பாகிஸ்தானை அதிர வைத்த இந்திய விமானப்படையின் தாக்குதல் !

0
பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் நிலநடுக்கம் போல அதிர்ந்தது என்று பாகிஸ்தான் மக்கள் தெரிவித் துள்ளனர். இந்தியாவின் விமானப்படை தாக்குதல் நடந்த பாலகோட் அருகே தான் கைபர் பக்துங்வா மாகாணம் அமைந் திருக்கிறது. 
இந்திய விமானப்படையின் தாக்குதல்
பாலகோட்டில் அதிகாலை 3.30-க்கு இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய சுமார் 300 தீவிரவாதி களை அழித்தது. ஒன்றரை நிமிடத்தில் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள் தீவிரவாத முகாம்கள் மீது வீசப்பட்டன. இந்த நிலையில், இந்திய நடத்திய தாக்குதல் நில நடுக்கம் போல் இருந்தது என்று கைபர் பக்துங்வா மாகாண மக்கள் தெரிவித் துள்ளனர்.


விமானப்படை தாக்குதல் சத்தம் கேட்டு கிராம மக்கள் அதிகாலை 3.30-க்கெல்லாம் எழுந்துள்ளனர். நில நடுக்கம் ஏற்பட்டு விட்டதாக அச்சம் கொண்டோம் என்று கிராம மக்கள் அச்சத்துடன் கூறி யுள்ளனர். கடந்த 1971-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரு க்குள் சென்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி யிருக்கிறது.

இதற்கிடையே எல்லை கோட்டு பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய தாக கூறுவதை இந்தியா திட்ட வட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து, 

எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் போர் விமானப்படை தாக்குதல் நடத்திய தாக பாகிஸ்தான் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
மேலும்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)