SRM -ல் தொடரும் உயிரிழப்பு - இன்னொரு மாணவன் தற்கொலை !

0
காட்டாங் கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாடியில் இருந்து குதித்து மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள விவகாரம் அதிர்ச்சி நிறைந்த குழப்பத்தை பொது மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
SRM -ல்  தொடரும் உயிரிழப்பு




சென்னையை அடுத்துள்ள காட்டாங் குளத்தூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம். இந்திய ஜனநாயக கட்சி தலைவர், எம்பி பச்சமுத்து தான் இதன் சொந்தக்காரர்.
இங்கு மருத்துவம், பொறியியல் உட்பட ஏராளமான படிப்புகள் கற்பிக்கப் படுகின்றன. இதை தவிர மிகப்பெரிய ஆஸ்பத்திரியும் இந்த வளாகத்துக்கு உள்ளேயே செயல்பட்டு வருகிறது.

ஹாஸ்டல்

இங்கு படிப்பவர்களில் பெரும் பாலானோர் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான். இதில் நிறைய பேர் வசதியான வீட்டு பிள்ளைகள் தான். இதனால் இவர்கள் தங்குவதற் காக ஹாஸ்டலும் எஸ்ஆர்எம்மு க்கு உள்ளது.

10 -வது மாடி

இந்நிலையில், தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். கடந்த மாதம் அனுப்பிரியா என்ற மாணவி பிடெக் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மாணவி 10-வது மாடியில் இருந்து குதித்துதற் கொலை செய்து கொண்டார். 

அந்த பரபரப்பு அடங்கு வதற்குள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் சௌத்ரி என்ற மாணவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவன் ராகவன்




இது சம்பந்தமான என்ன நடவடிக்கை, விசாரணை நடந்து வருகிறது என்பது முழுமையாக நமக்கு தெரியாது. இந்நிலையில், திரும்பவும் ஒரு தற்கொலை அரங்கேறி உள்ளது. 
SRM -ல் இன்னொரு மாணவன் தற்கொலை
தற்கொலை செய்து கொண்ட மாணவன் பெயர் ராகவன், கன்னியாகுமரி மாவட்டம் திருவரும்பூர் பகுதியை சேர்ந்த ஶ்ரீகுமார் என்பவரது மகன் என்பது தெரிய வந்துள்ளது.

15 -வது மாடி

ஐடி பிரிவில் 4-ம் வருடம் படித்து வந்துள்ளார். மேலும் இவரது தம்பி இருவர் மற்றும் 4 நண்பர்கள் சேர்ந்து தனியாக ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். 
இன்று காலை தனது சகோதரர் காலேஜ் சென்ற பிறகு ஶ்ரீராகவ் தனியாக காலேஜுக்கு சென்றதாக கூறப்படுகிறது அப்போது, திடீரென காலேஜின் 15 வது மாடியில் இருந்து குதித்து இன்று தற்கொலை செய்து கொண் டுள்ளார்.

கடிதம்

இதை யடுத்து, அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை யிட்டனர். அப்போது, "allam and thattu" என்று எழுதி ராகவன் கையொப்ப மிட்ட கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. இது நண்பர்களின் பெயரா? காதலியின் பெயரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




விசாரணை

சனி, ஞாயிறு லீவு முடிந்து இன்று வழக்கம் போல் காலேஜ் -க்கு மாணவன் வந்த நிலையில், எதற்காக இந்த தற்கொலை என்று உடனடியாக தெரிய வில்லை. 
SRM மாணவன் தற்கொலை
ஆனால், இந்த ஒரு மாசத்தில் மட்டும் மாணவ, மாணவியரின் தற்கொலை 3-ஆக அதிகரித்துள்ளது பெற்றோர் களை, தங்கி படிக்கும் மற்ற மாணவர் களை மட்டுமல்லாமல், தமிழக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings