ஆஸ்துமாவை கட்டுப்படுத்த பாசாசனா ! #Pasasana

ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நோயாகும். இது நுரையீரலில் உள்ள சுவாசப் பாதையில் உண்டாகும் அலர்ஜி தொடர்ந்து கவனிக்கப் படாமல் இருந்தால் சுவாச அழற்சியாக மாறி பின் நாளடைவில் ஆஸ்துமா வந்து விடும். 
ஆஸ்துமாவை கட்டுப்படுத்த பாசாசனா ! #Pasasana
ஆஸ்துமா குழந்தைகளிலிருந்து பெரியவ்ர்களை வரை தாக்கும். இன்னவென காரணம் சொல்ல முடியாது, மரபு சார்ந்து வரலாம். 

பருவ நிலை மாற்றம், குளிர்கால கிருமிகளின் தொற்று, மாசுபடிந்த காற்று, புகை என இவை யெல்லாம் ஆஸ்துமாவை அதிகப்படுத்தும். 
இதனை குணப்படுத்த முடியா விட்டாலும், அதனை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க எளிய வழி, யோகா. 

எல்லாவித பிரச்சனை களிலிருந்தும் விடுபடச் செய்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி யோகா. 

ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க நிறைய ஆசனங்கள் உள்ளன. அவற்றில் பாசாசனாவும் உண்டு.

பாசாசனா : 
பாச என்றால் சமஸ்கிருதத்தில் சுருக்கு என்று பெயர். உடலை சுருக்கி குறுகி அமர்ந்து செய்யப்படும் இந்த ஆசனத்திற்கு பாசாசனம் என்று பெயர் வந்துள்ளது. இதனை எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 
செய்முறை : 

முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். நேராக நின்று ஆழ்ந்து மூசை இழுத்து விடுங்கள். பின்னர் கீழே குத்தவைத்து அமர வேண்டும். 

முதுகு நேராக நிமிர்ந்த படி இருக்க வேண்டும். இப்போது உடலை இடது பக்கம் திருகுங்கள். 
ஆஸ்துமாவை கட்டுப்படுத்த பாசாசனா ! #Pasasana
வலது கையை கையை இடது முட்டியில் படுமாறு வளைத்து பின்பக்கம் கொண்டு செல்ல வேண்டும். பின்னது இடது கையையும் பின்பக்கம் கொண்டு

சென்று இரு உள்ளங்கைகளையும் கொக்கி போல பிணைத்துக் கொள்ளுங்கள். தலையே இடது பக்கம் மேலே பார்த்தவாறு வைக்க வேண்டும். 

ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். பின்னர் மெதுவாக கைகளை தளர்த்து இயல்பு நிலைக்கு வரலாம். இது போல வலது பக்கம் செய்ய வேண்டும். 
பலன்கள் : 
முதுகுத்தண்டு நன்றாக நெகிழ்ச்சி பெறும். தோள் பட்டைகளில் இறுக்கம் குறைந்து புத்துணர்வு கிடைக்கும். 

மார்புக் கூடு விரிவடையும். சுவாசப் பாதை சுத்தமாகும். ஜீரண சக்தி அதிகமாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
Tags: