ஊரை காலி செய்த சீர்காழி பகுதி மக்களின் சோக கதை !

0
தண்ணீர் பஞ்சத்தால் சீர்காழி அடுத்த கடற்கரையோர கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊரையே காலி செய்து வேறு ஊருக்கு குடிபெயரும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். 
சீர்காழி பகுதி மக்களின் சோக கதை
கடும் வறட்சியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இந்த கிராமங்களு க்கு தண்ணீர் வினியோகம் முற்றிலுமாக தடை பட்டுள்ளது. 

பெருந்தோட்டம் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை பிடித்து சேமித்து வைத்தால் காவிநிறத்திற்கு மாறுவதாலும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாலும் 

அதனை பயன் படுத்தும் கிராம மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கிறார் கல்லூரி மாணவி ரேபா.
அருகே உள்ள பெருந்தோட்டம் ஏரியில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் போர்வெல் அமைத்து அதிலிருந்து 

எடுக்கப்பட்ட தண்ணீரை மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் தேக்கி பொது மக்களுக்கு வினியோகிக் கப்பட்டது. 

இந்த தண்ணீரை பிடிக்க கூட்டம் அலை மோதுவதால் அங்கு சண்டை ஏற்படுவது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது என்று வேதனை யுடன் கூறுகிறார் மஞ்சுளா.
குடிக்கவே தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில், குழந்தை களை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை இருப்பதாக வும் கிராம மக்கள் தெரிவித் துள்ளனர். 

தங்கள் பகுதிக்கு ஒரு குடிநீர் மேல்தேக்கத் தொட்டி அமைத்துத் தந்தால், தற்காலிகமாக பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 
அதே சமயம் கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும் இந்த பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)