இந்த தகவலை ஸ்டோரோவெட்ஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி யுள்ளார்.




இதே போன்று கடந்த மாதம் மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹோம் அணிகளுக் கிடையே சாம்பியன் லீக் இறுதிப் போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியின் போதும், இதே விட்டாலி அன்சென்சார்டு என்ற ஆபாச இணைய தளத்தை விளம்பரப் படுத்த, அந்த இணைய தளத்தின் பெயர் பொதிக்கப்பட்ட நீச்சல் உடையுடன் பெண் ஒருவர் மைதானத்தில் ஓடினார். இது அந்த இணைய தளத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது குறிப்பிடத் தக்கது.