ஆர்.கே.நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல்?

0
சட்ட மன்றத்தில் ஆளுநர் புரோஹித் உரை தொடங்கு வதற்குள்ளாக தினகரனின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் முடிவில் இருக்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள். 
ஆர்.கே.நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல்?
'ஃபெரா வழக்கு களின் இறுதி விசாரணை முடிந்து விட்டது. இந்த வழக்கில் கட்டாயம் சிறைக்குச் செல்வார் தினகரன்.  அவருடைய பதவியும் பறிக்கப் பட்டு விடும்' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியை பா.ஜ.க நிர்வாகிக ளால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

டெபாசிட் பறிபோன கோபத் தில் இருக்கிறார் ஸ்டாலின். இரட்டை இலை இருந்தும் இரண்டாம் இடத்து க்குத் தள்ளப் பட்டதை அதிர்ச்சி யோடு கவனிக் கின்றனர் ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள்.

பழைய வழக்குகள்
தினகரனின் நடவடிக்கை களுக்குக் கடிவாளம் போடும் விதமாக அவர் மீதான பழைய வழக்கு களை தூசி தட்டிக் கொண்டிருக் கின்றனர் 

ஆளும் கட்சியினர். வெற்றிவேல், தங்க.தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் அரசுக்கு எதிராகப் பேசும் வார்த்தை களை எல்லாம் உளவுத் துறை அதிகாரிகள் தொகுத்து வருகி ன்றனர். 

வெற்றிவேல் மீது தேர்தல் விதிகளை மீறிய வழக்கில் ஆணைய அதிகாரிகளே பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இந்த வழக்கில் ஜாமீன் கோரி விண்ணப் பித்தார் வெற்றிவேல். இந்த மனுவும் ஜனவரி முதல் வாரத்து க்குத் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

தெரிந்த விஷயம்
நேற்று சட்ட மன்றத்தில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற பிறகு பேசிய தினகரன், ' ‘சசிகலா தலைமை யிலான 

அ.தி.மு.க.தான் உண்மை யான அ.தி.மு.க இதை நிரூபிக்கும் வகையில் தமிழக மக்கள் சார்பில் ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்து மாபெரும் தீர்ப்பை வழங்கி யுள்ளனர். 

ஜெயலலிதா விட்டுச் சென்ற பொறுப்பை நான் தொடர்வேன். தற்போது உள்ள துரோக ஆட்சியை, செயல்படாத ஆட்சியை, முதுகெலும் பில்லாத ஆட்சியை, கைக்கூலி களின் ஆட்சியை 

ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற் காகக் கிடைத்த வெற்றி தான் ஆர்.கே.நகர் தேர்தல். வெறும் சின்னமும் கட்சியும் இருந்தால் போதாது' எனக் கொதித்தார். 

அவர் இப்படிப் பேசுவார் என்பதை யும் ஆளும் கட்சியினர் அறிந்து வைத்திருந்தனர். 

அவரது பேச்சுக்களை எடப்பாடி அரசு ஒரு பொருட்டா கவே எடுத்துக் கொள்ள வில்லை என விவரித்த ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர்,

அந்நிய செலாவணி மோசடி
"தினகரன் மீதான வழக்குகள் அவரை நெருக்கிக் கொண்டிருக் கிறது. 1996ம் ஆண்டில் இங்கிலாந்து, பார்க்லே வங்கியில் 72 கோடி வைப்புத் தொகை யாக செலுத்தப் பட்டது. 

இதன் பேரில் 1996ம் ஆண்டு தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடரப் பட்டது. 

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 32 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேல் முறை யீட்டில் அது 28 கோடியாக குறைக்கப் பட்டது. 

அபராதத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன். 

இந்த வழக்கில் 6.1.2017-ம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதி மன்றம், ‘28 கோடி ரூபாய் அபராதத் தொகை விதித்தது சரிதான்' என உத்தர விட்டது.

பணம் செலுத்த பயம்
இதனை எதிர்த்து மனு மேல் மனு போட்டுக் கொண்டி ருக்கிறார் தினகரன். இந்தப் பணத்தை அவர் இன்னமும் செலுத்த வில்லை. 

தொகையை உடனடியாகக் கட்டுமாறு உச்ச நீதிமன்றம் எப்போது வேண்டு மானாலும் அறிவிக்கலாம். அப்படி பணத்தைச் செலுத்தினாலே தினகரன் குற்றவாளி என்பது நிரூபணமாகி விடும். 

எம்.எல்.ஏ பதவிக்கும் சிக்கல் வந்து சேரும். அதனால் தான் பணம் கொட்டிக் கிடந்தும் நீதிமன்றத் துக்குச் செலுத்த பயப்படு கிறார். 

அதே போல், அவர் மீதான அமலாக்கத் துறை தொடர்ந்த ஃபெரா வழக்கு களின் இறுதி விசாரணை முடிந்து விட்டது. 

இந்த வழக்கில் கட்டாயம் சிறைக்குச் செல்வார் தினகரன். மீண்டும் ஒரு இடைத் தேர்தலை ஆர்.கே.நகர் மக்கள் சந்திக்க இருக்கின்றனர் என்றார் விரிவாக.

குருமூர்த்திக்கு கோபம்
ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தினகரனுக்கு இருக்கிறது. 

என்று நேற்று பேட்டி யளித்தார் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன். சசிகலாவால் வளர்க்கப் பட்ட மணியனே இவ்வாறு கூறுவதைத் தான் தினகரன் ஆதரவாளர்கள் உற்று கவனிக் கின்றனர். 

தினகரனின் வெற்றி யால் அதிகம் பாதிக்கப் பட்டிருப்பது ஆடிட்டர் குருமூர்த்தி தான். தேர்தல் ஆணையம், பறக்கும் படை, ஆளும் அரசு என அனைத்து இயந்திரங்களும் களமிறக்கப் பட்டன. 

அதையும் மீறி வெற்றிகர மாக தினகரன் வலம் வருவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. 

இதன் விளைவாகத் தான் மிடாஸ் நிறுவன த்தில் ரெய்டு நடந்தது. இதனைத் தொடர்ந்து தினகரனைக் கைது செய்யும் வேலைகள் தீவிரமடைய உள்ளன என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)