தேனியில் பெண் ஆய்வாளர் மீது எஃப்.ஐ.ஆர் !

0
வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையம் சென்ற வழக்கறிஞரை சாதிப் பெயர் சொல்லி திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், அவமானப் படுத்தி, காவல் நிலையத்தில் உட்கார வைத்த தென்கரை பெண் ஆய்வாளர் மீதும், சிறப்பு சார்பு ஆய்வாளர் மீதும் அதே காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் போடப் பட்டிருப்பது, தேனி மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தேனியில் பெண் ஆய்வாளர் மீது எஃப்.ஐ.ஆர்


தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோக். வழக்கறிஞ ரான இவர், கடந்த 2018 -ம் ஆண்டு நவம்பர் 15 -ம் தேதி, தனது கட்சிகாரரர் களான தாமரைக் குளத்தைச் சேர்ந்த பரமன், கணேசன் மற்றும் செல்வம் ஆகியோரது வழக்கு விசாரணைக் காக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத் திற்குச் சென்றுள்ளார். 

வழக்கு சிவில் வழக்காக இருப்பதால், நீதி மன்றத்தை அணுகித் தீர்வு காண இருப்பதாக அசோக் கூறி யுள்ளார். இதனைக் கேட்ட ஆய்வாளர் மதனகலா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வேந்திரன், அசோக்குடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, அவரது வழக்கறிஞர் அடையாள அட்டை மற்றும் செல்போன் ஆகிய வற்றைப் பறித்து, சட்ட விரோத காவலில் சுமார் 45 நிமிடம் வரை காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளர். 

அது மட்டுமல்லாமல், சாதிப் பெயர் சொல்லி அவமானப் படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வாளர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப் பாளர், பெரியகுளம் துணை கண்காணிப் பாளர் இருவரிடமும் புகார் அளித்த அசோக், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
எஃப்.ஐ.ஆர்  - FIR


வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ( எஸ்.சி/ எஸ்.டி சிறப்பு) இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தர விட்டது. அதனைத் தொடர்ந்து, பெண் ஆய்வாளர் மதனகலா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வேந்திரன் ஆகிய இருவர் மீதும் 354(b), 323, 324,324(1), 506(1) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. 

பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பணிபுரியும் காவல் நிலையத் திலேயே பெண் ஆய்வாளர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பது, தேனி மாவட்ட காவல் துறை வட்டாரத் தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)