தஞ்சை மாவட்ட த்தில் அதிகபட்சமாக 91 மி.மீ. மழை | Tanjore district has a maximum of 91m.m Rain !

0
தமிழகத் தில் வடகிழக்குப் பருவமழை தீவிர மடைந்ததை தொடர்ந்து தஞ்சை மாவட்ட த்தின் பல்வேறு பகுதி களில் மழை பெய்து வருகிறது.


நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டியது. நேற்று 2-வது நாளாகவும் மழை பெய்தது.

காலை 10 மணிக்கு பின்னர் மழை இன்றி வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

மதியத் துக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. இதே போல மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

தஞ்சை மாவட்ட த்தில் அதிக பட்சமாக கும்பகோணத் தில் 91 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மழை காரணமாக தஞ்சை மாவட்ட த்தில் பள்ளிக ளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்ப ட்டிருந்தது.

தஞ்சை மாவட்டத் தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகி றார்கள்.

இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயி களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் நடவுப் பணிகள் பாதிக்க ப்பட்டன.

தஞ்சை மாவட்டத் தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம் பட்டினம் 49.5, கும்பகோணம் 91, பாபநாசம் 59, தஞ்சாவூர் 21, திருவையாறு 29, திருக்காட்டுப்பள்ளி 18.2,

வல்லம் 39, கல்லணை 7.2, அய்யம்பேட்டை 46, திருவிடை மருதூர் 74.4, மஞ்சளாறு 79.8,

நெய்வாசல் தென்பாதி 34.6, பூதலூர் 15.6, வெட்டிக்காடு 25, ஈச்சன்விடுதி 10.2, ஒரத்தநாடு 30.7, 

மதுக்கூர் 55.8, பட்டுக்கோட்டை 47.4, பேராவூரணி 14, அணைக்கரை 84.6, குருங்குளம் 15.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)