ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !

உலகில் இன்றைக்கு அதிவிரைவு சாலைகளுக்கு முன் மாதிரியாகவும், முன்னோடியாகவும் கருதப்படுவது ஜெர்மனியிலுள்ள ஆட்டோபான் அதிவிரைவு நெடுஞ்சாலை கட்டமைப்பு குறிப்பிடப்படுகிறது.
ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !
இந்த ஆட்டோபான் நெடுஞ்சாலை கட்டமைப்பு அமையப்பெறுவதில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் பங்கும் முக்கியமானது. 

ராணுவ தளவாடங்களையும், படை வீரர்களையும் நாட்டின் எல்லைகளுக்கு விரைவாக அனுப்புவதுற்கு இந்த சாலைகள் அவசியம் என ஹிட்லர் கருதி இந்த சாலைகளை அமைப்பதில் தீவிரம் காட்டினா்ர. 

இந்த சாலையில் வேகக்கட்டுப்பாடு கிடையாது. அதே நேரத்தில், பராமரிப்பு பணிகள், மோசமான சீதோஷ்ண நிலைகளின் போது குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் வேகக்கட்டுபாடு தற்காலிகமாக அமல்படுத்தப்படும். 

இந்த சாலையில் பயணிக்க 130 கிமீ வேகம் பரிந்துரைக்கப்பட்ட வேகமாக கடைபிடிக்கப்படுகிறது.

அந்த சாலையை பற்றிய தெரியாதவர்கள் கூட இந்த செய்தியை படித்த பின்னர் அந்த சாலையில் ஒரு முறையேனும் செல்ல வேண்டும் என்ற உந்துதல் எழும். 

அதே வேளை, ஆட்டோபான் சாலையில் காரை ஓட்டுவதற்கு முன் அந்த சாலையில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளையும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். 

மேலும், அந்த சாலையில் கடைபிடிக்கப்படும் சில வித்தியாசமான, விந்தையான விதி முறைகள்.
பலமான கண்காணிப்பு
ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !
அமெரிக்காவை போன்றே ஆட்டோபான் சாலைகளில் செல்லும் வாகனங் களை கண்காணிப்ப தற்காக சிறப்பு போலீஸ் படை பிரிவு செயல்படுகிறது. 

விதி மீறுவோர்களை எளிதாக கண்டறிந்து அபராதம் மற்றும் இன்ன பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.

மெதுவாக போனால்...

ஆட்டோபான் சாலையில் மெதுவாக செல்வதும் விதியை மீறிய செயலாக பார்க்கப் படுகிறது.

நடுவிரல் காட்டினால்
ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !
ஆட்டோபான் சாலையில் வரும் சில டிரைவர்கள் கற்ற வித்தையும் போட்டுக் காட்டி விட்டு செல்வர். அதில் கோபமடைந்து சிலர் நடுவிரலை காட்டினால் 500 யூரோ அபராதம் அழ வேண்டி யிருக்கும்.

டெயில்கேட் செய்தால்

டெயில்கேட் எனப்படும் மிக நெருக்கமாக பின் தொடர்வதும் அங்கு சாலை விதி மீறலாக பாவிக்கப் படுகிறது. 

முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதுவது போன்று பின் தொடர்ந்தால் 250 யூரோ அபராதம் விதிக்கப் படுகிறது.

ஓவர்டேக்
ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !
ஆட்டோபான் சாலையில் வலதுபுறம் ஓவர்டேக் செய்வது தடை செய்யப் பட்டுள்ளது. இடது புறத்தில் மட்டுமே ஓவர்டேக் செய்து செல்ல வேண்டும்.

டயர்கள்

காரின் அதிகபட்ச வேகத்துக்கு தக்க டயர்கள் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். 

ஒரு வேளை, பனிக்கால டயர்கள் பொருத்தி யிருந்தால் அது குறித்த போலீசாரிடம் அனுமதி பெற்று, அது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் வைன்ட் ஷீல்டுகளில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். 

அப்படி இல்லையெனில், டிரைவிங் லைசென்ஸ் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.
இதுவும் குற்றமே
ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !
இடது தடத்தில் பின்னால் வேகமாக வரும் வாகனங் களுக்கு வழி கொடுக்காமல் ஆமை வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். 

அதே போன்று, பின்னால் வரும் வாகனங்கள் தொடர்ந்து ஹாரன் அடித்தாலோ அல்லது ஃப்ளாஷ் லைட்டை ஒளிர செய்து கொண்டே இருந்தாலும் அபராதம் உண்டு.

பெட்ரோல் இல்லாட்டியும்...

ஆட்டோபான் சாலையில் பெட்ரோல் இல்லாமல் வாகனங்கள் நிற்பதும் சட்டத்தை மீறும் செயலாக கருதப் படுகிறது. 

அவசர வழித்தடத்தில் கூட நிறுத்தக் கூடாது. அவசரத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது மிக தீவிரமாக கடை பிடிக்கப் படுகிறது.

பிரேக் பிடித்தாலும்
ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !
திடீரென பிரேக் பிடிக்கும் போதும், சந்திப்புகளில் காரின் வேகத்தை முழுவது மாக குறைக்கும் போதும் 

ஹசார்டு எச்சரிக்கை விளக்குகளை கண்டிப்பாக ஒளிர விட வேண்டும். வழித்தடம் மாறும்போதும் ஹசார்டு லைட்டுகளை போட வேண்டும்.
ஓய்வு

ஆட்டோபான் சாலையில் செல்வோர் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப் படுகின்றனர். 

இதற்காக, ஆட்டோபான் சாலைகளின் நெடுகிலும் புத்துணர்ச்சி மையங்கள், ஓட்டல்கள் போன்றவை அமைக்கப் பட்டுள்ளன.
Tags: