ஜெயலலிதா மரணம்... 15 பேருக்கு நோட்டீஸ் !





ஜெயலலிதா மரணம்... 15 பேருக்கு நோட்டீஸ் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக, கோவையில் பேட்டியளித்த நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித் துள்ளார்.
ஜெயலலிதா மரணம்... 15 பேருக்கு நோட்டீஸ் !
ஜெயலலிதா உயிரிழந்து ஓர் ஆண்டு ஆக உள்ள நிலையில், அவர் மரணம் தொடர்பான மர்ம முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப் படாமல் உள்ளன. 

இதனிடையே ஜெயலலிதா மரணம் தொடர் பாக, ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு செப்டம்பர் 29-ம் தேதி அரசாணை வெளியிட்டது. 

இந்த விசாரணை ஆணையம், ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விடப்பட் டுள்ளது. 

இந்த விசாரணை ஆணையத்துக்காக, சென்னை எழிலக வளாகத்தில் அறை ஒதுக்கப் பட்டுள்ளது. 

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இயங்கும் குழு, சென்னை போயஸ் கார்டனில் இன்று விசாரணையைத் தொடங்கி யுள்ளது. 

ஆனால் நீதிபதி ஆறுமுகசாமி, இன்றைய விசாரணை யில் கலந்து கொள்ள வில்லை. ஆறுமுக சாமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்து விட்டதால், அவர் புதன் கிழமை க்குப் பிறகே சென்னை வருவார் என்று கூறப்படு கிறது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் கேட்டு, 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக, நீதிபதி ஆறுமுகசாமி கோவையில் தெரிவித்துள்ளார். 

அதற்குரிய விளக்கம் வந்த பிறகே, முதல் கட்ட விசாரணை தொடங்கப் படும் என்றும் ஆறுமுகசாமி குறிப்பிட் டுள்ளார். அதன்படி, ஜெயலலிதாவின் பாது காவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)