தெர்மக்கோல் மூலம் செல்லூர் ராஜு மழையைத் தடுப்பார்.... ஸ்டாலின் !

0
மழை வெள்ளத்தை செல்லூர் ராஜு தெர்மக் கோல் மூலம் தடுப்பாரோ... என்று தான் எண்ணத் தோன்றுகிறது' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெர்மக்கோல் மூலம் செல்லூர் ராஜு மழையைத் தடுப்பார்....  ஸ்டாலின் !
திருச்சி குண்டூரில், தி.மு.க சார்பில் தூர் வாரப் பட்ட சந்தூரணி குளத்தை மு.க. ஸ்டாலின் பார்வை யிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நீர் நிலைகள் குடிமராமத்துப் பணிகளில் முறை கேடுகள் நடை பெற்றுள்ளன. 

நீர் நிலைகள் தூர் வாரப்பட வில்லை. கஜானாவை தூர்வாரும் பணியில் தான் அரசு இறங்கி யுள்ளது. தமிழக அரசு சார்பில் தூர்வாரப் பட்ட ஏரி, குளங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட அரசு தயாரா? 

மழை பெய்யாத சேலம் மாவட் டத்தில், மழை பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்தி யுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் எப்போது வைத் தாலும் அதைச் சந்திக்க தி.மு.க தயாராக உள்ளது. 

மழை வெள்ளத்தை தெர்மக்கோல் மூலம் செல்லூர் ராஜு தடுப்பாரோ... என்றுதான் எண்ணத் தோன்று கிறது' என்று தெரிவி த்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings