அம்ருதா ஜெயலலிதா மகளா...டிஎன்ஏ சோதனை !

0
பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் ஜெயலலிதா வின் மகள் என்றும், அதை நிருபிக்க தனக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள உத்தர விட வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.  
இது குறித்து ராமந்திரா பல்கலைக் கழகத்தின் தடய அறிவியல் துறை தலைவர் சம்பத்குமாரை தொடர்பு கொண்ட போது அவர் கூறிய தாவது: 
டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வது எளிதான காரியம் தான். ஒரு வார காலத்து க்குள் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளை 100 சதவீதம் துல்லிய மாக கண்டறிய முடியும். 

குறிப்பிட்ட நபரின் பெற்றோர் இறந்தி ருக்கும் பட்சத்தில், இருவரின் உடல் களையும் புதைப் பதற்கு பதிலாக எரித்திருந்தால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள் வதற்கான சாத்தியம் இல்லை. 

ஜெயலலிதா வின் உடல் மரப்பெட்டி யில் வைத்து புதைக்கப் பட்டுள்ளது. அதனால் அவரின் உடலில் உள்ள செல்கள் 10 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும். 

அவ்வாறு செல்கள் அழிந்து போயிருந் தாலும் எலும்புகள் அப்படியே இருக்கும். 
இறந்தவரின் எலும்பு, நகம், நரம்பு, செல் என ஏதேனும் ஒரு பகுதி டிஎன்ஏ பரிசோதனை க்கு வழங்க மறுக்கப் படும் பட்சத்தில், நீதிமன்ற த்தில் முறை யிட்டு அதற்கு அனுமதி பெற வேண்டி இருக்கும். 
பொதுவாக முதல்வர் போன்ற முக்கிய பதவியில் உள்ளவர்கள், விஐபிக்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மரணம் அடையும் போது, 

அது தொடர்பாக பின்னர் விசாரணை ஏதும் நடத்தப் படலாம் என்பதால் இறந்த வரின் ரத்தம், நகம், எலும்பு மஜ்ஜை, நரம்பு, 

திசுக்கள் ஆகிய வற்றில் ஏதேனும் ஒன்று மருத்துவ மனை களில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்படும். 
அது போல், அப்போலோ மருத்துவ மனையிலும் ஜெயலலிதா வின் செல்கள் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கும். 
டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள் வதற்காக ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் ஏதுவும் இல்லை. 

அப்போலோ மருத்துவ மனையில் பாதுகாக்கப் பட்டுள்ள ஜெயலலிதா வின் செல்கள் மூலமா கவே குறிப்பிட்ட பெண் ஜெயலலிதாவின் மகளா என்பதை கண்டறிந்து விடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)