கிரிக்கெட்டில் 'Wagon Wheel' பற்றி தெரியுமா? உங்களுக்கு ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

கிரிக்கெட்டில் 'Wagon Wheel' பற்றி தெரியுமா? உங்களுக்கு !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
கிரிக்கெட் போட்டிகளின் போது கமெண்ட்ரியில் Wagon Wheel என்ற வார்த்தையை அவ்வப்போது கேள்விப் பட்டிருக்கீங்களா?…. லைட்டா நியாபகம் வர்ற மாதிரி இருக்குமே…. 
கிரிக்கெட்டில் 'Wagon Wheel' பற்றி தெரியுமா?சரி, Wagon Wheel என்றால் என்ன? அந்த வார்த்தை கிரிக்கெட்டில் எப்படி உருவானது, எப்போது உருவானது என்று இங்கு பார்ப்போம்.

கிரிக்கெட்டில், ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் ஷாட்கள் எந்தெந்த திசைகளில் சென்றன என்பதைப் பற்றி நாம் துல்லியமாக அறிந்து கொள்வதற்கான முறையே Wagon Wheel என்று அழைக்கப் படுகிறது. 

உதாரணத்து க்கு நம்ம ஹிட்மேன் ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தை எடுத்துக் கொள்வோமே… அவரது ஷாட்கள் மைதானம் முழுவதும் பரவலாக அடிக்கப் பட்டிருந்தாலும், பெரும்பாலும் லெக் சைடில் தான் ஆதிக்கம் செலுத்துவார். 
அவர் பேட்டிங் செய்த இடத்தில் இருந்து, அவர் அடித்த பந்துகள் எந்தெந்த திசைகளில் சென்று, எவ்வளவு தூரத்தில் தரை இறங்கியதோ, அந்த அத்தனை ஷாட்களின் திசை களையும், கிராஃபிக்ஸ் மூலம் அறிவதே Wagon Wheel எனப்படுகிறது.

இதன் மூலம், ஒரு பேட்ஸ்மேன் எந்த திசையில் அதிக முறை அடித்திருக்கிறார் என்ற விவரத்தை நம்மால் பெற முடியும். தேர்டு மேன், பாயின்ட், கவர், லாங் ஆஃப், ஃபைன் லெக், ஸ்கொயர் லெக், மிட் விக்கெட், லாங் ஆன் என மைதானத்தின் எந்த திசையில் அந்த பேட்ஸ்மேன் அதிகம் பேட்டை வீசுகிறார் என்பதை கண்டறிந்து, அடுத்த முறை அவருக்கு வேறு திசையில் பந்து வீசி, அடிக்க முடியாமல் எதிரணியால் தடுக்க முடியும். அதேசமயம், சம்பந்தப்பட்ட பேட்ஸ்மேனும் இந்த Wagon Wheel வசதி மூலம், ஷார்ட் தேர்வில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

வில்லியம் ஹென்றி பெர்கியூசன் (1880 – 1957) என்பவர் சிறந்த கிரிக்கெட் ஸ்கோரராக (ரன்கள், விக்கெட்ஸ், ஓவர்கள் என போட்டியின் போது கிரிக்கெட் தரவுகளை சேகரிப்பவர்) அறியப் பட்டவர். 
1905லிருந்து, அடுத்த 52 ஆண்டுகளு க்கு அவர் இறக்கும் வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து என இத்தனை அணிகளுக் காக 43 சுற்றுப் பயணங்களில் 208 டெஸ்ட் போட்டிகளில் ஸ்கோரராக பணி புரிந்திருக்கிறார்.

இவர் தான் முதன் முதலாக பேட்ஸ்மேன் பந்துகளை அடிக்கும் திசையை கணக்கிடும் முறையை கண்டறிந்தவர். முதலில் “ஃபெர்கியூசன்’ஸ் சார்ட்ஸ்” (Ferguson’s Charts) என்று அழைக்கப்பட்ட இந்த செயல்முறை, இப்போது தொழில் நுட்பத்தின் அதீத முன்னேற்றத்துடன் Wagon Wheel ஆக உருப்பெற்று இருக்கிறது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close