Huawei, ZTE ஸ்மார்ட்போன்களைத் தவிருங்கள் - அமெரிக்கா !

0
'உங்கள் ஸ்மார்ட் போன்களில் இருந்து தகவல்கள் திருடப்படும் வாய்ப் புள்ளது' என்று யாராவது எச்சரித்தால் நம்புவீர்களா? 
Huawei, ZTE ஸ்மார்ட்போன்களைத் தவிருங்கள் - அமெரிக்கா !
அதையே ஓர் அரசாங்கமே கூறினால் உண்மை யாக இருக்குமோ எனச் சந்தேகம் வரும். 

இப்படி ஒரு எச்சரிக்கையை செய்திருக் கிறது அமெரிக்க அரசாங்கம். அதைக் கேட்டு அமெரிக்க மக்கள் தான் நம்ப முடியாமல் இருக்கி றார்கள். 
அமெரிக்கா வின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எஃப்.பி.ஐ (FBI), சி.ஐ.ஏ (CIA) மற்றும் என்.எஸ்.ஏ (NSA) மற்றும் 

இன்னும் சில பாதுகாப்பு அமைப்புகள் சேர்ந்து ஹுவாய் மற்றும் ZTE ஸ்மார்ட் போன்களில் இருந்து தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ள தாகவும் 

எனவே, அவற்றைப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டுமென அமெரிக்க அரசிடம் தெரிவித்தி ருக்கின்றன.

புதுப்புது மாடல்களை அறிமுகப் படுத்துவது வசதிகளைத் தருவது என ஹுவாய் நிறுவன த்தின் ஸ்மார்ட் போன்கள் அமெரிக்கா வில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றன. 

சாம்சங், ஆப்பிளுக்கு அடுத்து அமெரிக்கர் களின் தேர்வாக இருப்பது ஹுவாய் தான். 
அது தவிர மொபைல் சந்தையில் ZTE நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களும் கணிசமான அளவில் விற்பனை யாகின்றன.

இப்போது, புலனாய்வுக் குழுவிற்கான செனட் குழுவிடம் குறிப்பிட்ட ஸ்மார்ட் போன்களில் சைபர் தாக்கு தல்கள் நடத்தப்படும் வாய்ப் புள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 
கிரிக்கெட்டில் 'Wagon Wheel' பற்றி தெரியுமா?
தொலைத் தொடர்பு அமைப்பில் பிற நாடுகளின் அரசாங்கம், அல்லது நிறுவனங் களின் தலையீடு நிச்சயம் ஆபத்தானது 

அதே வேளையில் ஆராயப்பட வேண்டியது என்று தெரிவித் திருக்கிறார் எஃப்.பி.ஐ இயக்குநர் க்ரிஸ் ரே. தகவல் 

பாதுகாப்புத் தொடர்பாக விழிப்பு உணர்வோடு இருக்கு மாறு நாட்டில் இருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங் களையும் கேட்டுக் கொண்டுள்ளார்

ஹுவாய் மீது இது போன்ற சர்ச்சைகள் எழுவது புதிதல்ல. ஏற்கெனவே ஹுவாயின் இதர தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்த அரசு நிறுவனங் களுக்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித் திருந்தது. 

இது தொடர்பாக விளக்கமளி த்திருக்கும் ஹுவாய் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் 170 நாடுகளில் அரசுகள் 
மற்றும் வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தாகவும், மற்ற நிறுவனங் களை விட சைபர் பாது காப்பிற்கு முக்கியத்துவம் அளிப்ப தாகவும் தெரிவி த்துள்ளது. 
கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு சிறை?
ZTE நிறுவனம் அமெரிக்க அரசின் விதிமுறை களுக்குட் பட்டே மொபைல் களைத் தயாரிப்ப தாகவும் தகவல் பாதுகாப்பு விதி முறைகளைக் கடுமை யாகக் கடை பிடிப்பதாகவும், 

எனவே, சைபர் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித் திருக்கிறது.

அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவிலும் மொபைல் சந்தையை ஆக்ரமித் திருப்பது சீன நிறுவ னங்கள் தான். 

விலை குறைவு, வசதிகள் அதிகம் போன்ற காரணங் களால் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் அரசாங்கங்கள் சீன மொபைல் களைப் பார்த்து சற்று பயப்படத் தான் செய்கின்றன. 

எங்கே தனது நாட்டின் ரகசியத் தகவல்கள் சீனா விற்குத் தெரிந்து விடுமோ என்ற பயம் தான் காரணம். 

இதே காரணத் திற்காக சீனாவும் அமெரிக்கா வைப் பார்த்து பயப்படத் தான் செய்கிறது. 

அரசாங்க த்தில் இருக்கும் உயர் பதவியில் இருப்ப வர்கள் ஆப்பிள் மொபைல் களைப் பயன் படுத்துவதை முன்னரே தடை செய்த 

சீன அரசு அவர்களை அந்த நாட்டின் நிறுவனங்கள் தயாரித்த ஸ்மார்ட் போன்களைப் பயன் படுத்துமாறு அறிவுறுத் தியது. 
லீகல் நோட்டீஸ் எப்போது அனுப்பலாம்?
இந்தியாவி லும் சற்று காலம் முன்பு ஷியோமி மொபைல்கள் மீது இதே குற்றச் சாட்டு எழுந்தது, 
விமானப்படை அதிகாரிகள் ஷியோமி ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப் பட்டது. 

தகவல்கள் கசியலாம் என்று அரசுகள் பயப்படு வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 

ஏனென்றால் பெரும் பாலான சீன மொபைல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கை யாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் சர்வர்களை சீனாவில் தான் வைத்திருக் கின்றன. 

ஆனால், வசதிகளை மேம்படுத்து வதற்காக அடிப்படை தகவல்கள் மட்டுமே சேகரிக்கப் படுகின்றன என்பது சீன நிறுவன ங்களின் வாதம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)