இவர்களின் தேவை பெண்களுடன் உல்லாசமாக இருப்பது மட்டும் தான் !

0
நாடாளுமன்றத் தேர்தலுக் கான பணிகளில் அரசியல் கட்சிகள் படு பிஸியாக இருக்கின்றன. ஆனால், பொள்ளாச்சி யில் பெண்களை பயன்படுத்தி, பணம் பறிக்கும் கும்பலால் பல குடும்பங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறார்கள். 200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த வழக்கின் ஒவ்வொரு தகவலும் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. 
இவர்களின் தேவை பெண்கள்


இன்றையே தேதிக்கு, சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் இல்லாத வர்கள் மிகவும் குறைவு. அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தி யிருக்கிறது கைது செய்யப் பட்டுள்ள கும்பல். இதைப் பற்றி போலீஸ் மற்றும் தற்போது கைது செய்யப் பட்டுள்ள நபர்கள், பாதிக்கப் பட்டவர்கள் என்று அனைத்துத் தரப்பிலும் விசாரித்தோம். 

`இந்தக் கும்பல் குறித்து தற்போது தான் ஊடகங்களில் வெளி வந்துள்ளன. ஊடகங் களில் வெளி வராத செய்திகள் ஏராளம். டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு, சரக்கடித்து விட்டு ஜாலியாக ஊரைச் சுற்றும் இளைஞர்கள் என்று தான் ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டி ருந்தோம். இதில், முக்கிய குற்றவாளி யாக கூறப்படும் திருநாவுக்கரசு ஃபைனான்சியர். 

எனவே, தொடக்கத்தில் இவர்களுக்கு பணத்தாசை எல்லாம் இல்லை நாளடைவில், பல பெரிய புள்ளிகளின் தொடர்பு கிடைத்துள்ளது. அதுவரை, பெண்களுடன் உல்லாசமாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைத்த வர்களின், ரூட் பணத்தை நோக்கி மாறியுள்ளது. சமூக வலை தளங்கள் மட்டுமல்ல, பெண்களைக் கவர பல்வேறு வழிகளை இவர்கள் பயன்படுத்தி யுள்ளனர். 

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் தங்களது தங்கைகள் மூலமாக மாணவி களுடன் அறிமுகம் ஆவார்கள். ஒரு சிலரின் தங்கைகள், சக மாணவிகளின் கைப்பேசி நம்பர் வரை தந்து விடுவார்கள். தற்போது, புகார் தெரிவித்துள்ள பெண்ணின், அண்ணனு க்கு, இந்த கேங்கில் சிலர் நண்பர்களாக இருந்துள்ளனர். 

முதலில், அந்த அண்ணனின் செல்போனில் இருந்து தான், சம்பந்தப்பட்ட பெண்ணின் நம்பரை எடுத்திருக் கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த கேங்கை தானாகவே தேடி வந்தப் இரையான பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில், சென்னையில் இருந்து டாக்டர் பெண்மணி ஒருவர், ஒரு நாள் என்ஜாய் செய்வதற்கு வந்து, பிறகு ஒரு வாரம் இவர்களுடன் தங்கி யுள்ளார். 
பெண்களுடன் உல்லாசமாக இருப்பது


ஆனால், இந்தக் கும்பல் ஏமாற்றிய நகை, பணம் குறித்த தகவல்கள் விவரம் வெளி வரவில்லை. ஆளுங்கட்சி பிரமுகர்களின் வாரிசு களுக்கு இவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால்தான், இந்த விஷயத்தை அவர்கள், திருநாவுக்கர சுடன் ஆஃப் செய்யப் பார்க்கிறார்கள். 

நேர்மையாக விசாரித்தால் தான், இதன் முழு விவரங்கள் தெரிய வரும்” என்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய மூன்று பேருக்கு, 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது. 

நீதிமன்றக் காவலில் இருப்பவர்களின் காவல் நீட்டிக்கப் பட்டு விட்டது. இந்த வழக்கில் வெளியில் இருக்கும் குற்றவாளி களை என்ன செய்யப் போகிறார்கள்?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings