ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளி ஓபிஎஸ் - ஸ்டாலின் | Culprit OPS - Stalin in Jayalalithaa's death ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளி ஓபிஎஸ் - ஸ்டாலின் | Culprit OPS - Stalin in Jayalalithaa's death !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓ.பன்னீர் செல்வம் என்று நான் சொல்ல வில்லை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவி த்துள்ளார். இப்போது அதை அப்போலோ மருத்துவர் ரெட்டி உறுதி செய்திரு க்கிறார் என்று ஸ்டாலின் கூறி யுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளி ஓபிஎஸ்


சென்னை தலைமைச் செயலக த்தில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை ஸ்டாலின் இன்று சந்தித்தார். ஆளுங் கட்சியினர் மேற்கொண்டு வரும் தேர்தல் முறை கேடுகள் குறித்து ஸ்டாலின் ஆதாரங் களுடன் விக்ரம் பத்ராவிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறிய தாவது:

''ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பிலும், ஆளும் கட்சியி லிருந்து பிரிந்து இன்னொரு அணியாக போட்டியிடும் வேட்பா ளரின் சார்பிலும் என்னென்ன அக்கி ரமங்கள், அநியாய ங்களை எல்லாம் செய்து கொண்டிரு க்கிறார்கள் என்பது பற்றி, இடைத் தேர்தல் சிறப்பு அதிகாரி யாக நியமிக்கப் பட்டுள்ள விக்ரம்வை சந்தித்து, திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை வழங்கி யிருக்கிறோம். அதுமட்டு மல்ல, 

நேற்றைய தினம் வாக்காள ர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதிமுகவி னரை கையும் களவுமாக பிடித்து, 11 புகார் களை கொடுத்தி ருந்தோம். ஏறக்குறைய 100 கோடி ரூபாய் பணம் ஆளும் கட்சியின் சார்பிலும், தினகரன் அணி சார்பிலும் வழங்க ப்பட்டு இருக்கிறது. அது குறித்தும் புகார் அளித்து ள்ளோம்.

குறிப்பாக, ரூ.2 கோடி வைத்திருந்த ஒரு அதிமுக வைச் சேர்ந்த நபரைப் பிடித்து காவல் துறை அதிகா ரிகளிடம் ஒப்படை த்தால், அவரிடம் இருந்தது சில ஆயிரங்கள் மட்டும் தான் என்று காவல் துறை சார்பில் செய்தி வெளி யாகிறது. இதை யெல்லாம் காவல் துறை உயர திகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிரு க்கிறார்கள். 

இது குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரி களுக்கு தகவல் அளித்தால், அவர்கள் கண்டும், காணா மலும் இருக்கி றார்கள். இப்படிப் பட்ட அராஜகங் களை எல்லாம் மீறி, நேற்றைய தினம் மட்டும் ரூ.20 கோடி வைத்திருந்த அதிமுக வினரை, திமுக தோழர்கள் பிடித்து ஒப்படை த்தாலும், அவர்களை எல்லாம் விட்டு விடு கிறார்கள்.

இப்படி, அதிமுக ஆட்சி யின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து, அதேபோல தினகரனும் சேர்ந்து ஜனநாயக த்தை கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக் கிறார்கள். நேற்றைய தினம் பட்டப் பகலில் ஒவ்வொரு வாக்கா ளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக் கிறார்கள் என்று பகிரங்க மாக நான் குற்றம் சாட்டுகிறேன்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி யின் மேற் பார்வையில் தான் இது நடந்துள்ளது. அது மட்டுமல்ல, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், போக்கு வரத்துத் துறை அமைச்சர் உள்பட பல அமைச் சர்களின் மேற் பார்வையில் வெளிப் படை யாகவே பண விநியோகம் நடந்துள்ளது. இது குறித்து, காவல் துறை ஆணையரை பலமுறை தொடர்பு கொண்டு நாங்கள் புகார் அளித்தோம். 

தொடர்ந்து, தொலைக் காட்சிகளில் இது பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இப்படி நடக்கிறதா என்று அவர் எங்களி டத்தில் கேள்வி எழுப்புகிறார். அதே போல, தமிழக தேர்தல் ஆணையர் லக்கானியை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் தொலைபேசியை எடுக்க வில்லை. எனவே, தேர்தல் ஆணையமும், காவல் துறையும் இப்படிப் பட்ட அக்கிரமங் களுக்கு எல்லாம் திட்டமிட்டு உடந்தை யாக இருக்கி றார்கள் 

என்பதை எல்லாம் ஆதாரங் களோடு நாங்கள் இன்று புகார் மனுவாக தந்திருக்  கிறோம். எங்கெல்லாம் பண விநியோகம் நடைபெற்ற இடங்களில் திமுக தோழர்கள் செல்போனில் வீடியோ எடுத்து ள்ளார்கள். அந்த வீடியோக் களையும் ஒரு பென் ட்ரைவில் ஆதார மாக இணைத்து புகார் மனு அளித்து ள்ளோம்.

ஏற்கெனவே ஒருமுறை, 89 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடை பெற்றது வருமான வரித்துறை சோதனை யில் ஆதாரத் துடன் கிடைத் ததால், தேர்தல் ரத்து செய்யப் பட்டது. அதில், தேர்தல் ஆணை யமும், காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் கிடைத்த தைரியத்தில் தான் இப்போது நடைபெறும் இடைத் தேர்தலில் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் அளவுக்கு பட்டவர்த் தனமாக, 

பட்டப் பகலில் பண விநியோகம் செய்திரு க்கிறார்கள். அதை யெல்லாம் ஆதாரங் களுடன் புகார் அளித் துள்ளோம். அந்த ஆதாரங் களின் அடிப்படை யில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, இனி வரும் காலத்தில் அவர்கள் தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி அவர்களிடம் அழுத்தம் திருத்த மாக தெரிவி த்துள்ளோம்.

அதிமுக வின் வெற்றியை தடுக்க திமுக இப்படி செயல் படுவதாக தம்பிதுரை தெரிவித்து இருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் படுத்து, உருண்டு புரண்டாலும், கோடி கோடியாக பணம் கொடு த்தாலும், பல குட்டிக் கரணங் களை அவர்கள் போட்டாலும், அதிமுக வால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. 

எனவே, தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அதிகாரி ளிடம் கோர வில்லை, அதிமுக வினர் செய்து வரும் தேர்தல் முறை கேடுகள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித் துள்ளோம். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பணம் கொடுக்கப் படுவதாக கூறப்படு கிறது. அது உண்மை யாக இருக்கலாம். 

காரணம், ஏற்கெனவே ஒரு முறை 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததால் தேர்தல் ரத்து செய்யப் பட்டது போல, டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை இடைத் தேர்தலில் ஏற்பட்டு இருப்பதால், தோல்வி யில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ண த்தில் கூட இப்படி செய்ய லாம்.


டிடிவி தினகரன் தரப்பில் வழங்கப் பட்ட 30 லட்சம் ரூபாய் பணம் அதிமுக வினரால் கைப்பற்றப் பட்டு இருப்ப தாக சொல்லப் படுகிறது. யாராக இருந் தாலும், பணம் கொடுப்பது ஆதாரங் களுடன் பிடிபட்டால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணைய த்தின் பொறுப்பு. எனவே தான் நாங்கள் ஆதாரங் களுடன் புகார் அளித்து ள்ளோம்.

அதிமுக வேட்டி யணிந்து திமுகவினர் பணம் கொடுப்பதாக கூறுகி றார்கள். அது உண்மை யாக இருந்தால், அதற்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் பிடித்து, தண்டனை வாங்கிக் கொடுக் கட்டும். முன்பு சொன்ன தற்கு நேர் மாறாக, மருத்துவ மனையில் அனுமதிக்க ப்படும் போது ஜெயலலிதா ஆபத்தான நிலையில் இருந்தார் என்று இப்போது அப்போலோ மருத்துவ மனை தலைவர் தெரிவித்து இருக்கிறார். 

இது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் விளக்க மளிக்க வேண்டும். காரணம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓ.பன்னீர் செல்வம் என்று நான் சொல்ல வில்லை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவித் துள்ளார். 

இப்போது அதை அப்போலோ மருத்துவர் ரெட்டி உறுதி செய்திருக்கிறார். எனவே, ஜெயலலிதா மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஒ.பன்னீர் செல்வம் தான்'' என்று ஸ்டாலின் கூறினார்.
ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளி ஓபிஎஸ் - ஸ்டாலின் | Culprit OPS - Stalin in Jayalalithaa's death ! ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளி ஓபிஎஸ் - ஸ்டாலின் | Culprit OPS - Stalin in Jayalalithaa's death ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 3/24/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚