ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் - பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி !

0
‘இன்டர்நெட்டில் ஜி மெயில், பேஸ்புக் மற்றும் இதர இணையத் தளங்க ளில் நான் இன்று மட்டும் ஐநூறு டாலர் சம்பாதித்தேன், 
ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் - பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி !

ஆயிரம் டாலர் சம்பாதி த்தேன்’ என படங் களுடன் விளம்பரம் வருவதைப் பார்த்திருக் கலாம். 

ஆன்லைன் மணி டிரேடிங், ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் என்ற பெயரில் கவர்ச்சி கரமான வெப்சைட்டு களில் அரபிகளும், 
வெள்ளைக் காரர்களும், பணத்தை கம்ப் யூட்டரில் சம்பாதித்துக் கொண்டி ருப்பதாக படங்களுடன் வெளி யிட்டிருப் பார்கள். 

இவர்க ளெல்லாம் வெவ்வேறு நாடு களின் பணத்தை வாங்கி விற்றதில் லாபம் அடைந்த வர்களாகக் காட்டிக் கொண்ட வர்கள். 

இவர்க ளின் அடுத்த கட்ட கொள்ளை தான் பைனரி ஆப்ஷன் எனும் ஆன்லைன் பண பரிவர்த் தனை. 
இந்த பணப் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் லாபத்தில் 80% நமக்கும் 20% கம்பெனி க்கும் என பகிர்ந் தளிப்பதாக வும் 

அது சராசரி யாக நமது முதலீட்டில் மாதத் திற்கு 30% குறை யாமல் இருக்கு மென்றும் நம்ப வைத்து, 

காசுள்ள வனிடமும், பேராசைக் காரனிடமும் பணத்தைக் கறப்பதே இவர்கள் வேலை.

பைனரி ஆப்ஷன் என்பதை முழுதும் விவரிக்கா விட்டாலும் சுருங்கக் கூறின் இப்படிச் சொல்ல லாம்.
உலகம் முழுக்க பண பரிவர்த் தனைகள் அதாவது ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் 

இன்னொரு நாட்டின் கரன்சி யினை ஏதோ ஒரு காரணத் திற்கு வாங்கு கிறார்கள் அல்லது விற்கி றார்கள். 

அதை வாங்கும் போதும், விற்கும் போதும் என்ன விலைக்கு போகும் என்பதை தீர்மா னிப்பது கடைசி யாய் இருக்கும் இரு எண்கள். 

எடுத்துக் காட்டாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என்பது பேச்சு வழக்கில் நாம் சொல்வது. 
அதனை பண பரிவர்த் தனையின் போது 65.12864 என்றோ 64.98765 என்றோ இருக்கும். 

இந்த கடைசி இரு எண்கள் லட்சணக் கணக் கான டாலர்கள் பரிவர்த் தனையின் போது பெரும் வித்தி யாசத்தை உண்டா க்கும். 

இந்த கடைசி இரு எண்களை மட்டும் வைத்து கிட்டத் தட்ட சூதாடுதலே “பைனரி ஆப்ஷன்” எனும் முறை. 

இதை சூதாட்டம் என ஒத்துக் கொள்ள மாட் டார்கள், இந்த துறை யில் இருப்போர். 

இதே பைனரி ஆப்ஷன் வங்கி களிலும், முறைப் படுத்தப் பட்ட பண பரிவர்த் தனைகளி லும் அர்த்தம் வேறு. 

அங்கு முறை யான வகைப் படுத்தப் பட்ட பல நாட்டு கரன்சி களை வாங் கினால் இந்த மதிப்பிற்கு எடுத்துக் கொள்வோம், 

விற்றால் இந்த விலைக்கு விற்போம் என எழுதியே வைத்தி ருப்பார்கள். பெரும் பாலான விமான நிலையங் களிலும், வங்கி களிலும் காணலாம்.
இந்த பைனரி டிரேடிங் ஒரு மணி நேரத்தி ற்கு உள்ளா கவோ, ஒரு நாள் முழுக்க காத்தி ருந்து தீர்மானிப்ப தாகவோ இருக்க லாம். 

நாம் அல்லது நமது சார்பாக விளை யாடுபவன் ஒரு குறிப்பிட்ட கரன்சியோ, அல்லது 

கம்பெனி களின் ஸ்டாக்கோ குறிப்பிட்ட அளவு விலை ஏறும் அல்லது குறையும் எனச் சொல்லி குறிப்பிட்ட தொகையை வைக்க லாம். 

நாம் சொன்னபடி நடந்தால் போட்ட பணம் இரட்டிப் பாகும். இல்லை யெனில் முழுப் பணமும் போகும். 

பணம் இரட்டிப் பானால் 80% நமக்கும், 20% தளத்தை நடத்து பவனு க்கும் செல்லும். 
பணம் போனால், தளம் நடத்து பவனுக்கு 20%ம், மீத முள்ளது நம்மைப் போல பணம் கட்டி சரியாகச் 

சொன்ன வனுக்கும் போய்ச் சேரும் என்பது இம்மாதிரி யான தளத்தை நடத்து பவர்கள் சொல்லும் விளக்கம். 

இதோடு நிறுத்த மாட்டார்கள். எங்கள் டிரேடர்கள் எல்லாம் பல ஆண்டுகள் இதில் பழம் தின்று கொட்டை போட்ட வர்கள். 

உங்கள் பணம் 30%க்கு குறை யாமல் வளர்வது உறுதி, அதுக்கு நாங்க கியாரண்ட்டி என முகத்தைக் கூட காட்டடாத ஒருவன் சொல்வான்.

இப்படிப் பட்ட வெப் சைட்டுகள், இவர் களின் செயல் பாடுகள் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும். 

இவர் களின் வெப் சைட்டில் எல்லாமே பக்காவாக இருக்கும். சந்தேகம் வராத அளவுக்கு வடி வமைத்தி ருப்பார்கள். 

கஸ்டமர் சப்போர்ட் என்ற பெயரில் இமெயில் ஐடி கொடுத்தி ருப்பார்கள். லைவ் சாட் இருக்கும். 
இது நீங்கள் பணம் போடும் வரையி லும் சிறப்பாக செயல் படும். அதன் பின்னர் ஒரு பயலும் பதில் சொல்ல மாட்டான்.

இன்டர் நேஷனல் மணி லாண்டரிங் ( அதாவது தவறான வழியில் வந்த பணத்தை யெல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டோம், 

முறை யாக சம்பாதித்த பணமாக இருக்க வேண்டும் ) நடக்கவிட மாட்டோம் என்ற பீலா வெல்லாம் விட்டு நமது எல்லா தகவல் களையும் கறந்து விடு வார்கள்.

கறக்கும் தகவல் களில், குறிப்பாய் அடையாளம் காணும் சான்றிதழ் களில் முக்கிய மானது நமது பாஸ்போர்ட். 

வெளி நாட்டில் வாழ்ப வராக இருந்தால் அந்த நாடு வழங்கிய ஐடி கார்டுகள், 

(இந்தியா வில் இன்னும் நாங்கள் வர்த்தகம் தொடங்க வில்லை என்பார்கள் எல்லாப் பயல்களும்) 

தொலைபேசி எண் என கிட்டத் தட்ட நம்மைப் பற்றிய எல்லா விபரங் களையும் வாங்கிக் கொள் வார்கள்.

நமக்கு சராசரி யாக 30 முதல் 40% வருமானம் மாதா மாதம் கிடைக்கும் என நம்மைச் சேர்த்து விடுபவர் மூலம் நமக்குச் சொல் வார்கள். 

லாபத்தை நீங்கள் எப்போது வேண்டு மானாலும் எடுக்க லாம் எனவும் அவர் களின் தளத்தில் எழுதி இருக்கும்.
சேர்த்து விடுபவர் இப்படிப் பட்ட தளத்தின் விள ம்பரங்கள் மூலம் கவரப்பட்டு நேரடியாக சேர்ந்த வராக இருப்பார், 

அல்லது யார் மூலமாகவோ கேள்விப் பட்டு அதிக வருமான த்திற்கு ஆசைப் பட்டு சேர்ந்த வராக இருப்பார். 

இதில் நல்ல லாபம் கிடைக் கிறதே, நாம் பெறப்போகும் பணத்தை நண்பர் களும் பெறட்டுமே என்ற நல்லெண் ணத்தில் சேர்த்து விடுவார்கள்.

குறைந்த பட்ச முதலீடு 100 டாலர் முதல் 250 டாலர் மட்டுமே என இணையத் தளத்து க்குத் தகுந்தாற் போல எழுதி இருக்கும். 

அது, நீங்கள் பணம் போடக் கூடிய ஆளா என்பதை அளக்கும் கருவி. 

அந்தப் பணத்தை போட்டதும் அதன் பின்னர் உங்களு க்கென ஒரு தனி ட்ரேடர் இருப்ப தாகவும், 

உங்கள் பணத்தை அவர் தான் தினமும் நம் சார்பாக இணை யத்தில் ஆன் லைனில் பண வர்த்தகம் செய்வார் எனவும் சொல் வார்கள். 

ஒரு ஸ்கைப் ஐடியைக் கொடுத்து இவரிடம் தொடர்பு கொள் ளுங்கள் எனச் சொல்லி விடு வார்கள்.

100 டாலர் முதலீட்டில் உங்க ளுக்கு 30 டாலர் மாதம் லாபம் கிடைக்கும். 1000 டாலர் 
முதலீடு செய்தால் 300 டாலர் மாதம் கிடைக்குமே என ஆசை காட்டு வார்கள்.

உங்கள் கணக்கில் லாகின் செய்து பார்த் தால், தினமும் டிரேடிங் செய்த தாகவும், தினமும் இத்தனை லாபம் ஈட்டிய தாகவும், 

சில நேரம் நஷ்டம் அடைந்த தாகவும், மொத்த த்தில் உங்க ளுக்கு 30% நிகர லாபம் மாதக் கணக்கில்

வந்து சேர்ந்து விட்ட தாகவும் கணினித் திரையில் காண் பிப்பார்கள். 1000 டாலர் போட்டோம், 300 டாலர் வந்திருக்கு. 

ஆஹா என மகிழ்ச்சி யாய் இருக்கும் நேரத்தில் உங்க ளுக்கு இவன் பணத்தை நமக்குக் கொடுப்பானா என்ற லாஜிக்கல் சந்தேகம் வரும். 

அதை உடனே செயல் படுத்திப் பார்க்க 300 டாலரை எடுக்க ‘வித்ட்ராவல்’ அப்ளை செய்வீர்கள். 
உடனே உங்களுக் கெனவே அவதாரம் எடுத்த அந்த ட்ரேடர் ஸ்கைப்பில் உங்க ளுடன் பேச வேண்டும் என்பான்.

மிக மரியாதையாக, பணிவாக எப்போது உங்களைத் தொடர்பு கொள்ள லாம் என்றெல் லாம் கேட்பான். 

‘நாம பணத்தை எடுக்க அப்ளை செஞ்சா, நம்ம பேங்க் அக்கவுண்ட் டுக்குப் பணம் தானே வரணும், 

இவன் ஏன் நம்மகிட்ட பேசுறான்’ என லேசாக, மிக லேசாக ஒரு பொறி தட்டி னாலும், ‘இவன்ட்ட தான நாம பேசணும்,

 பேசிடு வோம்’ என ‘நமக்கு நாமே’ திட்ட த்தில் சமாதான மாகி, அவனிடம் பேசத் தொடங் குவோம்.

ஊர் நிலவரம், மழை தண்ணி உண்டா, குடும்பம் குட்டி என்பன போன்ற விஷயங் களுக்கிடை யில் நாம் பேசும் பேச்சை வைத்து 

இன்னும் இவனை எத்தனை ஆயிரம் அல்லது நூறு டாலர் களை முதலீடு என்ற பெயரில் கறக்க லாம் எனக் கணக்கு போட்டுக் கொண்டி ருப்பான்.

உரையா டலின் கடைசி வரை ‘வித்ட்ராவல் அப்ளை செய்தி ருந்தேனே, என்னாச்சி?’ 

என கேட்கக் கூச்சப்ப டும் அளவு நெருக்க மான நண்பன் போலப் பேசிக் கொண்டி ருப்பான்.

கொஞ்சம் தைரிய த்தை வர வழைத்து அவனிடம் ‘ வித்ட்ரா வலுக்கு அப்ளை செய்தி ருந்தேனே, இன்னும் வர வில்லையே’ 

எனக் கேட்டால், ‘பாத்தீங்களா… சொல்ல மறந்து போச்சி. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்டு மெண்டுக்கு சொல்லி இருக்கிறேன்.

வரும். ஆனால், உங்க பணம் உங்க கணக்கில் எவ்வளவு மீதி இருக்கோ அதுக்குத் தான் நான் டிரேடிங் செய்வேன். 

இப்ப 300 டாலரை எடுத்து ட்டீங்க ன்னா நான் 1000 டாலருக்குத் தான் டிரேடிங் செய்ய முடியும்.
பணம் அடிக்கடி எடுக்குற ஆளுக்கு நாங்க ரெகுலரா டிரேடிங் செய்ற தில்லை’ எனச் சொல்லி ‘உங்க ளுக்கு என்ன, பணம் வருதான்னு செக் செய்யணும், 

அவ்வளவு தான?’ எனக் கேட்டு விட்டு, ‘50 டாலரை அனுப்பி வைக் கிறேன் போதுமா?’ 

என உங்கள் கணக் கிற்கு 50 டாலரை அனுப்பி வைப்பான். நாம் முதலீடு செய்தி ருப்பது 1000 டாலராக இருக்கும்.

அடுத்த வலையை வீசுவான். ‘நீங்கள் இனிமேல் போடும் பணத்திற்கு நாங்கள் எங்கள் தரப்பி லிருந்து 

50% கூடுத லாகப் போட்டு (போனஸ்) ஆன்லைன் பண வியாபாரம் செய்வோம். 

அதாவது கூடுத லாக போடும் பணம் உங்களுடைய தில்லை. 

ஆனால் அதில் வரும் லாபம் முற்றி லும் உங்களு டையதே’ என ஆசை காட்ட ஆரம்பி ப்பான். 

அதாவது நீங்கள் 5000 டாலர் போட்டால் ‘கம்பெனி’ 2500 டாலரை கணக்கில் போடும். ஆக, 7500 டாலருக்கு உங்க ளுக்கு 30% வருமானம் கிடைக்கும். 

அசல் அப்படியே இருக்கும், டிரேடிங் கமிஷன் மட்டும் ஏறிக் கொண்டே இருக்கும். 

ஆக, அசலும், வட்டியும் சேர்ந்து கிட்டத் தட்ட 3 மாதத்தி ற்குள் உங்கள் பணம் 100%க்கு வளர்ந்து நிற்கும் – எங்கே? கம்ப்யூட்டர் திரையில் தான்.

இப்போது உங்களு க்குள் அபாய மணி வேகமாக அடிக்க ஆரம்பி க்கும். ‘இப்ப நாம போட்ட பணத்த முதல்ல எடுத்தி ருவோம். 

லாபமா வந்த பணத்தை வச்சி ஆன்லைன் பண வியாபாரம் செய்வோம்’ என நினைத்து ‘வித்ட்ராவல்’ அப்ளை செய்வீர்கள். 

முதலில் 50 டாலர் வந்த வேகத்தில் இந்தப் பணம் வராது. மயான அமைதி நிலவும். 
நமக்கென அவதாரம் எடுத்த வனிடம் ஸ்கைப்பில் பேச ஆரம்பி ப்பீர்கள். 

இதுவரை நம்மை அழைத்து பேசிக் கொண்டி ருந்தவன், இனி நாம் அழைத் தால் மட்டும் பதில் சொல்ல ஆரம் பிப்பான். 

மனசுக்குள், ‘மச்சி கடன் வாங்க இவ்ளோ அலைய றோமேன்னு நினைக் காத, 

அவன் கடனை நம்ம கிட்ட இருந்து வாங்கும் போது அலைவான் பாரு’ என்ற வசன மெல்லாம் ஓடும்.

பொதுவாய் பணம் நம் கணக்கு க்கு வர 3 முதல் 4 நாட்கள் எடுக்க லாம் எனச் சொல்வான். 

அதற்குள் அடுத்த சனி ஞாயிறு வந்து விடும். எனவே அடுத்து ஒரு 3 நாள் என 10 நாள் ஓடி இருக்கும். 

மீண்டும் அவனைத் தொடர்பு கொண்டு ‘என்னய்யா ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இப்ப ஏன் சார் எடுக்கு றீங்க? 

ஒரு அருமை யான திட்டம் வருது, அதுல போட்டீங் கன்னா ஒரே மாசத்துல 80% லாபம் கிடைக்கும், 
அதுக்குப் பிறகு எடுக்க லாமே’ என ஆரம்பி ப்பான். ‘நீங்கள் முழுத் தொகையை யும் போட வேண்டாம், 

அது ஹை ரிஸ்க் என்பதால் நாங்களே பாதிப் பாதியாக பிரித்து வழக்க மான மணி டிரேடிங்கில் 50% பணமும்,

கோல்ட் இன்வெஸ்ட் மெண்ட்டில் 50% எனவும் இடுவோம். 
ஒண்ணு போச்சின்னா கூட அசலுக்கு மோச மில்லை’ எனத் திட்டம் வகுத்து கொடுத்து நம் சபலத்தைக் கூட் டுவான்.

‘எப்பய்யா என் பணத்தை நான் எடுக்குறது?’ என நீங்கள் ‘அப்பன் மவனே சிங்கம்டா’ என லேசாக குரலுடைந்து கேட்க ஆரம்பித் திருப்பீர்கள். 

‘இந்த கோல்ட் டிரேடிங் முடியட்டும், அப்புற மென்ன, நீங்கள் பெரிய பணக்காரர் தான்’ 

என்ற அளவில் பணம் போட்ட வனை உசுப்பேற்றி விடுவான்.

‘இன்னும் ஒரு மாதம் தங்கத்துல போட்ட காசப்பத்தி மூச் காட்டக் கூடாது. டெய்லி கம்ப்யூட்டர்ல பாத்துக் கங்க. 

மணி ட்ரெடிங் க்குல போட்ட காசு வளர்றத பாத்துக் கலாம். ஆனா, தங்கத் துல போட்டது ஒரு மாசம் கழிச்சு தான் பாக்க முடியும். 

அடுத்த ஒரு மாசம் பாத்துட்டே இருந்தா உங்க மணி டிரேடிங் பணமே கிட்டத் தட்ட டபுள் ஆகி இருக்கும்.’

அதாகப் பட்டது, தங்க த்துல போட்ட காசு போனாக் கூட நம்ம காசு தப்பிச் சிருச்சி என்ற எண்ணம் நமக்கு வரும். 

தங்கத்தில் போட்ட பணத்தின் ரிசல்ட் வரும், சர்வ நிச்சய மாய் நீங்கள் போட்ட பணம் டபுள் ஆகி இருக்கும். 

ஆக, முதலும், வரு மானமும் சேர்ந்து கிட்டத் தட்ட போட்ட பணத்தை விட 3 மடங்கு ஆகி இருக்கும்.

‘அப்பாடா, இனி அசலை எடுத்துட்டு லாபமா வந்ததுல மீதிக் கதையை பாது காப்பாக ஓட்டுவோம்’ 

என மீண்டும் வித்ட்ராவல் அப்ளை செய்தால், நீங்கள் ஏமாற்றப் பட்டு விட்டது தெரியும்.
அப்ளை செய்த அன்று கிட்டத் தட்ட 5000 டாலரில் இருந்த உங்க முதலீடு, மறுநாள் டிரேடிங்கில், 

15 அல்லது 20 நிமிடங் களில் எல்லாப் பணத் தையும் உங்கள் ட்ரேடர் ஆன்லைன் டிரேடிங்கில் இழந்து விட்டதாக உங்கள் கம்யுட்டர் திரை சொல்லும். 

கொஞ்சம் பிபி இல்லாத ஆளாய் இருந்தால் பிழைத் தான். இல்லை யெனில் சஹஸ்ர நாமம் போல ‘என்ன, 

சேர் மார்கெட்டுல போட்ட ஒரு லட்சம் போச்சா?’ எனக் கேட்டக் கொண்டே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார வேண்டியது தான்.

எந்த முட்டா ளாவது முதல் தடவை போட்டு நஷ்டம் அடைந் ததும் அடுத்த டுத்து முழுப் பணத்தையும் தொலைப் பானா? 

ஆனால், அப்படித் தொலைத் ததாக கணக்கு காண்பித்து விட்டால், அவன் உங்களை மோசடி செய்ய வில்லை, 

ஆன்லைன் வியா பாரத்தில் நேர்ந்த இழப்பு என்றாகி விடும். ‘இந்த ரிஸ்க் இதில் இருக்கே. 

அது தெரிந்து தானே போட்டீர்கள்’ என நம்மைத் திருப்பிக் கேட்க வசதியாக இப்படி கம்ப்யூட்டர் திரையில் காண்பிப் பார்கள்.

உண்மை யில் இந்த பைனரி டிரேடிங் காரர்கள் செய்வது, அவர் களின் வலைத் தளத்தில் 

தினமும் வியாபாரம் நடப்ப தாகக் காட்டும் ஒரு மென் பொருளை வைத்துக் கொள்வது மட்டுமே. 

பணத்தை நம்மிடம் இருந்து வசூலிக்க ஒரு வங்கிக் கணக்கு. அது சைப்ரஸிலொ, அல்லது பிரிட்டனிலோ, 

அல்லது ஏதேனும் ஒரு அத்துவான காட்டிலோ இருக்கும். நம்மிடம் பணம் பிடுங்க முடிந்த வரை நம்மிடம் தொடர்பில் இருப் பார்கள். 

இந்த வியாபாரம் நடக்கும் காலத்தில் சம்பந்தப் பட்ட ஒரு பயலும் தன்னு டைய புகைப் படத்தைக் கூட போட்டு க் கொள்ள மாட்டான். 

அவர்களின் ‘கம்பெனி’ யின் படத்தை மட்டுமே ப்ரொபைல் படமாக வைத்துக் கொள் வார்கள்.

பணம் போன பின்னர் நீங்கள் ஸ்கைப்பில் அவனை 10 முறை அழைத் தால் ஒரு முறை வந்து ‘இன்ஷுரன்ஸ் ஆட் களிடம் பேசிக் கொண்டி ருக்கிறோம், 

மார்கெட் கிராஷ் ஆகிடுச்சி’ என்பார்கள். ‘எவண்டா ஆன்லைன் மணி ட்ரேடிங் குக்கு இன்ஷுரன்ஸ் தாரான்?’ எனக் கேட்டால் 

அதற்கும் ஒரு மொக்கை பதில் வைத்தி ருப்பார்கள். நீங்கள் மெயில் மேல் மெயில் போட்டு ‘ஒழுங்கா நான் போட்ட பணத்தை தரியா, 
இல்லை இன்டர்போலில் கம்ப்ளெய்ண்ட் செய்யட்டுமா?’ என நாம் எழுதும் மெயில் களை 
நமக்குத் தெரியாத ஏதோ ஒரு நாட்டில் இருந்து சிரித்துக் கொண்டே படித்துக் கொண்டி ருப்பான்.

பேராசை பெரு நஷ்டம் என்பதை சில லட்சங் களை இழந்து கற்றுக் கொண்டி ருப்பீர்கள்.

இப்படிப் பணத்தை இழந்த வர்களின் சோகக் கதையை இங்கே (http://www.forexpeacearmy.com/ ) படிக்கலாம். 

இதைப் பார்த்த பிறகாவது ‘ஆன்லைன் மணி ட்ரேடிங்க்கில் பணம் கொட்டு தாம்ல’ என விட்டில் பூச்சி களாய் விழாமல் இருக்க லாம்.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)